பாடசாலைக் கீதம்
பல்லவி
புனித சாள்ஸ் கலா நற்சாலை
கலை வாழும் பொற்சோலை
அனுபல்லவி
இயல் இசை நாடகம்
எண் எழுத்தின்பம்
இலங்கும் செந்தமிழ்ச்சோலை (புனித)
சரணம்
மரகதத் தீவின் யாழூரில் - மிக
மகத்துவ மோங்கும் கலைவீட்டில்
உண்மை ஒழுக்க நெறியூடனே – எங்கள்
உடல் உளப்பண்புகள் ஓங்கிடவே
தாயகம் தாங்கும் பிரசைகளாகத்
தலை நிமிர்ந்தென்றும் வாழ்த்திடவே
அழியாத கல்வி நிலையான செல்வம்
அதை நாமும் மனமாரப் பெறுவோமே (புனித)
“முயற்சியினால் வரும் திரு” வென்னும் - பொது
மறை பணி வாக்கினை மறவோமே
தூய்மை சாந்தம் ஞானம் எழில் பொறை
வாய்மையூம் உடைய புறா வெனவே
எழுத்தறிவிப்போன் இறையவன் என்றே
இதயத்தில் ஏற்றிப் போற்றிடுதோம்
பரிசுத்த ஆவி நிறை கலைக் கோவில்
பரிவோடு மனமார வாழ்த்துவோமே (புனித)