தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தைப் (System Development Life Cycle - SDLC) பயன்படுத்தி ஒரு தகவல் முறைமையை (information system) விருத்தி செய்யும் போது பின்வருவனவற்றில் எது இடமிருந்து வலமாகச் செயற்பாடுகளின் (activities) சரியான தொடரியாகும் (sequence)?
சாத்தியக்கூற்றுக் கற்கை (feasibility study) முறைமை வடிவமைப்பு (system design) - முறைமைப் பகுப்பாய்வு(system analysis) - முறைமையை நடைமுறைப்படுத்தல் (system implementation)
முறைமைப் பகுப்பாய்வு - முறைமையை நடைமுறைப்படுத்தல் – முறைமை வடிவமைப்பு - சாத்தியக்கூற்றுக் கற்கை
சாத்தியக்கூற்றுக் கற்கை முறைமை வடிவமைப்பு - முறைமையை நடைமுறைப்படுத்தல் - முறைமைப் பகுப்பாய்வு
சாத்தியக்கூற்றுக் கற்கை முறைமைப் பகுப்பாய்வு முறைமை வடிவமைப்பு - முறைமையை நடைமுறைப்படுத்தல்
கணினிப்படுத்தலுக்குப் (computerization) பின்வருவனவற்றில் எது உகந்ததன்று?
ஒரு பாடசாலையில் மாணவர் அனுமதிகள்
பாடசாலை நூலகம்
ஒரு பரீட்சையில் கட்டுரை வகை விடைகளுக்குப் புள்ளி வழங்குதல்
விடைத்தாள்களுக்குப் புள்ளிகளை வழங்கிய பின்னர் மாணவர் சராசரிகளையும் தரங்களையும் கணினிப்படுத்தல்
பின்வரும் செயற்பாடுகளைக் கருதுக.
A- நூலகத்திற்குப் பொறுப்பான ஆசிரியரைப் பேட்டி காணல் B- நூலகத்தின் வரலாற்றையும் அது 20 ஆண்டுகளுக்கு முன்னர் தாபிக்கப்பட்ட விதத்தையும் விவரிக்கும் ஒரு சஞ்சிகைக் கட்டுரை (ஆவணம்) C- நூலகம் மாணவர்களினால் எங்ஙனம் பயன்படுத்தப்படுகின்றது என்பதை அவதானித்தல்
ஒரு பாடசாலைக்கான நூலக முகாமை முறைமையை விருத்தி செய்வதில் உள்ள தேவைகளைச் சேகரிப்பதற்கு மேலுள்ளவற்றில் எதனை/ எவற்றைப் பயன்படுத்தலாம்?
A மாத்திரம்.
C மாத்திரம்.
A, C ஆகியன மாத்திரம்.
A, B, C ஆகிய எல்லாம்.
முறைமைச் செயற்றிறன் (System functionality), பயனியின் தேவைகளை நிறைவேற்றல் (meeting user requirements), வளங்களின் பயனுறுதிவாய்ந்த பயன்பாடு (effective use of resources), கிரயப் பயனுறுதி (cost effectiveness) ஆகியன முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் (SDLC) ..................... அவத்தையில் (phase) கருதப்படுகின்றன. மேற்குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எது மிகவும் உகந்தது ?
முறைமைப் பகுப்பாய்வு (system analysis)
முறைமை வடிவமைப்பு (system design)
செய்முறைப்படுத்தல் (implementation)
இயலுமை ஆய்வு (feasibility study)
முறைமை அபிவிருத்தியில் பயன்படுத்தப்படும் நேரடிச் செய்முறைப்படுத்தல் (direct implementation) என்பதைப் பின்வருவனவற்றில் எது மிகச் சிறந்த விதத்தில் விவரிக்கின்றது ?
புதிய முறைமை ஏற்கெனவே உள்ள முறைமையுடன் அறிமுகஞ் செய்யப்படும்.
ஒரு கூறு செய்முறைப்படுத்தப்பட்டு, அது வெற்றிகரமானதெனின், மற்றைய கூறுகள் செய்முறைப்படுத்தப்படும்.
கைமுறை (manual) முறைமையின் செய்பணி நிற்பாட்டப்பட்டு, புதிய முறைமை புகுத்தப்படும்.
புதிய முறைமை பகுதிகளாகச் செய்முறைப்படுத்தப்படும்.
முறைமை அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - வன்பொருளிலும் மென்பொருளிலும் மாற்றங்களைச் செய்தல் B - பயனுறுதி வாய்ந்த விதத்தில் வழிப்படுத்திய பின்னர் முறைமையில் கண்டுபிடிக்கப்படும் வழுக்களைத் திருத்தல் C - முறைமைக்குப் புதிய பயனித் தேவைகளை (user requirements) அறிமுகஞ் செய்தல்
முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் (life cycle) பராமரிப்பு அவத்தையுடன் (maintenance phase) மேற்குறித்த எச்செயற்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளன ?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றில் எது முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தில் (SDLC) தரப்பட்டுள்ள கட்ட நிலைகளின் (phases) சரியான வரிசையைக் காட்டுகின்றது ?
வடிவமைப்பு (design), குறிமுறை (coding), சோதனை (testing)
வடிவமைப்பு, இயலுமைக் கற்கை (feasibility study), பராமரிப்பு (maintenance)
வடிவமைப்பு, சோதனை, இயலுமைக் கற்கை
சோதனை, பராமரிப்பு, இயலுமைக் கற்கை
பாடசாலை ஒன்றில் ஒரு புதிய தன்னியக்க (automated) நூலகத் தகவல் முறைமையை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அதிபர் தற்போதைய கைமுறை (manual) முறைமையை முற்றாக நிற்பாட்டி இப்புதிய முறை மையை நேரடியாகத் தொடக்குதல் அவ்வளவு பாது காப்பானதன்றென நம்புகின்றார். பின்வருவனவற்றில் எது அதிபரின் கரிசனையைக் குறித்து நிற்கும் பொருத்தமான முறைமை மாற்றலாகும் ?
நேர் (direct) அல்லது கட்ட நிலை (phased)
நேர் (direct) அல்லது மூலவகைமாதிரி (prototype)
சமாந்தர (parallel) அல்லது கட்டநிலை
சமாந்தர அல்லது மூலவகைமாதிரி
முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் (SDLC) படிமுறைகளான வடிவமைத்தல் (design) மற்றும் குறிமுறைப்படுத்தல் (coding) நிலைகளுக்குரிய இலக்காக அமையாதது பின்வருவனவற்றுள் எது ?
செய்நிரல்களை எழுதுதல்
பொருத்தமான இடைமுகப்புகளை உருவாக்கல்
பயனர்களின் தேவைப்பாடுகளை அடையாளம் காணல்
செய்நிரலாக்கும் மொழியைத் தெரிவு செய்தல்
பாடசாலையில் தற்போது பாவனையிலுள்ள கைமுறைத் (manual) தகவல் முறைமையைப் பிரதியீடு செய்யும் முகமாக கணினி அடிப்படையிலான புதிய மாணவர் தகவல் முறைமையினை (student information system) கிருஷ்ணா அபிவிருத்தி செய்துள்ளார். அவர் இரு முறைமைகளையும் இரண்டு மாதங்களுக்கு சமாந்தரமாகப் பயன்படுத்துமாறு ஆலோசனையை முன்வைக்கிறார். அவரது முன்வைத்தலுக்கான காரணம் பின்வருவனவற்றுள் எது ?
புதிய முறைமையின் செயலிழப்பால் ஏற்படும் இடையூறுகளைக் குறைத்தல்
புதிய முறைமையில் தீய மென்பொருள் (malfunction) செயல்படும் வாய்ப்புகளைக் குறைத்தல்
முறைமைக்கு ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் குறைத்தல்
பரீட்சிக்கவும் தவறுகளைத் திருத்தவும் (testing and debugging) எடுக்கும் நேரத்தினைக் குறைத்தல்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக :
A - முறைமையொன்றைப் பயன்படுத்தும்போது நிறைவேற்றப்பட வேண்டிய இலக்குகள் செயல்சார் தேவைகள் (functional requirements) ஆகும். B - வினைத்திறன் மற்றும் பயனர் - நட்புறவு (user-friendliness) என்பன செயல் சாராத தேவைகளுக்கு (non functional requirements) உதாரணங்க ளாகும். C - செயல் சார் தேவைகளும் செயல்சாராத தேவைகளும் முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்ட (SDLC) முறைமைப் பகுப்பாய்வுப் படிமுறையில் அடையாளங் காணப்படும். மேற்கூறியவற்றுள் சரியானவை எவை ?
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
கீழே தரப்பட்ட முற்றுப்பெறாத வாக்கியத்தைக் கருதுக:
............... என்பது முறைமை விருத்தி வாழ்க்கை வட்டத்தின் (SDLC) ஒரு முக்கிய படிமுறையாகும். மேற்குறித்த வாக்கியத்தின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது ?
உங்கள் பாடசாலையில் நடைமுறையிலுள்ள கைமுறையிலான (manual) மாணவர் நிர்வாக முறைமையை தன்னியக்க முறைமையாக்கிய பின்பு, சமாந்தர அமுலாக்கலுக்குப் பதிலாக நேரடி அமுலாக்கல் முறை முன்மொழியப்பட்டது. பின்வருவனவற்றுள் நேரடி அமுலாக்கல் பற்றிய சரியான கூற்று எது ?
சமாந்தர அமுலாக்கலை விட நேரடி அமுலாக்கலுக்கு அதிக தொகை செலவாகும்.
நேரடி அமுலாக்கலுக்குத் தேவையான மனித வலு சமாந்தர அமுலாக்கலுக்குத் தேவையான மனித வலுவை விட அதிகமாகும்.
தன்னியக்க முறைமையில் பிரச்சினைகள் தோன்றுமிடத்து கைமுறை முறைமைக்கு மீண்டும் செல்லுதல் கடினமாகும்
நேரடி அமுலாக்கலுக்குச் சமாந்தர அமுலாக்கலை விட பாடசாலை காரியாலயத்தில் அதிகளவு பௌதிக இடம் தேவை.
உங்கள் பாடசாலை அதன் நூலக நடவடிக்கைகளைத் தன்னியக்க முறைமையாக்கத் தீர்மானித்துள்ளது. புதிய முறைமையின் தேவைப்பாடுகளை சேகரிக்கும் குழுவில் நீங்களும் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். இந்நோக்கத்திற்காக உங்கள் குழுவின் அங்கத்தவரொருவர் கீழ்வரும் நுட்பமுறைகளை (techniques) முன்மொழிகிறார்.
A- நேர்முகத்தேர்வினை நடாத்துதல் B - வினாக்கொத்தொன்றை விநியோகித்தல் C- ஆவணங்களை அவதானித்தல்
மேற்குறித்த நுட்பமுறைகளில் தகவல்களைச் சேகரிப்பதற்கு ஏற்றது எது ?
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
முறைமை விருத்தி ஆயுள் வட்டத்தில் இடம்பெறும் சில செயற்பாடுகள் A தொடக்கம் H வரை முகப்படையாளமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
A - முறைமை விருத்தி (System development) B - இயலுமை ஆய்வு (Feasibility study) C- முறைமையை அமுல்படுத்தல் (System implementation) D - முறைமையைப் பராமரித்தல் (System maintenance) E- பிரச்சினையை வரைவிலக்கணப்படுத்தல் (Problem definition) F- முறைமைப் பகுப்பாய்வு (System analysis) G - முறைமை வடிவமைப்பு (System design) H - சோதித்தல் (Testing)
இச்செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சரியான ஒழுங்குமுறை
A, E, H, B, F, G, C, D
C, B, G, F, A, D, E, H
E, B, F, G, A, H, C, D
G, F, B, A, E, C, D, H
முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் சோதனைப் (Testing) படிமுறையில் பின்வரும் செயற்பாடுகள் அடங்கியுள்ளன.
A - ஏற்புச் (Acceptance) சோதனை B - ஒருங்கிணைப்புச் (Integration) சோதனை C -முறைமைச் (System) சோதனை D - அலகுச் (Unit) சோதனை
மேற்குறித்த செயற்பாடுகளின் சரியான சோதனை வரிசை யாது ?
A, B, C, D
B, C, D, A
C, D, A, B
D, B, C, A
க.பொ.த. (சா.தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் மதிப்பிடுவதற்காக விண்ணப்பிப்பதற்கு தற்போது காணப்படும் கைம்முறைக்கு (Manual) பதிலாக ஒரு புதிய தொடரறா முறைமையை அறிமுகஞ் செய்வதற்கான ஒரு யோசனை உள்ளது. அந்த யோசனையுடன் தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - பிரேரிக்கப்பட்ட முறைமை மீளமதிப்பிடும் செயன்முறையின் வினைத்திறனை மேம்படுத்தும். B - பிரேரிக்கப்பட்ட முறைமை மீளமதிப்பிடும் செயன்முறையின் செம்மையை அதிகரிக்கச் செய்யும். C - பிரேரிக்கப்பட்ட முறைமை இணையத்திற்குப் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு இல்லாத பரீட்சார்த்திகளில் ஒரு மறையான விளைவைக் கொண்டிருக்கும்.
இக்கூற்றுகளில் எவை வலிதானவை
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பாடசாலை நூலகத்திலிருந்து நூல்களை ஒதுக்கி வைத்தல் (reserve) இப்போது பயனரால் ஒரு படிவத்தை நிரப்புவதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. நூல் கிடைக்கத்தக்கதாக இருக்கும்போது நூலகம் பயனருக்கு ஒரு கடிதத்தை அனுப்புவதன் மூலம் அறிவிக்கின்றது. சிலவேளைகளில் நூலகம் தவறுதலாகப் பிழையான பயனர்களுக்கு அறிவிக்கின்றது. நூலகர் நடப்புக் கையாட்சி முறைமைக்காக ஒரு புதிய தகவல் முறைமையை அறிமுகஞ் செய்வதற்கு உத்தேசித்துள்ளார். இப்புதிய முறைமையில் ஒரு பயனர் ஒரு நூலை நிகழ்நிலைமுறையாக (online) ஒதுக்கி வைக்கலாம். ஒதுக்கி வைக்கப்பட்ட நூல் இரவலாகப் பெறப்படுவதற்குக் கிடைக்கத்தக்கதாக இருக்கும்போது இப்புதிய முறைமையின் மூலம் பயனருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றது. புதிய முறைமை பிரச்சினை எதுவுமின்றித் தொழிற்படுகின்றமை உறுதிப்படுத்தப்படும் வரைக்கும் கையாட்சி முறைமை, புதிய முறைமை ஆகிய இரண்டும் தொழிற்பட வேண்டுமென நூலகர் தெரிவித்துள்ளார்.
நூலகரின் யோசனை தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - புதிய முறைமை ஒதுக்கி வைக்கும் செயன்முறையின் திறனை மேம்படுத்தும். B - புதிய முறைமை ஒதுக்கி வைக்கும் செயன்முறையின் செம்மையை மேம்படுத்தும். C - புதிய முறைமை இணையத்தை அணுகமுடியாத பயனர்களில் ஓர் எதிர்மறை விளைவைக் கொண்டிருக்கும்.
மேற்குறித்த கூற்றுகளில் செல்லுபடியானவை யாவை?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பாடசாலை நூலகத்திலிருந்து நூல்களை ஒதுக்கி வைத்தல் (reserve) இப்போது பயனரால் ஒரு படிவத்தை நிரப்புவதன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. நூல் கிடைக்கத்தக்கதாக இருக்கும்போது நூலகம் பயனருக்கு ஒரு கடிதத்தை அனுப்புவதன் மூலம் அறிவிக்கின்றது. சிலவேளைகளில் நூலகம் தவறுதலாகப் பிழையான பயனர்களுக்கு அறிவிக்கின்றது. நூலகர் நடப்புக் கையாட்சி முறைமைக்காக ஒரு புதிய தகவல் முறைமையை அறிமுகஞ் செய்வதற்கு உத்தேசித்துள்ளார். இப்புதிய முறைமையில் ஒரு பயனர் ஒரு நூலை நிகழ்நிலைமுறையாக (online) ஒதுக்கி வைக்கலாம். ஒதுக்கி வைக்கப்பட்ட நூல் இரவலாகப் பெறப்படுவதற்குக் கிடைக்கத்தக்கதாக இருக்கும்போது இப்புதிய முறைமையின் மூலம் பயனருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பப்படுகின்றது. புதிய முறைமை பிரச்சினை எதுவுமின்றித் தொழிற்படுகின்றமை உறுதிப்படுத்தப்படும் வரைக்கும் கையாட்சி முறைமை, புதிய முறைமை ஆகிய இரண்டும் தொழிற்பட வேண்டுமென நூலகர் தெரிவித்துள்ளார்.
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த தகவல் முறைமைக்கு மிக உகந்த நிறுவுதல் (deployment) அணுகுகையாக முன்மொழியப்பட்டுள்ளது?
சமாந்தரம் (parallel)
கட்டநிலை (phased)
நேரடி (direct)
சமாந்தரம், நேரடி ஆகிய இரண்டும்
முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்துடன் (SDLC) தொடர்புபட்ட நீர்வீழ்ச்சி மாதிரியம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது / எவை உண்மையானது / உண்மையானவை?
A - இம்மாதிரியத்தில் ஒவ்வொரு கட்டநிலையினதும் செயற்பாடுகள் அடுத்த கட்டநிலையில் உள்ள பணியைத் தொடங்குவதற்கு முன்பாக நிறைவேற்றப்படும். B - இம்மாதிரியம் ஓர் ஊடாட்ட விருத்தி மாதிரியத்தில் ஒரு முழு முறைமையாக விருத்திசெய்யப்படும் ஒரு தொடக்க அடிப்படை முறைமையை விருத்திசெய்வதற்கு உதவுகின்றது. C - இம்மாதிரியத்தில் பொதுவாகப் பயனர் ஆயுள் வட்டத்தின் முதற் கட்டநிலையிலேயே முறைமையைக் காண்பார்.
A மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
ஒரு புதிய முறைமையை நடைமுறைப்படுத்தும் நிலைமைக்குக் கொண்டு வருவதற்குப் பயன்படுத்தத்தக்க முறைமை நிறுவுதல் முறைகளின் நான்கு வகைகள் கிழே இடப்பக்க நிரலில் A - D முகப்படையாளமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. வலப் பக்க நிரலில் முகப்படையாளங்கள் P - S இனால் நான்கு வெவ்வேறு நிறுவுதல் முறைகளுக்கான விவரணங்கள் தரப்பட்டுள்ளன.
A - நேரடி நிறுவுதல்
P - ஒரு நிறுவகத்தின் தெரிந்தெடுத்த பயனர்களுக்குப் புதிய முறைமை (Direct deployment) நிறுவப்படும்.
B - சமாந்தர நிறுவுதல்
Q - ஒரு புதிய முறை நிறுவப்பட்டு ஒரு தொடர் படிமுறைகளில் (Parallel deployment) நடைமுறைப்படுத்தப்படும்.
C - வெள்ளோட்ட நிறுவுதல்
R- புதிய முறைமை நிறுவப்பட்டு விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு (Pilot deployment)மேற்படியும் முறைமைகள் (overlapping systems) இருந்தால் உடனடியாக நிற்பாட்டப்படும்.
D - கட்டநிலை நிறுவுதல்
S - பழைய முறைமைகளும் புதிய முறைமைகளும் குறித்த காலத்திற்கு (Phased deployment) ஒருமிக்கச் செயற்படுத்தப்படும்.
பின்வரும் எதன் மூலம் A - B நிறுவுதல் முறைமைகள் P - S விவரணங்களுடன் சரியாகப் பொருந்தச் செய்யப்படும்?
A → Q, B →S, C→P, D →R
A → R, B →P, C→S, D →Q
A → R, B →S, C→P, D →Q
A → R, B →S, C→Q, D →P
மென்பொருள் முறைமைச் சோதனையின் (software system testing) சரியான ஒழுங்குமுறையை பின்வருவனவற்றுள் எது காட்டுகின்றது?
ஏற்புச் சோதனை, ஒருங்கிணைப்புச் சோதனை, அலகுச் சோதனை, முறைமைச் சோதனை
முறைமைச் சோதனை, ஒருங்கிணைப்புச் சோதனை, ஏற்புச்சோதனை, அலகுச் சோதனை
அலகுச் சோதனை, ஏற்புச் சோதனை, முறைமைச் சோதனை, ஒருங்கிணைப்புச் சோதனை
அலகுச் சோதனை. ஒருங்கிணைப்புச் சோதனை, முறைமைச் சோதனை, ஏற்புச் சோதனை
ஒரு பாடசாலை நூலகத்தின் புத்தகங்களை இரவலாக வழங்கும் கருமபீடத்திலுள்ள ஒருவர் குறிப்பிட்ட வகையான தகவல் முறைமை வகையை பயன்படுத்துகிறார். இரவல் வழங்கும் கருமபீடத்தில் பயன்படுத்தப்படும் அம்மென்பொருளை மிகச் சிறந்த விதத்தில் விவரிப்பது எது?
நிறைவேற்று தகவல் முறைமை (Executive Information system)
தீர்மானத்திற்கு உதவும் முறைமை (Decision support system)
வல்லுநர் தகவல் முறைமை (Strategic information system)
பரிமாற்றச் செயன்முறை முறைமை (Transaction Processing system)
ஒரு முறைமையின் அடிப்படைக் கூறு அல்லாதது?
உள்ளீடு
முறைவழியாக்கம்
வெளியீடு
உற்பத்தி
பின்வரும் கூற்றுக்களைக் கருதுக
A - திருத்தமானது B - துரிதமாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். C - பெரும் தொகையான தகவல்களை கையாள்வது கடினம். D - வினைத்திறனான முறைவழியாக்கமாக காணப்படும். E - தகவல்களை பேணுவதற்கு பெரிய இடவசதி தேவை.
மேற்கூறியவற்றுள் இலத்திரனியல் தகவல் முறைமையின் பண்புகள் எவை?
A, B, C மட்டும்
A, B, D மட்டும்
A, B, C, D மட்டும்
A, B, C, D, E எல்லாம்
முறைமை விருத்தி தொடர்பான பின்வரும் கூற்றுக்களைக் கருதுக
A – முறைமையினை உருவாக்க தேவையான தொழினுட்ப வழங்களைக் கொண்டுள்ளனவா என்பது பற்றி ஆராய்தல். B – முறைமையினை இயக்க தேவையான மானுட, பௌதீக, நேரவளங்களைக் கொண்டுள்ளனவா என ஆராய்தல். C – முறைமையினை உருவாக்க தேவையான பொருளாதார வளங்கள் பற்றியும், செலவிடப்படும் பெறுமதிக்கு பொருத்தமான பயன்பாடு உள்ளனவா என்பது பற்றியும் ஆராயப்படும்.
A, B, C என்பன முறையே
தொழினுட்ப இயலுமை, செய்பணி இயலுமை, பொருளாதார இயலுமை
பொருளாதார இயலுமை, தொழினுட்ப இயலுமை, செய்பணி இயலுமை
செய்பணி இயலுமை, தொழினுட்ப இயலுமை, பொருளாதார இயலுமை
தொழினுட்ப இயலுமை, பௌதீக இயலுமை, பொருளாதார இயலுமை
முறைமைக்கு தேவையான தரவுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் நுட்பம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?
நேர்காணல்
வினாக்கொத்து
அவதானிப்பு
ஆராச்சி
"புதியமுறைமை எழுதப்பட வேண்டிய கணினி மொழி தெரிவு செய்யப்பட்டு பாச்சல்கோட்டுப்படங்கள்(Flow chart), தரவுப்பாச்சல் படங்கள்(Data Flow Diagram – DFD), போலிக்குறிமுறைகள், தரவுத்தளம், பயனர் இடைமுகம் என்பன வடிவமைக்கப்படுகின்றது."
முறைமை அபிவிருத்தி வட்டத்தின் எக்கட்டத்தில் இச்செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.
முறைமை வடிவமைப்பு (System Design)
முறைமையினை விருத்தி செய்தல்
தேவைகளை இனம்காணல்
முறைமையினை பராமரித்தல்
”முறைமையின் ஒவ்வரு கூறுகளுக்கும் தனித்தனியாக உள்ளீடுகளை வழங்கி வருவிளைவு செம்மை பார்க்கப்படும். ” இது எவ்வாறு அழைக்கப்படும்