School Logo

Principal

Mrs.Justin Prensly Christabel

(SLPS - 1)

 

Prize day Book 2018

இணையவழி நிகழ்நிலை வினாக்களின் தொகுப்பு
இது மாணவர்களின் பயற்சியை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

 

Online Question Bank

User Rating: 5 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
 

பாடசாலை வரலாறு

1876

சங்கைக்குரிய திருக்குடும்ப கன்னியர்களால் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சி மேம்பாட்டுக்காக ஸ்தாபிக்கப்பட்டது.

1945

2ம் உலக யூத்த காலத்தின் போது மாணவர்வரவின்மை பெரும் வீழ்ச்சியாக இருந்தது. தரம் 10 வரை இருந்த வகுப்புகளின் தன்மை மாறி தரம் 5 வரை தரம் இறக்கப்பட்டது.

1962

அரசாங்கப் பாடசாலையாக பிரகடனம் செய்யப்பட்டது.

1974

திரு A.ஜோண்பிள்ளை அவர்கள் அதிபராகவிருந்த காலத்தில் 2 ½ ஏக்கர்காணி யாழ் மறை மாவட்ட ஆயர்தியோகுப்பிள்ளை ஆண்டகை அவர்களால் மத்தியூஸ் வீதியில் நன்கொடையாக வழங்கப்பட்டது. திரு A.ஜோண்பிள்ளை அதிபர்அவர்களைத் தொடர்ந்து திரு M.நீக்கிலாப்பிள்ளை பாடசாலையின் கட்டுக்கோப்பை உன்னதமாக்கினார்.

1984

இக்காலப்பகுதியில் பாடசாலையை திரு A.I.L.குணநாயகம் அவர்கள் பொறுப்பெடுத்து உபஅதிபர்திரு க.அல்போன்ஸ் திரு s.சூசைப்பிள்ளை அவர்களின் துணையூடன் செம்மையாக வழிநடத்தினார். தொடர்ந்து திரு s. மரிசலீன் அவர்களால் பாடசாலை சிறப்புடன் வழிநடத்தப்பட்டது.

1989

யாழ் நகர்தெற்கு கொத்தணி மூலாதார பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. இவ் ஆண்டில் க.பொ.த உயர்தர கலைப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. திரு G.B.அல்பிரட் அவர்கள் கொத்தணி அதிபராகப் பொறுப்பேற்றார்.

1991

திரு சு.அருளானந்தம் அதிபராகப் பொறுப்பேற்று பாடசாலையை வளமுடன் வழிப்படுத்தினார்.

1992

திருமதி P.F.சின்னத்துரை அதிபராகப் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் பல மாணவர்பல்கலைக்கழகம் சென்றமை இப்பாடசாலையில் ஒரு மைல்கல்லாகும். இவரது காலத்தில் 1995 இல் பாரிய இடப்பெயர்வு ஏற்பட்டது.

1995

இடப்பெயர்வின்போது இப்பாடசாலையில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மாணவர்களை ஒன்றிணைத்து கல்வி செயற்பாடுகள் நடைபெற்றது. இப்பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியை திருமதி M.R.C.கொன்ஸ்ரன்ரைன் கல்வி அமைச்சரால் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டார்;

2006

இப் பாடசாலையானது துஐஊயூ செயற்றிட்டத்தின் கீழ் தெரிவூநிலையில் 72 புள்ளிகள் வழங்கப்பட்டு முதல் நிலையில் தெரிவுசெய்யப்பட்டு J1 குறியீடு வழங்கப்பட்டது. கல்வி சார்ந்த செயற்பாடுகள் அனைத்தும் மூன்று தரவட்டங்களாக பிரிக்கப்பட்டு அதனூடாக முன்னெடுக்கப்பட்டன இச் செயற்பாடுகளின் 1ம்இ 2ம் ஆண்டுகளின் இறுதியில் ஏனைய பாடசாலைகளுடன் ஒப்பிட்டு எமது பாடசாலைக்கு முதன்மை நிலை அளிக்கப்பட்டது. இக்காலப்பகுதியில் அதிபராகவிருந்த திரு மா.ஞானப்பிரகாசம் அவரிகளின் நெறிப்படுத்துதலில் JICA செயற்றிட்டம் சிறப்புற இடம்பெற்றது. இக்காலப்பகுதியில் மிக நீண்ட இடைவெளியின் பின்னர் 02 மாணவர்தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமை Bench Mark ஆகும்.

2007

புனித சாள்ஸ் பொறௌமியோவின் திருவூருவ சொரூபம் பாடசாலையில் நிறுவப்பட்டது. யூலை 3ம் திகதி அதிவண. ஆயர்தோமஸ் சௌந்தரநாயகம் அவர்களால் மந்தரித்துத் திறந்துவைக்கப்பட்டது. இச் சொரூபத்தை இப்பாடசாலையின் சித்திரபாட ஆசிரியர்திரு.ம.டொமினிக்ஜீவா வடிவமைத்திருந்தார்.

2008

SEMP II இன் கீழ் இப்பாடசாலையில் கணனிக் கற்றல் நிலையம் (CLC) நிறுவப்பட்டது.

2009

கணனிக் கற்றல் நிலையம் வலயக்கல்விப் பணிப்பாளர்திருமதி அ.வேதநாயகம் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. கணணி அறிவு அபிவிருத்தி நோக்குடன் 20 கணணிகளுடன் கணணிப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து பாடசாலையில் கல்வி அபிவிருத்தி இ இணைபாடவிதான அபிவிருத்தி, மாணவர்நலன் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.