அந்த வகையில் ஒரு உழவு இயந்திர செம்மண் 27-07-2017 அன்று ரூபா 8500 க்கு கொள்வனவு செய்யப்பட்டது. 15-09-2017 அன்று ஒரு லான்மாஸ்ர் இயற்கை பசளை ரூபா 1300 க்கு கொள்வனவு செய்யப்ட்டது. 22-09-2017 அன்று 50 மரநடுகை பை ரூபா 1000 க்கு கொள்வனவு செய்யப்பட்டது.
இடவசதிபோதாதமையினால் அனைத்து கன்றுகளும் மாணவர்களின் உதவியுடன் பைகளிலேயே வைக்கப்பட்டுள்ளது. விவசாய திணைக்களத்தினால் விற்பனை செய்யப்ட்ட கத்தரிச் செடி ரூபா 500 க்கு கொள்வனவு செய்யப்ட்டது.
மாணவர்களிடம் இருந்து உரப்பை பெறப்பட்டு கத்தரி, வெண்டி, கறிமிளகாய், பயிற்றை, கீரை, தக்காளி, என்ான 86 பைகளில் பயிரிடப்பட்டுள்ளது.
13 பிடி கீரை பெறப்பட்டு மாணவர்களின் மதிய உணவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இப்பயிர்செய்கையானது ஆசிரியர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்ட்டு வருகின்றது.