தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
இணையம், உலகளாவிய வலை (WWW) என்பன தொடர்பான மிகப் பொருத்தமான கூற்றை இனங்காண்க.
இணையம் WWW வின் ஒரு சேவையாகும்.
இணையத்திற்கும் WWW விற்குமிடையே தொடர்பு எதுவுமில்லை.
இணையமும் WWW வும் ஒரே மாதிரியானவை.
WWW இணையத்தின் ஒரு சேவையாகும்.
உரையாடுதல் (chatting), ஒளித்தோற்ற உரையாடல் (video chatting), ஒளித்தோற்ற மாநாடு (video conferencing) ஆகியவற்றுக்கு ஓர் அமர்வைத் தாபிக்கும்போது பின்வருவனவற்றில் எது அத்தியாவசியமாகும் ?
வலைக் காம் (web cam)
மின்ன ஞ்சல் முகவரி (E-mail address)
இணையத்துக்கான தொடுப்பு
ஆள்க ளப் பெயர் (domain name)
மாணவன் ஒருவன் வெளிநாட்டில் வதிகின்ற நண்பன் ஒருவனுக்கு ஓர் அச்சிட்ட ஒளிப்படத்தின் ஓர் இலக்கமுறைப் பிரதியை (digital copy) அனுப்ப வேண்டியுள்ளது. பின்வரும் நடைமுறைகளைக் கருதுக :
A - ஓர் இலக்கமுறைக் கமராவைப் (digital camera) பயன்படுத்தி ஒரு பிரதியை எடுத்து, அதனை ஒரு விம்பக் கோப்பாகச் (image file) சேமித்த (save) பின்னர் மின்னஞ்சல் மூலம் அனுப்புதல் B - ஒளிப்படத்தைச் சாதாரண அஞ்சலில் அனுப்புதல் C - ஒளிப்படத்தை வருடி (scan), அதனை விம்பக் கோப்பாகச் சேமித்த பின்னர் மின்னஞ்சல் மூலம் அனுப்புதல்
மேற்குறித்த நடைமுறைகளில் எது எவை ஒளிப்படத்தை அனுப்ப உகந்தது உகந்தவை ?
A மாத்திரம்
B மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
இணையம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - இணையத்துடன் தொடுக்கப்படுவதற்கு ஒவ்வொரு இயந்திரத்திற்கும் IP எனப்படும் ஒருதனியான (unique) முகவரி தேவை. B - WWW ஆனது மின்னணு ஆவணங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. C - இணையத்தினூடாக அடையத்தக்க HTML ஆவணமானது வலைப் பக்கம் (webpage) எனப்படும்.
மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை ?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
இரு மாணவர்கள் தமது பாடசாலைக் கணினி ஆய்கூடத்தில் உள்ள இரு யந்திரங்களைப் பயன்படுத்தி ஒரே வலைக் கடப்பிடத்தை (website) அடைகின்றனர். அவ்விரு கணினிகளிலும் எவ்வேறுபாடு இருக்க வேண்டும் ?
வலை மேலோடிகள் (Web browsers)
IP முகவரிகள் (IP addresses)
இணையச் சேவை வழங்குநர்கள் (Internet Service Providers)
பணிசெயல் முறைமைகள் (Operating Systems)
URL http://www.srilanka.lk/web/guest/welcome இன் ஆள்களப் பெயர் (domain name) யாது ?
www.srilanka.lk
srilanka.lk
/web/guest/welcome
.lk
பின்வரும் மூன்று கூற்றுகளையும் கருதுக.
........A.... ஆனது ஒரு வலைக் கடப்பிடத்தை இனங்காணும் ஒருதனிப் (unique) பெயராகும். ..B... ஆனது இணையத்தில் அடையத்தக்க ஒரு கோப்பின் ஒருதனி முகவரியாகும். ....C.... ஆனது இணையத்தில் ஒரு யந்திரத்தை இனங்காணும் ஒருதனி எண்ணாகும்.
பின்வரும் எதன் மூலம் A,B,Cஆகியவற்றை முறையே சரியாகப் பிரதியிடலாம் ?
சீரான வள இடங்காணி (URL), IP முகவரி, ஆள்களப் பெயர் (domain name)
சீரான வள இடங்காணி, ஆள்களப் பெயர், IP முகவரி
ஆள்களப் பெயர், சீரான வள இடங்காணி , IP முகவரி
ஆள்களப் பெயர், IP முகவரி, சீரான வள இடங்காணி
இணையத்தில் அடையத்தக்க வலைப் பக்கங்களின் சேகரிப்புக்கு வழங்கும் பெயர்
இணையகம் (Intranet)
IP முகவரி (IP address)
வலைச் சேவையகம் (Web server)
வலைக் கடப்பிடம் (Web site)
பின்வருவனவற்றில் எது URL இன் ஆள்களப் பெயர்ப் (domain name) பகுதியைக் காட்டுகின்றது ? http://www.doenets.lk/exam/docs/examcal/cal-oct-2012.pdf?
pdf
cal-oct-2012.pdf
doenets.lk
http://
அமல் என்பவர் மீனாவிற்கு ஒரு மின்னஞ்சலை (email) அனுப்பி, Cc யைப் பயன்படுத்தி அதே அஞ்சலை நசீருக்கு நகல் செய்தார். அமல் Bcc யைப் பயன்படுத்தி ரசலிற்கும் ஒரு நகலை அனுப்பினார். பின்வருவனவற்றில் எது இந்நிகழ்வு தொடர்பாகச் சரியானது ?
நசீருக்குக் கிடைத்த மின்னஞ்சல் அதன் அனுப்புநராக அமலைக் காட்சிப்படுத்தவில்லை.
நசீருக்குக் கிடைத்த மின்னஞ்சல் அதன் வேறொரு பெறுநராக ரசலைக் காட்சிப்படுத்தவில்லை.
மீனாவிற்குக் கிடைத்த மின்னஞ்சல் அதன் அனுப்புநராக அமலைக் காட்சிப்படுத்தவில்லை.
மீனாவிற்குக் கிடைத்த மின்னஞ்சல் அதன் வேறொரு பெறுநராக நசீரைக் காட்சிப்படுத்தவில்லை
ஆள்களப் பெயர் முறைமை (DNS) சேவையகம் ..... A...... யினை .........B...... ஆக மொழிமாற்றும்.
மேற்குறித்த கூற்றின் A, B எனும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது ?
A = உயர் மட்ட ஆள்க ளம் (top level domain) B = IP முகவரி
A= இணைய முகவரி (URL) B = IP முகவரி
A = மின்ன ஞ்சல் முகவரி (email address) B) = IP முகவரி
A = IP முகவரி B = இணைய முகவரி
பின்வருவனவற்றுள் எது இணையப்பக்கத்தைத் தனித்துவமாக அடையாளப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது ?
ஆள்களப் பெயர் (domain name)
இணையச் சேவையகப் பெயர் (web server name)
IP முகவரி
சீரான வள இடங்காணி (URL)
கணினி வலையமைப்புகள் (computer networks) தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானவை எவை ?
A - கணினி வலையமைப்பு செயலிழந்தால் அல்லது நெருக்கடி நிலையிலிருந்தால் பரிமாறிய வளங்களை அணுகுவது சிரமம் B - கணினி வலையமைப்பொன்றை உருவாக்குவதற்கு எப்போதும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் வடங்களின் மூலம் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். C- கணினி வலையமைப்பில் மென்பொருள்கள் நடுநிலையாக்கப்பட்டு முகாமைப்படுத்தப்படலாம்.
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
இணையத்திலுள்ள ஒவ்வொரு கணினியும் தனித்துவமான முகவரியைக் கொண்டுள்ளது. அது
IP முகவரி ஆகும்.
மின்ன ஞ்சல் முகவரி (Email address) ஆகும்.
URL ஆகும்.
ஆள்களப் பெயர் (Domain name) ஆகும்.
http://moodle.scnet.lk/local/index.html இன் உடன்படுநெறிமுறைப் (protocol) பகுதியைக் காட்டுவது பின்வருவனவற்றுள் எது ?
index.html
.html
http
moodle.scnet.lk
உலகளாவிய வலை (www) தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A- HTML மூலம் இணையப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. B- www என்பது இணையத்தினூடாக அணுகக்கூடிய ஒன்றுடனொன்று தொடர்புடைய மீபாட (hypertext) ஆவணங்களின் முறைமையாகும். C- ஓர் இணையத்தளம் பல இணையப்பக்கங்களை உள்ளடக்கியிருக்கும்.
மேற்குறித்தவற்றுள் சரியான கூற்றுகள் எவை ?
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - வீட்டிலிருந்து இணையத்துடன் இணைவதற்கு இணையச் சேவையாளர் (ISP) தேவை. B - இணையத்தில் உள்ள ஒவ்வொரு சேவையகக் கணினியும் (Server computer) ஒரு தனியான முகவரியைக் கொண்டிருத்தல் வேண்டும். C - மின்னஞ்சலுடன் இணைக்கத்தக்க உயர்ந்தபட்சக் கோப்புப் பருமனை (File size) விஞ்சாமல் எக்கோப்பையும் மின்னஞ்சலுடன் இணைக்கலாம். மேலுள்ளவற்றுள் சரியான கூற்றுகள் யாவை ?
A, B ஆகியன மாத்திரம்.
A, C ஆகியன மாத்திரம்.
B, C ஆகியன மாத்திரம்.
A, B, C ஆகிய எல்லாம்.
பின்வருவனவற்றில் எது இணையம், உலகளாவிய வலை (www) ஆகியன தொடர்பாகச் சரியானது ?
இணையம் உலகளாவிய வலையின் ஒரு சேவையாகும்.
இணையமும் உலகளாவிய வலையும் ஒன்றேயாகும்.
உலகளாவிய வலை இணையத்தின் ஒரு சேவையாகும்.
இணையத்திற்கும் உலகளாவிய வலைக்குமிடையே எதுவித தொடர்பும் கிடையாது.
http://www.bbc.com/sport/cricket என்னும் சீரான வள இடங்காணியின் (URL) ஆள்களப் பெயர் (Domain name) பின்வருவனவற்றுள் எதன் மூலம் காட்டப்பட்டுள்ளது ?
bbc.com/sport
bbc.com/sport/cricket
http://www.bbc.com
bbc.com
ராஜன் தனது நண்பர்களில் ஒருவருக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டச்சிட்டுக் கொண்டிருந்தபோது ஏற்பட்டவொரு தவறின் காரணமாக மின்னஞ்சல் பிரயோகம் தற்செயலாக மூடப்பட்டது. அவன் தனது முடிக்காத மின்னஞ்சலை எந்த உறையில் தேட வேண்டும் ?
Draft
Inbox
Sent
Trash
URL"http://www.doenets.lk/exam/” ஐக் கருதுக. இங்கு “doenets.lk” ஆனது
ஆள்களப் பெயர் (domain name) ஆகும்.
மீயுரை மாற்றுச் செம்மை நடப்பு வழக்கு (Hypertext Transfer Protocol) ஆகும்.
உரிய வளம் உள்ள இடத்தின் பாதை ஆகும்.
வளம் (resource) ஆகும்.
உரிய URL அறியப்படாதபோது பின்வரும் எதனைப் பயன்படுத்தி ஒரு வலைத்தளத்தில் உள்ள தகவல்களைக் கண்டுபிடிக்கலாம்?
தேடற் பொறி (search engine)
கோப்பு மாற்றுச் செம்மை நடப்பு வழக்கு (FTP)
மின்ன ஞ்சல் சேவையகம் (email server)
ஆள்களப் பெயர்ச் சேவையகம் (domain name server)
அஜித்திற்கும் வேறு மூவருக்கும் அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலின் பின்வரும் கூறைக் கருதுக.
To : ajith@doe.lk cc : rizvi@nie.lk, kumar@school.net Bcc : frank@nie.lk Subject : Examination Results
மேலே காட்டப்பட்டுள்ளவாறு மின்னஞ்சலை நீர் ajith@doe.lk இற்கு அனுப்பினால், இக்கடிதம் கிடைத்துள்ளதாக அஜித் பார்க்கத்தக்க ஏனையோர் யாவர்?
ajith@doc.lk மாத்திரம்
ajith@doe.lk, rizvi@nie.lk உம் kumar@school.net உம் மாத்திரம்
ajith@doe.lk, rizvi@nie.lk, kumar@school.net உம் frank@nie.lk உம் மாத்திரம்
ajith@doe.lk உம் frank@nie.lk உம் மாத்திரம்
IP முகவரி 172.217.27.4 இல் www.google.com வலைத்தளம் இருக்குமெனின், google தளத்தில் IP முகவரியைக் கண்டுப்பிடிப்பதற்காக வலை மேலோடி மூலம் HTTP வேண்டுகோளை (request) அனுப்புவதற்குப் பின்வரும் எது பயன்படுத்தப்படும்?
DNS சேவையகம்
ஆள்களச் சேவையகம் (domain server)
அஞ்சற் சேவையகம் (mail server)
வலைச் சேவையகம் (web server)
ஒருவர் இணையத்தினூடாக ஓர் 200 MB கோப்பினை வேறொருவருக்கு அனுப்ப விரும்பினால், பின்வரும் எம்முறைகள் இந்நோக்கிற்கு உகந்தன?
A - அதனை ஒரு மின்னஞ்சலுடன் (e-mail) இணைத்து அனுப்புதல் B - கோப்பினை இடம் மாற்றுவதற்கு FTP சேவையைப் பயன்படுத்துதல் C - Google drive போன்ற ஒரு நிகழ்நிலைத் தேக்க இயக்கியைப் (online storage drive) பயன்படுத்தி உரிய இணைப்பை (link) அனுப்புதல்
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
உலகளாவிய வலையில் (WWW) உள்ள ஒவ்வொரு வலைப்பக்கமும் கொண்டிருக்கும் தனித்துவ அடையாளங்காணி (identifier) அழைக்கப்படுவது
மின்னஞ்சல் முகவரி
மீ இணை (hyperlink)
IP முகவரி
சீர்மை வள இடப்படுத்தி (URL)
இணையம் தொடர்பான செம்மை நடப்பொழுங்குகளை மாத்திரம் கொண்டுள்ள சேர்க்கை பின்வருவனவற்றுள் எது?
FTP, HTML, HTTP, SMTP
FTP, HTML, HTTP, TCP/IP
FTP, HTTP, SMTP, TCP/IP
HTML, SMTP, TCP/IP, URL
பின்வருவனவற்றுள் எச்சேர்க்கை இணையச் சேவைகளை மாத்திரம் வகைகுறிக்கின்றது?
மின்ன ஞ்சல், கோப்புப் பகிர்வு (file sharing), தொலை அணுகல், பல்லூடக ஓட்டம் (streaming of media)
கோப்புப் பகிர்வு, HTML குறிமுறை, தொலை அணுகல், தேடல் இயந்திரங்கள்
தொலை அணுகல், தேடல் இயந்திரங்கள், பல்லூடக ஓட்டம், வலைமேலோடிகள்
இடத்துரிப் பரப்பு வலையமைப்பு (LAN) பெரும்பரப்பு வலையமைப்பு (WAN) எனக் கணினி வலையமைப்பை வகைப்படுத்துவதற்கு பின்வருவனவற்றுள் எக்காரணி பயன்படுத்தப்படுகின்றது?
பணிசெயற் கதி
பயனர்களின் எண்ணிக்கை
கணினிகளின் எண்ணிக்கை
கணினிகளுக்கிடையிலான தூரம்( இட அமைவு)
பின்வருவனவற்றைக் கருதுக.
A- கணினிச் சாதனம் B- இணையச் சேவை வழங்குநர் (ISP) C- மொடம் D- தொலைபேசி இணைப்பு
சாதாரண அஞ்சலுடன் ஒப்பிடும்போது மின்னஞ்சலின் நன்மை / நன்மைகள் மேற்குறித்தவற்றில் எது / எவை?
A,B,C ஆகிய எல்லாம்
A, C ஆகியன மாத்திரம்
B மாத்திரம்
A மாத்திரம்
பின்வருவனவற்றைக் கருதுக.
A- ஒரு சேவையாக உட்கட்டமைப்பு (infrastructure as a service) B- ஒரு சேவையாக மேடை (platform as a service) C- ஒரு சேவையாக மென்பொருள்(software as a service)
முகிற் கணினிப்படுத்தலின் (cloud computing) பிரதான சேவைகள் மேற்குறித்தவற்றில் எவை?
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, C ஆகியன மாத்திரம்
பின்வருவனவற்றைக் கருதுக.
A- தகவல் பரிமாற்றம் B- வளத்தைப் பகிர்தல் C- கணினிகளுக்குப் பாதுகாப்பு
மேற்குறித்தவற்றுள் எது/ எவை கணினி வலையமைப்பின் நன்மை / நன்மைகளாகும்?
A மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
பின்வருவனவற்றுள் இணையம் மற்றும் உலகளாவிய வலை (WWW) தொடர்பாக சரியான கூற்று எது?
உலகளாவிய வலை இணையத்தின் ஒரு சேவையாகும்.
இணையமும் உலகளாவிய வலையும் ஒன்றாகும்.
இணையத்துக்கும் உலகளாவிய வலைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.
இணையம் உலகளாவிய வலையின் ஒரு சேவையாகும்.
பின்வரும் உறைகளில் எவை ஒரு மின்னஞ்சல் முறைமையின் கொடா உறைகள் (default Folders ) ஆகும்?
Inbox, Received, Draft, Sent
Inbox, Draft, Sent, Trash
Inbox, Delete, Sent , Trash
Inbox, Draft, Sent, Save
நீர் உமது பாடசாலையின் வகுப்பறைகளையும் ஆய்வுகூடங்களையும் வலையமைப்பாக்குவதற்குத் திட்டமிட்டால் நடைமுறைப்படுத்த வேண்டிய வலையமைப்பின் உகந்த வகை யாது?
VPN
LAN
WAN
MAN
பின்வரும் குறியீடுகளில் எது மின்னஞ்சல் முகவரியில் எப்போதும் உள்ளடக்கப்பட வேண்டும்?
/
_
:
@
வெவ்வேறு வகையான வலையமைப்பு வடங்களைக் காட்டும் A, B, C எனும் பின்வரும் விம்பங்களைக் கருதுக.
தனித்தியங்கும் மேசை கணினிகளிலும் பார்க்க ஒரு கணினி வலையமைப்பின் நன்மைகள் பின்வருவனவற்றில் யாவை?
A- வலையமைப்புடன் இணைக்கப்பட்ட அச்சுப்பொறி போன்ற ஒரு வன்பொருள் சாதனத்தைப் பகிர்தல் (sharing) B- வலையமைப்புடன் தொடுக்கப்பட்ட கணினிகளுக்கு உள்ள நச்சுநிரல் தாக்கங்களின் இடர் குறைதல் C- வலையமைப்பில் உள்ள பொறிகளுக்கிடையே கோப்புகளையும் கோப்புறைகளையும் (Folders) பகிர்தல்
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
வலையமைப்புக்கான தரவு ஊடுகடத்தல் ஊடகமொன்றினை தெரிவுசெய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் பின்வருவனவற்றுள் எவை?
A-தரவு ஊடுகடத்தல் வீதம் (Data transmission rate) B-வலையமைப்பின் வீச்சு (The range of the network) C-கிரயமும் நிறுவலின் இலகுதன்மையும் (Cost and ease of installation)
B, C ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
பின்வருவனவற்றில் எது சீரான வள இடங்காணி (URL) இன் சரியான வடிவமாகும்?
http://www.doenets.lk/exam/
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
ஓர் இடத்துரி வலையமைப்பை (LAN) ஒரு பெரும் பரப்பு வலையமைப்புடன் (WAN) இணைப்பதற்குப் பின்வரும் சாதனங்களில் எது பயன்படுத்தப்படும்?
சேவையகம் (server)
வலையமைப்பு இடைமுக அட்டை (NIC)
வழிப்படுத்தி (router)
குவியம் (hub)
பின்வருவனவற்றுள் எவை தரவுத் தொடர்பாடலுக்கு உதாரணங்களாகக் கருதப்படாலம்?
A-உள்ளக வலையமைப்பில் (Local Area Network) இரு கணினிகளுக்கிடையிலான தொடர்பாடல் B-இணையத்தினூடான தொடர்பாடல் C-செல்லிடத் தொலைபேசியைப் பாவித்து குறுஞ்செய்தி (SMS) களை அனுப்புதல்
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, C ஆகியன மாத்திரம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A-ஒவ்வொரு இணையத்தளமும் தமக்குரிய தனித்துவமான சீரான வள இடங்காணி (URL) ஐக் கொண்டிருக்கும். B- இலத்திரனியல் ஆவணத்திலுள்ள மீஇணை (hyperlink) என்பது அதே ஆவணத்திலுள்ள வேறோர் இடத்தையோ அல்லது முற்றாக புதிய ஆவணத்தையோ இணைக்கும் ஒரு மூலகமாகும். C- மீஉரை பரிமாற்று நெறிமுறை(http) இணையத் தரவுகளைப் பரிமாற்றுவதற்கு பயன்படுத்தப்படும்.
மேற்கூறியவற்றுள் சரியானவை எவை?
A, B மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
B, C மாத்திரம்
A, C மாத்திரம்
ஓர் இணையத்தினால் வழங்கப்படும் சேவைகளை வகை குறிப்பவை பின்வருவனவற்றுள் எவை?
மின்னஞ்சல், உலகளாவிய வலை
உள்ளக வலையமைப்பு, பெரும் பரப்பு வலையமைப்பு
தேடல் இயந்திரங்கள், பெரும்பரப்பு வலையமைப்பு
மின்னஞ்சல் , உள்ளக வலையமைப்பு
கீழேயுள்ள வரைபடத்தில் A, B என்பன இரு நாடுகளின் வலையப்பினைக் குறித்துக் காட்டுகின்றன. இவ்வரைபடத்தில் காட்டப்படும் வலையமைப்பு வகை யாது?
பெரும் பரப்பு வலையமைப்பு (WAN)
பெருநகர்ப் பரப்பு வலையமைப்பு (MAN)
நடமாடும் வலையமைப்பு (Mobile Network)
இடத்துரி வலையமைப்பு (LAN)
".......................என்பது இணையத்தின் ஒரு சேவையாகும்."
பின்வருவனவற்றில் எது இடைவௌியை நிரப்புவதற்குப் பொருத்தமானது?
HTTP
வலை மேலோடி (web browser)
IP முகவரி
மின்னஞ்சல்(Email)
பின்வருவனவற்றுள் எது இணையத்தின் தேடல் இயந்திரத்திற்கு (search engine) உதாரணமாகும்?
கூகிள் (Google)
ஓபன் ஓஃபிஸ் (Open Office)
மைக்சொப்ட் வின்டோஸ் (Microsoft Windows)
உபுந்து (Ubuntu)
இணையத்திற்குப் பிரவேசிப்பதற்குப் பின்வருவனவற்றில் எது அத்தியாவசியமானதன்று?
வலை மேலோடி
வலையமைப்பு இடைமுக அட்டை
IP முகவரி
இணையச் சேவையாளரின் சேவைகள்
பின்வருவனவற்றுள் மின்னஞ்சலை (e-mail) அனுப்பும்போது அவசியத் தேவையாக அமையாதது எது?
அனுப்புபவரின் கையொப்பம்
இணையத்திற்கான தொகுப்பு
பெறுபவரின் மின்னஞ்சல் முகவரி
கணினி போன்ற ஒரு சாதனம்
பின்வரும் உருவில் ஒரு வகையான வலை மேலோடியின் (web browser) கருவிப் பட்டையின் (Tool bar) ஒரு பகுதி காணப்படுகின்றது. செயற்பாடு பொத்தான் மீது சொடுக்கும் போது (click) மிகப் பொருத்தமான விளைவைத் தெரிவு செய்க.
வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்திற்கு (homepage) எப்போதும் செல்லும்
வலை மேலோடியை மூடும் (close)
அடுத்த வலைத்தளத்திற்குச் செல்லும்
முந்திய வலைப் பக்கத்திற்கு அல்லது வலைத்தளத்திற்குச் செல்லும்
பின்வரும் கூற்றுக்களை கருதுக:
A. முறுக்கிணை (Twisted pair) வடங்கள் தரவுகளை ஊடுகடத்தும் ஊடகமாகச் செம்பைப் பயன்படுத்துகின்றன. B. ஒளியியல் நார் (Optical fibre) வடங்கள் தரவுகளை ஊடுகடத்துவதற்கு ஒளி அலைகளைப் பயன்படுத்துகின்றன. C. ஒளியியல் நார் வடங்களிலும் பார்க்க முறுக்கிணை வடங்களின் தரவு ஊடுகடத்தல் கதி கூடியதாகும்.
மேற்குறித்த கூற்றுக்களில் எவை சரியானவை?
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
இடத்துரி வலையமைப்பினுள் (LAN) நவீன மடிக்கணினிப் (Laptop) பாவனையாளருக்கு அதை இயங்குநிலையில் அங்குமிங்கும் கொண்டு செல்வதற்கு அதிகூடியளவு வசதியை வழங்கக்கூடிய ஊடகம் பின்வருவனவற்றுள் எது?
ஓரச்சு வடம்
வானொலி அலை
முறுக்கிணைக் கம்பிச் சோடி
ஒளியியல் நார்கள்
கீழேயுள்ள சீரான வள இடங்காணியைக் (URL) கருதுக. மேலேயுள்ள URL இன் பகுதிகள் A,B,C என்பவற்றைச் சரியாக அடையாளம் காட்டுவது பின்வருவனவற்றுள் எவை?
இணையம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
A- ஒரு கணினியை (தனித்துவமாக) இனங்காண்பதற்கு IP முகவரி பயன்படுத்தப்படுகின்றது. B- ஒரு வலைப்பக்கத்தை (தனித்துவமாக) இனங்காண்பதற்கு URL பயன்படுத்தப்படுகின்றது. C- WWW என்பது இணையத்தின் ஒரு சேவையாகும்.
B, C ஆகியன மாத்திரம்
A, Cஆகியன மாத்திரம்
A, B, Cஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
பின்வரும் வரிப்படத்தைக் கருதுக. பின்வரும் சாதனங்களில்(device) எது மேற்குறித்த வரிப்படத்தில் காணப்படுகின்றவாறு இடத்துரி வலையமைப்பில் (LAN) உள்ள A ஐ வகைகுறிக்கின்றது?
நுழைவாயில் (Gateway)
வலையமைப்பு இடைமுக அட்டை (NIC)
ஆளி (Switch)
மோடெம் (Modem)
இரு வெற்றிடங்கள் உள்ள பின்வரும் கூற்றைக் கருதுக:
"இணையம் என்பது ................................ ஆக இருக்கும் அதேவேளை வலை என்பது ................................. ஆகும். "
மேற்குறித்த கூற்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எவை ஒழுங்கு முறையில் அமைந்துள்ள மிகப் பொருத்தமான பதங்கள் ஆகும்?
சேவையகங்களின் திரட்டல், வலையமைப்புத் தொடர்பு
தகவல் வளம், பௌதிகத் தொடர்பு
கணினி வலையமைப்புகளின் வலையப்பு, சீரான வள இடங்காணி (URL)
கணினி வலையமைப்புகளின் வலையமைப்பு, தகவல் திரட்டல்
"நுண்ணலை (micro wave), செங்கீழ் அலை(infrared wave), வானொலி அலை (radio wave) என்பன..................... இற்கு உதாரணங்களாகும். "
மேலுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகவும் பொருத்தமான சொற்றொடர் பின்வருவனவற்றுள் எது?
பாதுகாப்பற்ற ஊடகங்கள் (unprotected media)
வழிகாட்டப்படாத ஊடகங்கள் (unguided media)
வரைப்புற்ற ஊடகங்கள் (bounded media)
வழிகாட்டி ஊடகங்கள் (guided media)
பின்வரும் சேர்மானங்களில் எது இணையத்தின் சேவைகளை மாத்திரம் காட்டுகின்றது?
மின்னஞ்சலும் வலை மேலோடியும்
மின்னஞ்சலும் கோப்பு மாற்றமும்
HTTP உம் கோப்பு மாற்றமும்
மின்னஞ்சலும் HTTP உம்
மின்னஞ்சல் சேவையை வழங்கும் அஞ்சல் சேவையகமானது(mail server) பாரம்பரிய அஞ்சல் முறையில் ............ இன் தொழில்களை ஆற்றுகின்றது. மேற்குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பொருத்தமான பதம் பின்வருவனவற்றுள் எது?