தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
பிறழ்பொருள் (malware) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - முதல் பார்வையில் Trojan Horses பயன்படும் மென்பொருளாகத் தோற்றுகின்ற போதிலும் ஒரு தடவை நிறுவப்பட்டதும் அல்லது கணினியில் ஓடவிடப்பட்டதும் உண்மையாகச் சேதத்தை ஏற்படுத்தும். B - ஒரு புழு (worm) வலையமைப்பின் மீது தானாகப் பெருகி மனிதச் செயற்பாடு எதுவுமின்றிச் செல்லும் ஆற்றலை உடையது. C - ஒரு கணினி நச்சுநிரல் (virus) ஒரு செய்நிரலுடன் அல்லது கோப்புடன் தானாக இணைந்து ஒரு கணினியிலிருந்து வேறொரு கணினிக்குப் பரந்து சென்று, செல்லும்போது தொற்றுகளை விட்டு விடும்.
மேற்குறித்தவற்றில் சரியானது/ சரியானவை?
A மாத்திரம்.
B மாத்திரம்.
A, B ஆகியன மாத்திரம்.
A, B, C ஆகிய எல்லாம்.
பின்வருவனவற்றைக் கருதுக.
A - உத்தரவுச்சீட்டின்றி வர்த்தக மென்பொருளைப் பயன்படுத்துபவர். B- வேறொருவரின் உடன்பதி (login) விவரங்களைப் பயன்படுத்துபவர் C - வாடிக்கையாளர் பற்றிய தகவலை வாடிக்கையாளரின் சம்மதமின்றி ஏனையோருக்கு வெளிப்படுத்துபவர். D - நச்சுநிரல்களை உருவாக்கி ஏனையோரின் கணினிகளுக்குப் பரப்புபவர்.
A - தீச்சுவர்கள் (Firewalls) வன்பொருளாக மாத்திரம் கிடைக்கின்றன; அவை மென்பொருளாக இருப்பதில்லை B - கணினிப் புழு (worm) என்பது கணினி வலையமைப்பினூடாகப் பரவும் சுயமாகப் பெருகும் (self replicating) தீயபொருள் கணினிச் செய்நிரல் (program) ஆகும். C - spam என்பது தேவையற்ற மின்னஞ்சல்களை அதிக அளவில் தாறுமாறாக அனுப்பும் மின்னணுச் செய்தி முறைமையைப் பயன்படுத்தலாகும்.
மேற்குறித்தவற்றில் சரியானது சரியானவை யாது/யாவை ?
C மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
பயனர் பெயர்களையும் (user names) கடவுச்சொற்களையும் (passwords) பயன்படுத்துவதன் மூலம் ICT பிரயோகங்களின் (applications in ICT) .............. காப்பை (security) மேம்படுத்தலாம். மேற்குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எது மிகவும் பொருத்தமானது ?
சுற்றாடல் (Environmental)
தருக்க (Logical)
வன்பொருள் (Hardware)
பௌதீக (Physical)
பின்வருவனவற்றில் எது/எவை இலக்கப் பிரிப்பைத் தொடுக்கப் (bridge the digital divide)பயன்படுத்தப்படுகின்றது) பயன்படுத்தப்படுகின்றன ?
A - குறைந்த வசதிகள் உள்ள பாடசாலைகளுக்குக் கணினிகளை நன்கொடையாக வழங்குதல் B - கணினி அறிவுடைமை குறைவாக உள்ள சமுதாயங்களின் கணினி அறிவுடைமையை மேம்படுத்தல் C - இணைய அடைவு இல்லாத சமுதாயங்களுக்கு இணையத் தொடுப்பை வழங்குதல்
A மாத்திரம்
C மாத்திரம்
A, 5 ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றில் எது/எவை கணினிகள் பயன்படுத்தப்படும்போது ஏற்படும் உடல் தகைவு ஊறைக் குறைக்க உதவும் ?
A - தட்டச்சிடும் போது மணிக்கட்டை (wrist) நேராகவும் கீழ்ப் புயங்களுடன் (lower arms) ஒரே மட்டத்திலும் வைத்திருத்தல் B - கண் உபாதியைத் (eye strain) தவிர்ப்பதற்குச் சிமிட்டல் போன்ற முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் C - மறைமுகக் கூசொளியைத் (indirect glare/bright light) தவிர்ப்ப தற்குக் கணினியை ஓர் உகந்த இடத்தில் வைத்திருத்தல்
A மாத்திரம்
B மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - கணினி வோம் (Worm) என்பது கணினியில் இருக்கும்போது தானாகவே நகலை உருவாக்கிக் கொள்ளும் (replicate by itself) ஒரு மென்பொருளாகும். B - ஸ்பாம் (Spam) என்பது ஒருவரின் மின்னஞ்சல் கணக்கிற்குக் கிடைக்கப்பெறும் தேவையற்ற மின்னஞ்சல்கள் ஆகும். C - ஸ்பை வெயார் (Spyware) பயனர் அறியாமல் கடவுச் சொற்கள் (pass word) போன்ற தகவல்களை வேறு நபருக்கு அனுப்பக்கூடியது.
மேலுள்ளவற்றுள் சரியானவை எவை ?
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
குறிமுறையாக்கம் (Encryption) பயன்படுத்தப்படுவது, A - அனுமதியற்ற அணுகலிலிருந்து வியாபாரத் தகவல்களைப் பாதுகாப்பதற்கு. B - இணையத் தொடுப்பின் பட்டை அகலத்தை (bandwidth) வினைத்திறனாகப் பயன்படுத்துவதற்கு C - தரவுத்தளங்களில் தேக்கி வைக்கப்பட்ட தகவல்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்கு.
மேலுள்ளவற்றுள் சரியானவை எவை ?
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றுள் தொலை மருத்துவம் (Telemedicine) தொடர்பான உண்மையான கூற்று எது/எவை ?
A - வைத்தியருக்கும் நோயாளிக்கும் இடையிலான தொடர்பினைப் பேணுவதற்கு இணையமோ அல்லது வேறு வலையமைப்பு முறைமைகளோ பயன்படுத்தப்படும். B - தொலைதூரத்திலுள்ள விசேட வைத்திய நிபுணர்களினால் வலையமைப்பைக் கொண்ட உள்ளுர் மருத்துவ நிலையத்திலுள்ள நோயாளிகளை தொலைவிடத்திலிருந்து பரிசோதிக்க முடியும். C - பிணியாய் நிலைய நடவடிக்கைகள், வைத்திய, சுகாதார துறைகளுக்கான கல்வி நிர்வாக மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் என்பவற்றின் வினைத்திறனை அதிகரிக்கத் தொலை மருத்துவம் பயன்படும்.
A மாத்திரம்
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றுள் இணையத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடிய கொடுக்கல் வாங்கல்களாகக் கருதக்கூடியவை எவை ?
A - நண்பர்களுக்கு பரிசுப் பொருள்களை அனுப்புமாறு கட்டளை (order) வழங்குதல் B - விடுமுறையைக் கழிப்பதற்காக தங்குமிடங்களை ஒதுக்கிக் கொள்ளுதல் C - பிடித்த ஆடையை அணிந்து பார்த்த பின்பு அதனை அனுப்புமாறு கட்டளை வழங்குதல்
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றுள் கணினி வைரஸ்களின் சாத்தியப்பாட்டிற்கு மூலகாரணமாக (potential source) இருக்கக்கூடியவை எவை ?
A - களவாடப்பட்ட மென்பொருள் (pirated software) B - வருடி (scanner) C - பகிரப்பட்ட பளிச்சீட்டு வட்டு (flash drive)
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
இலக்கப் பிரிவு (Digital Divide) என்பதை இணைப்பதற்கு உதவுவது/உதவுபவை பின்வருவனவற்றுள் எது/எவை ?
A - கணினி வசதிகளற்ற பாடசாலைகளுக்கு கணினி ஆய்வுகூட வசதிகளை வழங்குதல் B - கிராமிய மக்களுக்கு இணையத் தொடுப்புடன் கூடிய சனசமூக நிலையத்தை ஸ்தாபித்தல் - சாதாரண தரப் பரீட்சைக்கு தகவல் தொடர்பாடல் C - தொழினுட்பப் பாடத்தைத் தெரிவுசெய்வதற்கு மாணவர்களை ஊக்குவித்தல்
A மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருனவற்றுள் ஒரு கணினித் தொகுதியில் நச்சுநிரல் தொற்றின் காரணமாக ஏற்படத்தக்க பாதகமான விளைவு அல்லாதது எது?
கணினியில் உள்ள தரவுகளும் தகவல்களும் சீரழிதல் (corruption)
கணினி வன்பொருளுக்குச் சேதம் ஏற்படுதல்
கணினியில் உள்ள தரவுகளும் தகவல்களும் மாறுதல்
கணினியின் தொழிற்பாட்டின் வினைத்திறன் குறைதல்
பின்வருவனவற்றில் நச்சுநிரல் தொற்றிலிருந்து ஒரு கணினித் தொகுதியைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளத்தக்க தகுந்த நடவடிக்கை யாது?
A - கிடைக்கும் மின்னஞ்சல் இணைப்புகள் (attachment) தொடர்பாகக் கூடிய கவனத்துடன் இருத்தல் B - வெளித் தேக்ககச் சாதனங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருத்தல் C - மென்பொருளில் உள்ள நுண் வசதியைச் (macro facility) செயலிழக்கச் செய்தல்
A, B ஆகியன மாத்திரம்.
A, C ஆகியன மாத்திரம்.
B, C ஆகியன மாத்திரம்.
A, B, C ஆகியன எல்லாம்.
ஒரு கணினியைக் கொள்வனவு செய்யும்போது பின்வரும் கூற்றுகளில் எதனைக் கருதுதல் நன்று?
A - கணினியின் வர்த்தகப் பெயரின் நன்மதிப்பு (reputation) B - விற்பனையாளரின் நன்மதிப்பு C - கணினியின் உத்தரவாதக் காலம்
A மாத்திரம்
B மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய மூன்றும்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு, ஒரு மாணவன் மருத்துவரிடமிருந்து மருத்துவ ஆலோசனையைப் பெறுகின்றான். B - ஈரப்பதனையும் வெப்பநிலையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தன்னியக்க முறைமை ஒருபச்சையில்லத்தில் உள்ள தாவரங்களுக்கு நீரை விடுவிக்கின்றது. C - ஓர் ஆசிரியர் இலங்கையில் கிடைக்காத ஒரு புத்தகத்தை தொடரறாப் புத்தகக் கடையொன்றில் வாங்குகின்றார்.
மேற்குறித்தவற்றில் எவை தகவல், தொடர்பாடல் தொழினுட்பவியலை (ICT) பயனுறுதிவாய்ந்த விதத்தில் பயன்படுத்துகின்றன ?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - பயன்படுத்த முடியாத கையடக்கத் தொலைபேசிகள், CRT தெரிவிப்பிகள் போன்ற மின்னணுக் கழிவுப் பொருள்களைக் கைவிடப்பட்ட உணவு போன்ற வீட்டின் குப்பையுடன் வெளியேற்றல் நல்லது. B - ஒரு மேசைக் கணினியில் (Desktop computer) உள்ள ஒரு தனிப் பயனர் உத்தரவுச் சீட்டைக் கொண்ட ஒரு மென்பொருளைப் பல்வேறு பயனர்கள் பயன்படுத்தல் சட்டரீதியற்றதன்று. C - ஒரு கணினி வலையமைப்பில் தீச்சுவர் நிறுவப்பட்டிருக்கும்போது பயனர்கள் தமது ரகசியத் தகவல்களைக்கொண்ட தமது கோப்புகளைப் பாதுகாப்பதற்குக் கடவுச்சொற்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை.
A - வேறொருவரின் ஒரு களவாடிய பயனர் பெயரையும் (user ID) கடவுச்சொல்லையும் (password) பயன்படுத்தி ஒரு கணினிக்குள்ளே புகுதல் B - உத்தரவுச்சீட்டிற்காகக் கொடுப்பனவைச் செய்யாமல் ஓர் இலவச, திறந்த ஆதாரமூல மென்பொருளைப் (free and open source software) பதிவிறக்கஞ் செய்து (downloading) நிறுவுதல் (installing) C - நிகழ்நிலைக் (online) கடையின் முகாமையாளர் தனது வாடிக்கையாளர்களின் சம்மதமின்றி அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிப் பட்டியலை ஒரு சந்தைப்படுத்தும் கம்பனிக்கு விற்றல்
மேற்குறித்த உதாரணங்களில் எவை ஒழுக்கவியல் பிரச்சினைகளை (ethical issues) ஏற்படுத்தும்?
A, B ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் நிகழ்வுகளைக் கருதுக.
A - ஒரு பிறப்புச் சான்றிதழின் மூலப் பிரதியை நிகழ்நிலையாகப் (online) பெறுதல் B - தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் வலைத்தளத்தைப் பயன்படுத்தி நிகழ்நிலையாக நீர்ச் சிட்டைக் கொடுப்பனவைச் செய்தல் C - ஒரு வாகனத்திற்கான அரசிறை உத்தரவுச்சீட்டை நிகழ்நிலையாகப் பெறுதல்
A - தடைப்படாத வலு வழங்கல் (UPS) B - மென்பொருள் தீச்சுவர் (software firewall) C - கணினிக்குள்ளே புகுவதற்குப் (login) பயனர் பெயரையும் (user name) கடவுச்சொல்லையும் (password)
பின்வருவனவற்றில் எது / எவை இணையத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு உதாரணம் / உதாரணங்கள் ஆகும்?
A - தொலைபேசி எண்கள், முகவரிகள் போன்ற பிரத்தியேகத் தகவல்களைச் சமூக ஊடகங்களுக்கு மறைத்து வைத்தல் B - அறியாத நபர்களிடமிருந்து கிடைக்கும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளின் (links) மீது சொடக்குதல் C - சமூக ஊடகங்களில் அறியாதவர்களுடன் தொடர்பாடல்
A மாத்திரம்
B மாத்திரம்
C மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - e - கழிவுகளைக் (electronic waste) கவனயீனமாகச் சூழலினுள்ளே வெளியேற்றல் B - பயன்படுத்தமுடியாத இறுக்கப் புளோரொளிர்வு விளக்குக் (CFL) குமிழ்களையும் ஏனைய இலத்திரனியற் சாதனங்களையும் (devices) மீள்சுழற்சி நிலையங்களில் ஒப்படைத்தல் C - பயன்படுத்தத்தக்க நிலைமையில் உள்ள இலத்திரனியற் சாதனங்களைக் கைவிடாமல் ஏனையோருக்கு விற்றல் அல்லது நன்கொடையாக அளித்தல்
மேற்குறித்தவற்றில் எவை e - கழிவுகளைப் பாதுகாப்பாக வெளியேற்றுதலுக்கு உதாரணங்களாகும்?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் எது e-அரசாங்க சேவைக்கு ஓர் உதாரணமன்று?
இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் வலைத்தளத்திலிருந்து க.பொ.த. (சா.த.) பெறுபேறுகளைப் பெறுதல்
ஒரு நிகழ்நிலைக் (online) கடையிலிருந்து பொருள்களை வாங்குதல்
ஆட்பதிவுத் திணைக்களத்திலிருந்து தேசிய அடையாள அட்டை விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்தல் (downloading)
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வலைத்தளத்தினூடாக நீர்ச் சிட்டைப் பணத்தை நிகழ்நிலையாகச் செலுத்துதல்
பின்வருவனவற்றுள் எது ஒரு கணினியைப் பாவிக்கும்போது பயன்படுத்த வேண்டிய சரியான தோரணையாகும்?
பின்வருவனவற்றுள் கருத்துத் திருட்டு (plagiarism) என்பதற்கு உதாரணம் எது?
வேறொருவரினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தை தனது ஆவணமாக முன்வைத்தல்
இணையத்தளத்திலிருந்து ஒன்றைப் பிரதிசெய்து அதனை உங்கள் ஆவணத்தில் உரிய உதவிகளுடன் செருகுதல்
பந்தியொன்றை நிகழ்நிலையில் (online) வாசித்து அதனை தனது சொற்களில் மீண்டும் எழுதுதல்
உங்களது சொந்த வேலையை அடிப்படையாகக் கொண்ட முன்வைப்பொன்றை உருவாக்குதல்
நிகழ்நிலைக் கொள்வனவு (online shopping) தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A- சாதாரண அங்காடிகளுடன் ஒப்பிடும்போது இது இலகுவானது. B- நாளின் எவ்வேளையிலும் கட்டளைகளை இடலாம். C- விநியோகிக்கப்படும் பொருள் கட்டளையிட்ட பொருளாக இல்லாது போகலாம்.
மேற்குறித்தவற்றில் சரியானவை எவை?
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B மாத்திரம்
பின்வருவனவற்றைக் கருதுக.
A- தீச்சுவர் (Firewall) B-கடவுச்சொல் C- தடைப்படாத வலு வழங்கல் D- காப்பு(Backup)
இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தை (ICT) விரிவுபடுத்துவதற்காக அரசாங்கம் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நிறுவனம் பின்வருவனவற்றுள் எது?
கல்வி அமைச்சு
கணினி வள நிலையங்கள்
தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பவியல் முகவர் நிலையம் (ICTA)
இலங்கை அவசரகாலத் தயார்நிலைக் குழு (SLCERT)
இலத்திரனியல் அரசாங்கத்துக்கு (e- governance) உதாரணமாவது பின்வரும் செயற்பாடுகளில் எதுவாகும்?
பிரதேசச் செயலக அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளல்
வங்கிகளினூடாக கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்ளல்
நிகழ்நிலைக் கொள்வனவு
நிகழ்நிலை முறையில் திருமணச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளல்
பின்வருவனவற்றைக் கருதுக.
A-தெரியாத இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கஞ் செய்தல் B- தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்தல் C-பாதுகாப்பான இணையத்தளங்களைப் பயன்படுத்தல்
மேற்குறித்தவற்றில் எது/ எவை இணையப் பயன்பாட்டில் நல்ல பழக்கம் / பழக்கங்களாகும்?
C மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B மாத்திரம்
A மாத்திரம்
நீங்கள் சாவிப்பலகையையும் சுட்டியையும் பயன்படுத்தும் அதேவேளை உங்கள் மணிக்கட்டை ஒரு தகுந்த நிலையில் வைத்திருக்கத் தவறினால், எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினை யாது?
மணிக்கட்டுச் சுரங்கச் சகசம்
முதுகுவலி
கணினிப் பார்வைச் சகசம்
மீள்வரும் தகைப்புக் காயம்
கற்றல் முகாமைத்துவ முறைமை (LMS) தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A- ஆசிரியர்களும் மாணவர்களும் LMS ஐப் பயன்படுத்தலாம். B- கற்பித்தல் மற்றும் கற்றல் செயன்முறையை எளிதாக விரிவுபடுத்துவதற்கு LMS உதவுகின்றது. C- LMS ஐ எங்கேயிருந்தும் எந்த நேரத்திலும் அடையலாம்.
மேற்குறித்த கூற்றுகளில் எவை சரியானவை?
A, Cஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
ஸ்பாம் (spam) என்பது,
ஒரு வகை வைரஸ் ஆகும்.
குறிமுறையாக்க வகை (encryption type) ஒன்றாகும்.
ஒரு ரொஜான்ஹோர்ஸ் (Trojan horse) ஆகும்.
கோரப்படாத மின்னஞ்சல் பல பெறுனர்களுக்கு அனுப்பப்படல் ஆகும்.
பின்வருவனவற்றில் மடிக் கணினியின் தொழினுட்ப விவரக்கூற்றுகள் மாத்திரம் இடம்பெறும் பட்டியல் யாது?
USB துறைகளின் (ports) எண்ணிக்கை, விற்பனைக்கு பிந்திய சேவை, RAM இன் கொள்திறன், காட்சியின் பருமன்
உத்தரவாதக் காலம், விற்பனையாளரின் மதிப்பு, USB துறைகளின் எண்ணிக்கை, மடிக் கணினியின் நிறை
சில விளம்பர வலையமைப்புகள் பயனர் வலைப்பக்கங்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை இடுகின்றனர். அத்தகைய வலையமைப்புகள் பயனர்களின் சம்மதமின்றி அவர்களின் நடத்தைகளை அவதானிக்கின்றன. இதனுடன் சம்பந்தப்பட்டுள்ள மிகப் பொருத்தமான விவாத விடயம் யாது?
தனிமை மீறல் (privacy violation)
குறும்பு (hacking)
பாதுகாப்பு அச்சுறுத்தல் (security threat)
களவு(piracy)
நிகழ்நிலைக் கொள்வனவு (online shopping) தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A- அது கொள்வனவுக்காகச் செலவிடப்படும் பயண நேரத்தை மீதப்படுத்துகின்றது. B- வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்கும் முன்னர் அதனைப் பௌதீக ரீதியாக பரிசோதிக்க முடியாது. C- வாடிக்கையாளர்கள் மலிவான பொருள்களை எளிதாகக் கண்டு கொள்ளலாம்.
மேற்குறித்த கூற்றுகளில் நிகழ்நிலைக் கொள்வனவு பற்றிய சரியான கூற்றுகள் யாவை?
A, B ஆகியன மாத்திரம்
A, B, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
பின்வரும் எவ்வழிகளில் ஒரு நச்சுநிரல் உமது கணினிக்கு ஊடுகடத்தப்படலாம்?
A- மின்னஞ்சலினால் அல்லது மின்னஞ்சலின் ஓர் இணைப்பினால் B- இணையத்திலிருந்து விடயங்களை பதிவிறக்கஞ் செய்வதினால் C- பளிச்சீட்டு நினைவகக் கோல் (flash memory) போன்ற கழற்றத்தக்க தேக்ககச் சாதனங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவதன் மூலம்
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
ஒரு பாடசலையின் அலுவலகத்தின் தினசரிப் பணிகளில் உதவுவதற்காக ஒரு கணினிப் பிரயோக உதவியாளரின் சேவைகளைப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்வரும் எத்துறையில் பெறப்பட்டுள்ள அனுபவம் ஒரு விண்ணப்பதாரருக்கு உகந்த தகைமையாகும்?
வலையமைப்பு நிர்வாகம்
தகவல் தொழினுட்ப முகாமை
கணினிச் செய்நிரலாக்கமும் தவறுநோக்கலும்
சொல்முறை வழிப்படுத்தல், விரிதாள் போன்ற அலுவலகத் தன்னியக்கமாக்கல் மென்பொருள்களைப் பயன்படுத்தல்
பின்வருவனவற்றில் எது நீண்டநேரத்துக்கு கணினியுடன் பணியாற்றும் போது ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது?
அதிக மகிழ்ச்சிகரமான கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுதல்
சுட்டியிலும் பார்க்கச் சாவிப்பலகையை அடிக்கடி பயன்படுத்தல்
ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் ஓய்வெடுத்தல்
சிறிய திரையுள்ள கணினியைப் பயன்படுத்தல்
தகவல் தொடல்பாடல் தொழினுட்ப (ICT) முறைமையொன்றில் தவறான பயன்படுத்துகைக்கு உதாரணமாகக் கொள்ளமுடியாதது பின்வருவனவற்றுள் எது?
ஸ்பாம் அஞ்சல்களை(spam) அனுப்புதல்
வைரசுகள் பரவுதல்
சமூக ஊடகப் பக்கங்களில் தீங்கிழைக்கும் வதந்திகள் (malicious gossip) பரவுதல்
blog இணையப் பக்கத்தை உருவாக்கல்
பின்வருவனவற்றைக் கருதுக:
A- கற்றல் பொருட்களை நிகழ்நிலையில் மாணவர்கள் அணுகுதல் B- அரசாங்கத்தால் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களைப்பெற செல்லிடப்பேசிகளை விவசாயிகள் பயன்படுத்தல் C- வாகன வருமானவரிப்பத்திரத்தை நிகழ்நிலையில் புதுப்பித்தல்
மேற்குறித்த நடவடிக்கைகளில் எவை இலத்திரனியல் அரச சேவைகளிற்கு (e-governance) உதாரணங்களாகும்?
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
தரவு உள்ளீட்டு செய்குநர்(Data Entry Operator) ஒருவருக்கு மீளவரும் தகைவுக்காய நோய்(RSI) பீடிக்கப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது. அவரது இவ் உடல்நிலைக்கு வேலைத்தளச் சூழலும் ஒரு காரணமா எனக் கண்டறிவதற்குப் பின்வரும் வினாக்களில் எதனை அவரிடம் கேட்க வேண்டும்?
A உங்கள் கைகளினதும் விரல்களினதும் வேதனையை நீக்குவதற்கு ஏற்ற முறையில் விசைப்பலகையும் சுட்டியும் சரியான முறையில் தானப்படுத்தப்பட்டுள்ளனவா? B- நீங்கள் உகந்த நிலைப்பாட்டுடன் (posture) அமர்ந்து வேலை செய்கிறீர்களா? C-கண்ணின் உறுத்தலைத் தவிர்ப்பதற்கு நீங்கள் சீரான இடைவேளையில் ஓய்வு எடுக்கிறீர்களா?
B, C ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
உங்கள் வீட்டுக் கணினியில் வைரஸ் தொற்றின் விளைவொன்றாக இல்லாதிருப்பதற்கு மிகவும் சாத்தியமானது பின்வருவனவற்றுள் எது?
பயனரின் செயல்களுக்கு கணினி பதிலளிக்காமை
கணினி வன்பொருளுக்கு நிரந்தர பாதிப்பு
இணைய அணுகல் மெதுவாக நடைபெறல்
மென்பொருள் ஒழுங்காக வேலை செய்யாது விடல்
பின்வரும் நிகழ்வைக் கருதுக:
பியுமி கடந்த ஆண்டு க.பொ.த.(உ.த.) பரீட்சையில் சித்தியடைந்தாள். அவள் சொல் முறைவழிப்படுத்தல், விரிதாள், மின்னணு முன்வைப்பு மென்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்தத்தக்கவள். அவள் அறிக்கைகள், நூல்கள், சஞ்சிகைகள் போன்ற ஆவணங்களை வடிவமைத்துத் தயாரிக்கத்தக்கவள்.
பின்வருவனவற்றில் எவை அவளுடைய ஆற்றல்களை அடிப்படையாகக் கொண்டு அவளுக்குக் கிடைக்கத்தக்க தொழில் வாய்ப்புகளாகும்.
வலை உருவாக்குநர் (Web Developer) கணினிப் பிரயோக உதவியாளர் (Computer Application Assistant)
வலை உருவாக்குநர்(Web Developer), தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) முறைமைப் பகுப்பாய்வாளர் (System Analyst)
உங்கள் கணினியை அங்கீகாரமற்ற தொலை அணுகலிலிருந்து (remote access) பாதுகாக்கப் பயன்படுத்தத்தக்க மிகப் பொருத்தமான கருவி யாது?
வைரஸ் வருடி (virus scanner)
தீச்சுவர் (fire wall)
ஸ்பாம் எதிர் மென்பொருள் (anti-spam software)
ஆளி (Switch)
பின்வரும் இரு கூற்றுகளையும் கருதுக:
கூற்று A - சமூக ஊடகங்களை மிகையாகப் பயன்படுத்துவதன் விளைவாக முகத்திற்கு முகமான தொடர்பாடல் திறன்கள் குறையலாம். கூற்று B- சமூக ஊடகங்கள் பொருள்களினதும் சேவைகளினதும் விற்பனையை மேம்படுத்துவதற்குச் சந்தைப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தலாம்.
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த இரு கூற்றுகள் தொடர்பாகச் செல்லுபடியாகும்?
A- CRT காட்சி அகங்களை LED திரைகளினால் மாற்றீடு செய்வதன் மூலம் ஒரு பாடசாலைக் கணினி ஆய்வு கூடத்தைத் தரமுயர்த்தல்(upgrade) B-பொது நூலகங்களில் கணினிப்படுத்தல் வசதிகளையும் இணைய வசதிகளையும் வழங்கல். C- பொது இடங்களில் இலவச Wi-Fi வசதிகளைவழங்கல்.
A, B, Cஆகிய எல்லாம்
A, Cஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
ஒரு தனிநபர் தனது வீட்டுக் கணினியை வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க நினைத்தார். பின்வருவனவற்றுள் இத்தேவைக்கு உதவியாக அமையாதது எது?
A- ஒருவர் தனது வாகனத்தின் அரசிறை உத்தரவுச்சீட்டுக்காக நிகழ்நிலை (online) மூலம் பெறல். B- மாணவர்கள் தமது பரீட்சைத் திணைக்களத்தின் வலைத்தளத்தினில் கையாளல். C- பாடசாலைப் பிள்ளைகளுக்கு நூல்களை வழங்குவதற்காக ஒரு பாடசாலை நூலகம் ஒரு தன்னியக்க முறைமையைப் பயன்படுத்தல்.
A மாத்திரம்
B மாத்திரம்
A, B, Cஆகிய எல்லாம்.
A, B, ஆகியன மாத்திரம்
பின்வரும் நிகழ்வைக் கருதுக:
“ஒரு பொதுக் கணினி ஆய்வுகூடத்தில் உள்ள ஒரு கணினியில் ஒரு பயனர் X இனால் ஒரு கடவுச்சொல்லின் மூலம் பாதுகாத்துத் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினுள்ளே வேறொரு பயனர் Yபிரவேசித்து மாற்றஞ் செய்துள்ளார்.”
மேற்குறித்த நிகழ்வுக்குப் பின்வருவனவற்றுள் எது காரணமாக இருக்கலாம்?
பயனர் X தனக்குரியதாக அமையாத ஓர் உறையில் கோப்பினைத் தேக்கி வைத்துள்ளார்.
பயனர் X இனால் தரப்பட்டுள்ள கடவுச்சொல் எளியதும் எளிதாக ஊகிக்கப்படத்தக்கதும் ஆகும்.
கோப்புக்குத் தரப்பட்டுள்ள பெயர் மிகக் குறியது.
பயனர் X தொடக்கக் கோப்பின் ஒரு நகலைப் பேணுவதற்கு மறந்துள்ளார்.
A, B, C எனும் பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A-கணினி நச்சு நிரல்கள் இருக்கின்றனவா எனச் சரிபார்த்தல் B-கோப்புகளையும், அடைவுகளையும் (directories) முகாமை செய்தல் C-உள்ளீட்டு / வெளியீட்டுச் சாதனங்களை (devices) கட்டுப்படுத்தல்
மேற்குறித்த கூற்றுகளுள் எவை பணிசெயல் முறைமையின் சில தொழில்களை வகைகுறிக்கின்றன?
A, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
B, C ஆகியன மாத்திரம்
தடைப்படாத வலு வழங்கல் (UPS) அலகு கணினி முறைமைகளின் வன்பொருள் மட்டத்தின் பாதுகாப்பினை வழங்குவதற்குப் பயன்படுத்தலாம். UPS அலகின் தொழிற்பாடு தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியானது எது / எவை?
A-மின்வலு சடுதியாகத் இல்லாது போதுதல், வலு மாற்றங்கள் ஆகிய இடர்களிலிருந்து கணினி முறைமைகளைப் பாதுகாத்தல் B-கணினி நச்சு நிரல்களிலிருந்து கணினி பாதுகாத்தல் C-வெளிநபர்கள் அனுமதியின்றி கணினியினுள் பிரவேசிப்பதிலிருந்து கணினி முறைகளைப் பாதுகாத்தல்
A மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகியன எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
1960 களிலிருந்து கணினி வன்பொருள்களின் கிரயம் (cost) கணிசமான அளவில் குறைந்திருக்கும் அதேவேளை மென்பொருள்களின் கிரயம் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளமையை அபர்ணா அறிந்துள்ளார். அவர் இதற்கு காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:
A- தொழினுட்ப முன்னேற்றங்கள் வன்பொருளின் கிரயத்தைக் குறைக்கின்றன. B- மென்பொருளின் சிக்கற் தன்மையை அதிகரிக்கச் செய்தல் மென்பொருள் கிரயத்தை அதிகரிக்கச் செய்கின்றது.
மேற்குறித்த காரணங்கள் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் எதனை ஏற்றுக்கொள்ளலாம்?
A வலிதானதன்றாக இருக்கும் அதேவேளை B வலிதாகும்
A,B ஆகிய இரண்டும் வலிதானவை
A வலிதாக இருக்கும் அதேவேளை B வலிதானதன்று
A,B ஆகிய இரண்டும் வலிதானவையல்ல
ஒரு சமூக ஊடக வலையத்தளத்தில் சந்தித்த ராஜன் என்ற நண்பனைச் சந்திப்பதற்கு செல்வதாக அருணனிடம் கமல் கூறுகின்றார். ராஜனைச் சந்திப்பதற்கு முன்னர் பின்வரும் விடயங்களைச் செய்யுமாறு கமலிடம் அருண் கேட்கின்றார்.
A- சமூக ஊடக வலையத்தளத்தில் தரப்பட்டுள்ள ராஜனின் தனிநபர் தகவலைச் செவ்வைபார்த்தல். B- ஒரு சமூக ஊடக வலையத்தளத்தில் சந்தித்த ஒரு புதிய நண்பரைச் சந்திப்பதற்குச் செல்வதாகக் கமலின் பெற்றோருக்கு அறிவித்தல். C- சந்திப்பதற்காகக் கமலின் வேறொரு நண்பனை வரவழைத்தல்.