சமன்பாடு y = px2 + qx + r ஐப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள x இன் பெறுமானங்களுக்கு ஒத்த y இன் பெறுமானங்களைக் கணிக்கவேண்டியுள்ளது. p, q, r ஆகிய மாறிலிகளின் பெறுமானங்கள் முறையே B1, B2, B3 ஆகிய கலங்களிலும் x இன் பெறுமானங்கள் வீச்சு C2 : C6 இலும் தரப்பட்டுள்ளன.

y இன் ஏனைய பெறுமானங்களைப் பெறுவதற்கு D2 இல் உள்ள சூத்திரத்தைக் கல வீச்சு D3:D6 இற்கு நகல் செய்துள்ளதாகக் கொள்க. y இன் மிகப் பெரிய பெறுமானத்தைப் பெறுவதற்குக் கலம் D7 இல் எழுதப்பட வேண்டிய சூத்திரம் யாது?