A - இடைமுகத்தை (interface) வழங்கிக்கொண்டு வன்பொருளுக்கும் பயனிக்குமிடையே (user) உள்ள இடை வெளியை நிரப்புகின்றது. B - தொடர்பாடலிற்கும் தகவலிற்கான அணுகுகைக்குமாகப் பயனிக்கு இணைய வசதிகளை வழங்குகின்றது C - கோப்புகளையும் உறைகளையும் (folders) கையாளுகின்றது.
மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை ?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
கணினியில் உள்ள உறைகள் (folders) தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது ?
உறைப் பெயர்களை மாற்ற முடியாது.
கோப்புகளை (files) ஓர் ஒழுங்கமைந்த விதத்தில் தேக்கி வைப்பதற்கு உறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஓர் உறையினுள்ளே படைக்கப்படத்தக்க உறைகளின் உயர்ந்தபட்ச எண்ணிக்கை 10 ஆகும்.
கணினி வலையமைப்பு
அறிவுறுத்தல்களும் (instructions) தரவுகளும் (data) நேரடியாக மைய முறைவழி அலகிற்கு (CPU) பதுக்கு நினைவகத்தினூடாக ______________ இலிருந்து பெறப்படும். மேலேயுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்குச் சிறந்த பதம் பின்வருவனவற்றுள் எது?
இறுவட்டு
வன்வட்டு
பிரதான நினைவகம்
கணினி வலையமைப்பு
பணிசெயல் முறைமையின் பிரதான தொழிற்பாடு / தொழிற்பாடுகள் பின்வருவனவற்றுள் எது / எவை ?
A - பாவனையாளர் கணக்குகளை (user accounts) முகாமை செய்தல் B - கணினி நினைவகத்தை முகாமை செய்தல் C- ஆவணமொன்றிலுள்ள எழுத்துகளைச் (spellings) சரிபார்த்தல்
A மாத்திரம்
A, B மாத்திரம்
B மாத்திரம்
B, C மாத்திரம்
பின்வருவனவற்றுள் மையமுறைவழி அலகில் (CPU) செய்நிரலின் (program) செயற்பாடு தொடர்பாக சரியான கூற்று எது ?
அறிவுறுத்தல்களும் தரவுகளும் முதன்மை நினைவகத்தில் (main memory) இருந்து பெறப்படும்.
அறிவுறுத்தல்கள் முதன்மை நினைவகத்திலிருந்தும் தரவுகள் துணைத்தேக்ககத்திலிருந்தும் (secondary storage) பெறப்படும்.
அறிவுறுத்தல்கள் துணைத்தேக்ககத்திலிருந்தும் தரவுகள் முதன்மை நினைவகத்திலிருந்தும் பெறப்படும்.
கண்டியில் வசிக்கும் சுதன், இலக்கமுறைச் சித்திரமொன்றை (digital ar) படிமக் கோப்பாக (image file) உருவாக்கி தனது கணினியில் வைத்துள்ளான். அவனுக்கு அச்சித்திரத்தை கொழும்பு, யாழ்ப்பாணம், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வசிக்கும் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள (share) வேண்டிய தேவையுள்ளது, இந்தப் படிமக் கோப்பினை நண்பர்களிடையே பகிர்வதற்குப் பொருத்தமான முறை முறைகள் பின்வருவனவற்றுள் எது/எவை ?
A - கோப்பினை இடத்துக்கிடம் மாற்றும் (file transfer) மென்பொருளைப் பயன்படுத்தி இடத்துரி வலையமைப்பினூடாக (LAN) நண்பர்களின் கணினிகளுக்கு இக்கோப்பினை அனுப்புதல் B - மின்னஞ்சலைப் (email) பயன்படுத்துதல் C - கோப்பினை நான்கு USB பளிச்சீட்டு வட்டுகளில் (flash drives) பிரதிசெய்து அவற்றைச் சாதாரண தபாலில் நண்பர்களுக்கு அனுப்புதல்
A மாத்திரம்
B மாத்திரம்
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
பின்வருவனவற்றுள் அதியுயர் கோப்பு அளவைக் (file size) கொண்டுள்ளது எது ?
1 மெகாபைட் உடைய .doc கோப்பு
912 கிலோபைட் உடைய .gif கோப்பு
700 பைட் உடைய .txt கோப்பு
1024 பைட் உடைய .jpg கோப்பு
பின்வருவனவற்றுள் கணினியிலுள்ள கோப்புகள் தொடர்பான தவறான கூற்று எது ?
கணினியில் தரவுகளைச் சேமிப்பதற்காக கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
கோப்பின் பெயர் மாற்றப்படக்கூடியது.
கோப்பினுள் கோப்புறைகளை உருவாக்கலாம்.
கோப்பின் பெயருக்கு .doc அல்லது .txt போன்ற நீட்டிப்பு காணப்படலாம்.
ஒரு பணிசெயல் முறைமை (OS) மென்பொருளின் முக்கிய பணி
ஒரு முன்வைப்பில் எழுத்துக்கூட்டலைச் செவ்வைபார்த்தல்
ஓர் ஆவணத்தில் உள்ள சொற்களை எண்ணுதல்
கணினி முறைமையில் வன்பொருள் வளங்களை முகாமை செய்தல்
மின்னஞ்சலை அனுப்புதலும் பெறுதலும்
பின்வருவனவற்றில் எது பணிசெயல் முறைமையில் (Operating system) நினைவக முகாமையின் (Memory management) ஒரு பகுதியாக நிறைவேற்றப்படும் ஒரு நேரடித் தொழிற்பாடாகும் ?
ஒரு கொள்பணி நிறைவேற்றப்பட்ட பின்னர் நினைவகத்தை விடுவித்தல்
வன்வட்டிற்குள் பிரவேசித்தல்
ஓர் உறையில் கோப்புகளை ஒழுங்கமைத்தல்
சாதனங்களை முகாமை செய்தல்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - ஒரு கணினியின் பதிவேட்டு நினைவகம் (register memory) ஒரு வன் வட்டிலும் பார்க்கச் சிறிய கொள்திறனை உடையது. B - ஒரு வன் வட்டின் தரவு அணுகற் கதியிலும் (access speed) பார்க்கப் பதிவேட்டு நினைவகத்தின் தரவு அணுகற் - கதி மெதுவானது. C - பதிவேட்டு நினைவகத்தில் தரவுகளைத் தேக்கி (store) வைப்பதற்கான பிற்றுக் கிரயம் ஒரு வன் வட்டில் தரவுகளைத் தேக்கி வைப்பதற்கான கிரயத்திலும் உயர்ந்தது.
மேற்குறித்த கூற்றுகளில் எவை உண்மையானவை?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம் கையாலை
A, B, C ஆகிய எல்லாம்
ஒரு வலக் கைப் பயனரினால் ஓர் உறையில் (folder) உள்ள ஒரு விரிதாள் கோப்பு மீது நிறைவேற்றப்பட்ட கொள்பணிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - சுட்டி காட்டியைக் (mouse pointer) கோப்பின் மீது வைத்துச் சுட்டியின் வலது பொத்தானை ஒரு தடவை சொடக்குக. B - சுட்டி காட்டியைக் கோப்பின் மீது வைத்துச் சுட்டியின் வலது பொத்தானை இரு தடவை சொடக்குக. C - சுட்டி காட்டியைக் கோப்பின் மீது வைத்துச் சுட்டியின் இடது பொத்தானை இரு தடவை சொடக்குக.
மேற்குறித்தவற்றில் எதன் / எவை மூலம் விரிதாள் கோப்பு திறக்கப்படும்?
A மாத்திரம்
B மாத்திரம்
C மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
ஒரு கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு புதிய அச்சுப்பொறி உகந்தவாறு தொழிற்படுவதற்கு ஒரு விசேட மென்பொருளை நிறுவ வேண்டும். இவ்விசேட மென்பொருள் யாது?
ஒருங்கமைப்பான் (defragmenter)
சாதன இயக்கி (device driver)
கோப்பு முகாமையாளர் (file manager)
பணி முகாமையாளர் (task manager)
ஒரு கணினியை ஆளியிட்டுத் தொடக்கிய பின்னர் பின்வரும் எது முதலில் தொழிற்படும்?
அடிப்படை உள்ளீட்டு வெளியீட்டு முறைமை (BIOS)
வட்டுப் பிரிவிடற் கருவி (disk partitioning tool)
பணிசெயல் முறைமை (operating system)
பணி முகாமையாளர் (task manager)
A மற்றும் B என முகப்படையாளமிடப்பட்ட வெற்றிடங்களுடனான பின்வரும் கூற்றைக் கருதுக.
முறைவழியாக்கச் (processing) செயன்முறையின்போது மையமுறைவழியாக்க அலகானது அதனது .......A........ ஐ, .................B............. இல் இருந்து கொண்டுவரப்பட்ட தரவுகளை தற்காலிகமாகச் சேமிப்பதற்கு பயன்படுத்துகின்றது.
மேலே A மற்றும் B என முகப்படையாளமிடப்பட்ட வெற்றிடங்களை முறையே நிரப்புவதற்கு பின்வருவனவற்றுள் எந்த சேர்க்கை பொருத்தமானது?
முதன்மை நினைவகம், பதிவகங்கள்
பதிவகங்கள், முதன்மை நினைவகம்
துணை நினைவகம், முதன்மை நினைவகம்
துணை நினைவகம், பதிவகங்கள்
பின்வருவனவற்றுள் எது பணிசெயல் முறைமையின் செயற்பாடுகளை மாத்திரம் கொண்டுள்ளது?
சம்பள புத்தக (payroll) முகாமைத்துவம், செயல் முகாமைத்துவம், கோப்பு முகாமைத்துவம்
செயல் முகாமைத்துவம், தரவுத்தள முகாமைத்துவம், கோப்பு முகாமைத்துவம்
செயல் முகாமைத்துவம், நினைவக முகாமைத்துவம், தரவுத்தள முகாமைத்துவம்
செயல் முகாமைத்துவம், நினைவக முகாமைத்துவம், கோப்பு முகாமைத்துவம்
தற்போதுள்ள கோப்புகளை (files) அழிக்காது வன்தட்டிலுள்ள இடத்தைப் பாவனைக்கு ஏற்றவகையில் அதிகரிப்பதற்கு பின்வரும் எச்செயற்பாடு பயன்படுத்தப்படும்?
வன்தட்டில் காணப்படும் கோப்புகளை நெருக்குதல் (compression)
வன்தட்டிலுள்ள சில கோப்புகளை பளிச்சீட்டு செலுத்தி (flashdrive) ஒன்றிற்கு பிரதியாக்கம் செய்தல்
வன்தட்டிலுள்ள சில கோப்புகளை பளிச்சீட்டு செலுத்தி (flashdrive) ஒன்றிற்கு பிரதியாக்கம் செய்தல்
வன்தட்டினை வடிவமைத்தல் (formatting)
வன்தட்டினை பிரிவீடு செய்தல் (partitioning)
பின்வரும் கூற்றுக்களைக் கருதுக.
கூற்று A - வரைவியற் பயனர் இடைமுகம் (Graphical User Interface) கட்டளை வரி இடைமுகத்திலும் (Command line interface) பார்க்க பயனர் தோழைமைமிக்கது. கூற்று B - வரைவியற் பயனர் இடைமுகத்தில் உள்ள படவுருக்களைப் (Icons) பயன்படுத்துவதன் மூலம் கட்டளை வரி இடைமுகத்திலுள்ள கட்டளைகளை நினைவகத்தில் வைத்திருப்பதற்கான தேவை தவிர்க்கப்படுகின்றது.
மேற்குறித்த கூற்றுகளில் செல்லுபடியான தொடர்பைக் கொண்டது பின்வருவனவற்றுள் எது?
கூற்று A சரியானதும் கூற்று B பிழையானதுமாகும்.
கூற்று A பிழையானதும் கூற்று B சரியானதுமாகும்.
கூற்று A பிழையானதும் கூற்று B சரியானதுமாகும்.
A, Bஆகிய இரு கூற்றுகளும் சரியானவை ஆனால் கூற்று A ஆனது கூற்றுB யுடன் தொடர்பானதல்ல.
ஒரு கணினியில் உள்ள ஒரு கோப்பின் வகையை (file type) இனங்காண்பதற்கு பின்வருவனவற்றில் எது பயன்படுத்தப்படுகிறது?
கோப்பைக் கொண்டுள்ள உபகோப்புறை
கோப்பைக் கொண்டுள்ள கோப்புறை
கோப்புப் பெயர்
கோப்பு நீட்டிப்பு
சாதனங்களுடன் தொழிற்படுவதற்கு பணிசெயல் முறைமையினால் பயன்படுத்தப்படும் மென்பொருள் பின்வருவனவற்றுள் எது?
சாதன இயக்கிகள் (device drivers)
பிறழ்பொருள் (malware)
நச்சு நிரல் எதிர்ப்பு மென்பொருள் (anti-virus software)
பிரயோக மென்பொருள் (application software)
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A- ஒரு கணினியின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்வதற்கான முறைகளில் ஒன்று பணிசெயல் முறைமையிலுள்ள disk cleanup எனும் பயன்பாட்டு மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலமாகும். B- வட்டொன்றின் தேக்ககத்தை தொடர்ச்சியாக ஆக்கிரமித்துள்ள கோப்புகளை ஒழுங்காக அடுக்குதல் வட்டை ஒழுங்கமைத்தல் (disk defragmentation) எனப்படும்.
பின்வருவனவற்றில் எது / எவை மேற்குறித்தவற்றைக் கருதும் போது செல்லுபடியாகும்?
A மாத்திரம் சரியானது
A, B ஆகிய இரண்டும் பிழையானவை
A, B ஆகிய இரண்டு சரியானவை
B மாத்திரம் சரியானது
ஒரு கணினி முறைமையின் அடிப்படைக் கூறு அல்லாதது பின்வருவனவற்றில் எது?
உயிர்ப்பொருள்
மைய முறைவழியலகு (CPU)
உள்ளீட்டுச் சாதனம்
வெளியீட்டுச் சாதனம்
ஒரு மாணவன் GIMP என்னும் மென்பொருள் இனித் தேவையில்லை என நினைத்து, அதனைக் கணினியிலிருந்து முற்றாக அகற்றுவதற்கு விரும்புகின்றான். அவன் இக் குறிக்கோளை அடைவதற்குப் பின்வரும் பணிசெயல் முறைமை அம்சங்களில் எதனைப் பயன்படுத்த வேண்டும்?
வட்டு ஒருங்கமைப்பி (disk defragmenter)
Add/ Remove program
சாளர முழுத்தேடி (Windows Explorer)
சில்லாக்கிக் கருவி (Snipping tool)
பின்வரும் தொகுதிகளில் எது முறைமை மென்பொருளை (system software) மாத்திரம் கொண்டுள்ளது?
சொல் முறைவழிப்படுத்தி, வலை மேலோடி, விரிதாள் மென்பொருள்
முன்வைப்பு மென்பொருள், சாதன இயக்கி, வரைவியல் மென்பொருள்
தரவுத்தள முகாமைத்துவ முறைமை, பணிசெயல் முறைமை, விரிதாள் மென்பொருள்
பணிசெயல் முறைமை, பயன்பாட்டு மென்பொருள், சாதன இயக்கி (device driver)
ஒட்டியிராத (non-contiguous) கோப்புகளை ஒட்டியுள்ள (contiguous) கோப்புகளாக மாற்றுவதன் மூலம் ஒரு வன்வட்டின் ஆற்றுகையை உச்ச அளவாக்குவதற்குப் பயன்படுத்தப்படத்தக்க பணிசெயல் முறைமையில் உள்ள பயன்பாட்டுக் கருவி (utility tool) யாது?
வளத் தெரிவிப்பி (Resource Monitor)
வட்டு துப்புரவாக்கல் (Disk Cleanup)
வரியுரு விவரப்படம் (Character Map)
வட்டு ஒருங்கமைத்தல் (Disk Defragmenter)
பின்வரும் அட்வைணையின் நிரல் 1 இல் மென்பொருளின் சில வகுதிகளும் நிரல் 2 இல் சில உதாரணங்களும் தரப்பட்டுள்ளன. எனினும், இவ்விரு நிரல்களிலும் உள்ள உருப்படிகள் பொருந்தாமல் இருக்கலாம்.
பயனர் ஒருவரின் கணினி வன்வட்டின் அடைவு மரம் (directory tree) கீழேயுள்ள உருவில் காட்டப்பட்டுள்ளது. மேலுள்ள அடைவு மரக் கட்டமைப்பில் ALNotes, CombinedMaths, Competency1.doc ஆகியன முறையே
பிரதான அடைவு(root directory), உப அடைவு(sub directory), கோவை(file)
கோவை (file), பிரதான அடைவு (root directory), உப அடைவு (sub directory)
உப அடைவு(sub directory), கோவை(file), பிரதான அடைவு (root directory)
உப அடைவு(sub directory), பிரதான அடைவு(root directory), கோவை(file)
பின்வரும் மென்பொருள்களைக் கருதுக:
A-DOS B- ஃபயர்பொக்ஸ் (Firefox) C- மைக்ரோசொப்ட் வின்டோஸ் (Microsoft Windows) D- லினக்ஸ் (Linux)
மேற்குறித்தவற்றுள் பணிசெயல் முறைமைகள் (Operating Systems) எவை?
A, B, C மாத்திரம்
A, B, D மாத்திரம்
B, C, D மாத்திரம்
A, C, D மாத்திரம்
கீழே தரப்பட்ட செயல்களைக் (functions) கருதுக.
A- ஆவணத்திலுள்ள சொற்களை எழுத்துப் பிழை சரிபார்த்தல் B- முறைமையில் இயங்கும் செயன்முறைகளை (processes) முகாமை செய்தல் C- பயனருக்கு இடைமுகத்தை வழங்குதல்
பணிசெயல் முறைமையின் செயல்கள் மேற்குறித்தவற்றுள் எவை?
A, C மாத்திரம்
A, B மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
கணினி முறைமையொன்றின் பயன்பாட்டு மென்பொருளுக்கு(Utility software) உதாரணமாக அமைவது / அமைவன பின்வருவனவற்றுள் எது / எவை?
A- காப்பு மென்பொருள் (Backup Software) B- சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருள் (Word Processing Software) C- வலை உலாவி (Web browser) D-வன்தட்டு சீராக்கி (Disk defragmenter)
C, D ஆகியன மாத்திரம்
A மாத்திரம்
B, D ஆகியன மாத்திரம்
A, D ஆகியன மாத்திரம்
உங்கள் கணினியின் வன்வட்டில் (hard disk) சுயாதீனவெளி மிகக் குறைவாக உள்ளதாகக் கருதுக. நீங்கள் சேமித்துவைத்த எந்த ஒரு கோப்பினையும் நீக்காமல் இன்னும் சிறிதளவு சுயாதீன வெளியை உருவாக்க விரும்புகின்றீர்கள் எனின், அதற்குப் பயன்படுத்தும் முறைமைக் கருவிகள் (system tools) பின்வருவனவற்றுள் எவை?
A- MS-DOS என்பது கட்டளை நிரை இடைமுகத்தைப் (CLI) பயன்படுத்தும் பணிசெயல் முறையாகும். B- இசுறு லினக்ஸ், ஹன்தான லினக்ஸ் என்பன இலங்கையர்களால் தேசிய மயமாக்கப்பட்ட இரு திறந்த பணிசெயல் முறைமைகளாகும். C- மைக்கிரோசொப்ற் வின்டோஸ் என்பது வரைவியல் பயனர் இடைமுகம் (GUI) இல்லாத பணிசெயல் முறையாகும். மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை?
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
C:\user\grade12\git இல் மூல அடைவு (root directories) யாது?
user
git
grade12
C:\
ஒரு கணினியின் செய்பணிகள் (operations) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A- கணினி நிறுத்தப்படும் போது (turned off) முதன்மை நினைவகம் (main memory) அதன் தரவுகளை இழக்கின்றது. B- கணினி நிறுத்தப்படும்போது வன் வட்டு அதில் ஏற்கெனவே தேக்கி வைக்கப்பட்ட அதன் தரவுகளை வைத்திருக்கின்றது. C- முறைவழியாக்குவதற்குத் துணைத் தேக்கதிலிருந்து முதன்மை நினைவகத்திற்கு அறிவுறுத்தல்கள் (Instructions) கொண்டு வரப்படுகின்றன. மேற்குறித்த கூற்றுகளில் எது / எவை உண்மையானவை?
A, Cஆகியன மாத்திரம்
A, B, Cஆகிய எல்லாம்
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
ஒரு பணிசெயல் முறைமையில் பயனர் கணக்குகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை?
A- ஒவ்வொருவரும் ஒரு பயனர் பெயருடனும் கடவுச் சொல்லுடனும் தனது பயனர் கணக்கினை அணுக முடியும். B- பயனர் கணக்கு என்பது அணுக கூடிய கோப்புகளையும் உறைகளையும் பற்றிக் குறிப்பிடுவதும் கணினியில் பயனரின் விருப்பத்திற்குகேற்ப மாற்றப்படத்தக்க அமைப்புகள் (setting) பற்றிக் குறிப்படுவதுமான தகவல்களின் தொகுப்பாகும். C- பலருடன் ஒரு கணினியைப் பகிர்ந்து கொள்வதற்குப் பயனர் கணக்கு உம்மை அனுமதிப்பதில்லை.
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B, C எனும் பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A-கணினி நச்சு நிரல்கள் இருக்கின்றனவா எனச் சரிபார்த்தல் B-கோப்புகளையும், அடைவுகளையும் (directories) முகாமை செய்தல் C-உள்ளீட்டு / வெளியீட்டுச் சாதனங்களை (devices) கட்டுப்படுத்தல்
மேற்குறித்த கூற்றுகளுள் எவை பணிசெயல் முறைமையின் சில தொழில்களை வகைகுறிக்கின்றன?