தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
"வெற்றிக் குழாய்கள் திரான்சிற்றர்களினால் பதிலிடப்பட்டும் பின்னர் திரான்சிற்றர்கள் நுண் முறைவழியாக்கிகளினால் (microprocessors) பதிலிடப்பட்டும் இருந்தமையால் கணினிகளின் ....A... குறைந்துள்ளது. '' பின்வரும் பதங்களில் எது A யிற்குப் பொருத்தமானது ?
ஆற்றல்
பருமன்
நம்பகத்தகவு
வினைத்திறன்
“...B.... ஆனது தகவல் முறைமைகளினால் ....C...... ஆக முறைவழியாப்பப்பட்டுள்ளது. (processed).'' பதச் சோடிகளில் எது B,C ஆகியவற்றுக்குப் பொருத்தமானது?
தகவல், தரவு
தரவு , தகவல்
தரவு, அறிவுறுத்தல்கள்
அறிவுறுத்தல்கள், தகவல்
பின்வரும் கணினிச் சாதனங்களைக் கருதுக.
A - விசைப்பலகை (keyboard) B - வருடி (scanner) C - அச்சுப்பொறி D - ஒலிபெருக்கி
மேற்குறித்தவற்றில் எவை கணினியின் உள்ளீட்டுச் சாதனங்களாகப் பயன்படுத்தப்படலாம் ?
A, B ஆகியன
A, C ஆகியன.
C, D ஆகியன.
A, B, C , D ஆகிய எல்லாம்.
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - தற்போக்குப் பெறுவழி நினைவகம் (RAM) அழிதகு (volatile)நினைவகமாகும். B- வன்வட்டு (hard disk) துணைத் தேக்ககச் சாதனமாகும். C - நெகிழ்வட்டு (floppy disk) இறுவட்டிலும் (CD) பார்க்கக் கூடுதலான தரவுகளைத் தேக்கி வைக்கின்றது.
தேறித்தவற்றில் சரியானது சரியானவை?
A மாத்திரம்.
Cமாத்திரம்.
A, B ஆகியன.
B, C ஆகியன.
உருவிலிருந்து A, B, C ஆசியவற்றை இனங்காண்க
A= வலுக் குதை (sockct), B= PS/2 துறை (port). C= USB துறை
A= வலுக் குதை, B= தொடர்த் துறை, B= PS/2 துறை
A= வலுக் குதை, B= சமாந்தரத் தறை, C= தொடர்த் துறை
A= சமாந்தரத் தறை, B= தொடர்த் துறை, C= USB துறை
பின்வருவனவற்றில் தகவலுடன் ஒப்பிடும்போது தரவாகப் பாகுபடத்தக்கது யாது ?
அனுராதபுர நகரத்தின் சராசரி மாத வெப்பநிலை
பாடசாலையில் உள்ள ஆண், பெண் பிள்ளைகளின் சதவீதத்தைக் காட்டும் வட்ட வரைபு
வீட்டுத் தொலைபேசி எண்ணின் இறுதி நான்கு இலக்கங்கள்
கணிதத்திற்காகத் தரம் 10 இன் மாணவர்கள் பெற்ற உயர்ந்த பட்சப் புள்ளி
மாணவன் ஒருவன் ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதனைக் கணினியில் உள்ள ஒரு நிரந்தரத் தேக்ககச் (permanent storage) சாதனத்தில் (சாதனம் 1) சேமித்து வைக்கின்றான். பின்னர் அவன் இவ்வறிக்கையை ஒரு நண்பனுக்கு வழங்குவதற்காகத் தூக்கத்தக்க தேக்ககச் (portable storage) சாதனத்திற்குப் (சாதனம் 2) பிரதிசெய்கின்றான். சாதனம் 1, சாதனம் 2 ஆகியவற்றை வகை குறிப்பதற்குப் பின்வருவனவற்றில் எவை பொருத்தமானவை ?
முதன்மை நினைவகமும் (Main Memory) பளிச்சீட்டு நினைவகமும் (Flash Memory)
வன் வட்டும் (Hard Disk) இறுவட்டும் (Compact Disk (CD))
முதன்மை நினைவகமும் (Main Memory) இறுவட்டும் (Compact Disk (CD))
வன் வட்டும் (Hard Disk) முதன்மை நினைவகமும் (Main Memory)
ஒருவர் ஓர் இலக்கக் (digital) கமராவைப் பயன்படுத்தி ஓர் ஒளிப்படத்தை எடுத்துள்ளார். அவர் கமராவில் உள்ள காட்சியகத்தைப் (display) பயன்படுத்தி, அவ்வொளிப்படத்தைத் தனது நண்பர் ஒருவருக்குக் காட்டுகின்றார். இத்தோற்றப்பாட்டிலே கமராவின் தொழில்
ஒரு நூலகத் தகவல் முறைமையில் பயனர் ஒருவர் ஒரு புத்தகத்தின் தலைப்பை நுழைக்கும் போது தரவுத் தளத்தைத் தேடிய பின்னர் அதன் கிடைக்குமியல்பு காட்டப்படுகின்றது. பின்வருவனவற்றில் எது அம்முறைமையின் உள்ளீடு, முறைவழி, வருவிளைவு ஆகியவற்றின் சரியான வரிசையைக் காட்டுகின்றது ?
புத்தகத் தலைப்பு. புத்தகத்தின் கிடைக்குமியல்பு, தரவுத்தளத்தைத் தேடல்
புத்தகத் தலைப்பு , தரவுத்தளத்தைத் தேடல், புத்தகத்தின் கிடைக்குமியல்பு
தரவுத்தளத்தைத் தேடல், புத்தகத் தலைப்பு, புத்தகத்தின் கிடைக்குமியல்பு
தரவுத்தளத்தைத் தேடல் . புத்தகத்தின் கிடைக்குமியல்பு. புத்தகத் தலைப்பு
தரவிலிருந்து தகவலிற்கான பின்வரும் மாற்றீட்டினைக் கருதுக: X இனைப் பிரதியீடு செய்வதற்கு மிகப் பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது ?
காட்சிப்படுத்தல் (displaying)
செயன்முறைப்படுத்தல் (processing)
நிரல்படுத்தல் (programming)
பரீட்சித்தல் (testing)
அறிவுறுத்தல்களும் (instructions) தரவுகளும் (data) நேரடியாக மைய முறைவழி அலகிற்கு (CPU) பதுக்கு நினைவகத்தினூடாக ______________ இலிருந்து பெறப்படும். மேலேயுள்ள கூற்றின் வெற்றிடத்தை நிரப்புவதற்குச் சிறந்த பதம் பின்வருவனவற்றுள் எது?
இறுவட்டு
வன்வட்டு
பிரதான நினைவகம்
கணினி வலையமைப்பு
தொழினுட்ப அபிவிருத்தியில் வெற்றிடக் குழாய்கள் (vacuum tubes) திரிதடையங்களினால் (transistors) பிரதியிடப்பட்டன. இதன் விளைவாகக் கணினியில் ஏற்பட்ட மாற்றங்களைப் பின்வருவனவற்றுள் எது சரியாகக் காட்டுகின்றது ?
வேகம் குறைந்தது. மின்பாவனை அதிகரித்தது. பருமன் குறைந்தது.
வேகம் குறைந்தது. மின்பாவனை அதிகரித்தது. பருமன் கூடியது.
வேகம் கூடியது. மின்பாவனை குறைந்தது. பருமன் குறைந்தது.
வேகம் கூடியது, மின்பாவனை குறைந்தது, பருமன் கூடியது.
கணினி வலையமைப்புகள் (computer networks) தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானவை எவை ?
A - கணினி வலையமைப்பு செயலிழந்தால் அல்லது நெருக்கடி நிலையிலிருந்தால் பரிமாறிய வளங்களை அணுகுவது சிரமம் B - கணினி வலையமைப்பொன்றை உருவாக்குவதற்கு எப்போதும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் வடங்களின் மூலம் தொடுக்கப்பட்டிருக்க வேண்டும். C- கணினி வலையமைப்பில் மென்பொருள்கள் நடுநிலையாக்கப்பட்டு முகாமைப்படுத்தப்படலாம்.
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
தரவு ஊடுகடத்தல் தொடர்பான பின்வரும் கூற்றுகளுள் சரியானது / சரியானவை எது / எவை?
A - இருவழிபோக்கு (Full duplex) எப்போதும் இரு முனைகளிலும் ஒரே நேரத்தில் தரவுகளை ஊடுகடத்துவதற்கு அனுமதிக்கும். B - அரை இருவழிபோக்கு (Half duplex) எப்போதும் இரு முனைகளிலும் ஒரே நேரத்தில் தரவுகளை ஊடுகடத்துவதற்கு அனுமதிக்கும். C - ஒருவழிப்போக்கு (Simplex) தரவுகளை ஒரு நேரத்தில் ஒரு முனையில் மாத்திரம் ஊடுகடத்த அனுமதிக்கும்.
A மாத்திரம்
B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
கணினிகளின் பரிணாம வளர்ச்சியில் வெற்றிடக்குழாய் (vacuum tube) திரிதடையத்தால் (transistor) மாற்றிடு செய்யப்பட்டதோடு பின்பு திரிதடையம் ஒன்றிணைந்த சுற்றினால் (IC) மாற்றீடு செய்யப்பட்டது. இச் செயன்முறையில், கணினியின் ........A......... அதிகரித்ததோடு ........B....... குறைவடைந்தது. A , B என்பனவற்றிற்குப் பொருத்தமான பதங்கள் முறையே
வினைத்திறன், பௌதிக அளவு
வினைத்திறன், நம்பகத்தன்மை (reliability)
பௌதிக அளவு, வினைத்திறன்
பௌதிக அளவு, செலவு (cost)
கீழே தரப்பட்ட சாதனங்களைக் (devices) கருதுக:
A - இலக்கமுறைக் கமரா B - ஒலிபெருக்கி C - வன்வட்டு
மேற்குறித்தவற்றுள் கணினியில் வருவிளைவுச் சாதனம்/சாதனங்களாகப் பொதுவாகப் பயன்படுத்தப்படுபவை எது/ எவை ?
A மாத்திரம்
B மாத்திரம்
A, B மாத்திரம்
B, C மாத்திரம்
பின்வருவனவற்றுள் மையமுறைவழி அலகில் (CPU) செய்நிரலின் (program) செயற்பாடு தொடர்பாக சரியான கூற்று எது ?
அறிவுறுத்தல்களும் தரவுகளும் முதன்மை நினைவகத்தில் (main memory) இருந்து பெறப்படும்.
அறிவுறுத்தல்கள் முதன்மை நினைவகத்திலிருந்தும் தரவுகள் துணைத்தேக்ககத்திலிருந்தும் (secondary storage) பெறப்படும்.
அறிவுறுத்தல்கள் துணைத்தேக்ககத்திலிருந்தும் தரவுகள் முதன்மை நினைவகத்திலிருந்தும் பெறப்படும்.
கண்டியில் வசிக்கும் சுதன், இலக்கமுறைச் சித்திரமொன்றை (digital ar) படிமக் கோப்பாக (image file) உருவாக்கி தனது கணினியில் வைத்துள்ளான். அவனுக்கு அச்சித்திரத்தை கொழும்பு, யாழ்ப்பாணம், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வசிக்கும் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள (share) வேண்டிய தேவையுள்ளது, இந்தப் படிமக் கோப்பினை நண்பர்களிடையே பகிர்வதற்குப் பொருத்தமான முறை முறைகள் பின்வருவனவற்றுள் எது/எவை ?
A - கோப்பினை இடத்துக்கிடம் மாற்றும் (file transfer) மென்பொருளைப் பயன்படுத்தி இடத்துரி வலையமைப்பினூடாக (LAN) நண்பர்களின் கணினிகளுக்கு இக்கோப்பினை அனுப்புதல் B - மின்னஞ்சலைப் (email) பயன்படுத்துதல் C - கோப்பினை நான்கு USB பளிச்சீட்டு வட்டுகளில் (flash drives) பிரதிசெய்து அவற்றைச் சாதாரண தபாலில் நண்பர்களுக்கு அனுப்புதல்
A மாத்திரம்
B மாத்திரம்
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
பின்வருவனவற்றுள் தொலை மருத்துவம் (Telemedicine) தொடர்பான உண்மையான கூற்று எது/எவை ?
A - வைத்தியருக்கும் நோயாளிக்கும் இடையிலான தொடர்பினைப் பேணுவதற்கு இணையமோ அல்லது வேறு வலையமைப்பு முறைமைகளோ பயன்படுத்தப்படும். B - தொலைதூரத்திலுள்ள விசேட வைத்திய நிபுணர்களினால் வலையமைப்பைக் கொண்ட உள்ளுர் மருத்துவ நிலையத்திலுள்ள நோயாளிகளை தொலைவிடத்திலிருந்து பரிசோதிக்க முடியும். C - பிணியாய் நிலைய நடவடிக்கைகள், வைத்திய, சுகாதார துறைகளுக்கான கல்வி நிர்வாக மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் என்பவற்றின் வினைத்திறனை அதிகரிக்கத் தொலை மருத்துவம் பயன்படும்.
A மாத்திரம்
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
ஒரு கணினியின் மைய முறைவழி அலகு (CPU) பின்வருவனவற்றில் எவற்றைக் கொண்டுள்ளது?
எண்கணித, தருக்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (CU), காட்சி அலகு (Display Unit)
எண்கணித, தருக்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (CU), உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனங்கள் (I/O devices)
எண்கணித, தருக்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (CU), நினைவகப் பதிவகங்கள் (Memory registers)
எண்கணித, தருக்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (CU), துணைத் தேக்ககம் (Secondary storage)
பின்வருவனவற்றில் இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பினால் கிடைக்கும் அனுகூலம் அல்லாதது எது?
கோப்புச் சேவையகத்துடன் (file server) கோப்புகளைக் காப்புச் (backup) செய்தல்
நச்சு நிரல்களினதும் பிறழ்பொருள்களினதும் (malware) இடர் குறைதல்
வலையமைப்பில் உள்ள வளங்களைப் பகிர்ந்து பயன்படுத்தல்
வலையைப் பயன்படுத்தல்
மைய முறைவழி அலகில் வெற்றிடக் குழாய்கள் திரான்சிற்றர்களினாலும் பின்னர் திரான்சிற்றர்கள் ஒன்றிணைந்த சுற்றுகளினாலும் பிரதியிடப்பட்டதன் விளைவு யாது ?
முறைவழிப்படுத்தல் வலு, மின் நுகர்ச்சி ஆகிய இரண்டும் அதிகரித்தமை
முறைவழிப்படுத்தல் வலு அதிகரித்தமையும் மின் நுகர்ச்சி குறைவடைந்தமையும்
முறைவழிப்படுத்தல் வலு குறைவடைந்தமையும் மின் நுகர்ச்சி அதிகரித்தமையும்
முறைவழிப்படுத்தல் வலு, மின் நுகர்ச்சி ஆகிய இரண்டும் குறைவடைந்தமை
பின்வரும் சாதனங்களைக் (Devices) கருதுக:
A - சுட்டி B - தொடு திரை C - எழுதத்தக்க புற DVD வட்டு
கடந்த ஐந்து ஆண்டுகளின்போது கண்டறியப்பட்ட டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டுவதற்கான ஒரு வரைபை வரைவதற்கு நிமலன் ஒரு கணினிச் செய்நிரலை எழுதுகின்றான். செய்நிரலுடன் தொடர்புபட்ட உள்ளீடு, முறைவழி (Process), வெளியீடு ஆகியன கீழே A தொடக்கம் D வரைக்குமான சரியான ஒழுங்கின்றிய படிமுறைகளின் மூலம் தரப்பட்டுள்ளன.
A - கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையைக் காட்டும் வரைபைக் காட்சிப்படுத்துக. B - ஒவ்வோர் ஆண்டிலும் இருந்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை C - நடப்பு ஆண்டு D - கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையைக் கணிக்க.
பின்வருவனவற்றில் எது உள்ளீடு, முறைவழி, வெளியீடு ஆகியவற்றைச் சரியாகக் காட்டுகின்றது ?
உள்ளீ டுகள் : A உம் B உம் முறைவழி : C வெளியீடு : D.
உள்ளீ டுகள் : B உம் C உம் முறைவழி :D வெளியீடு : A
உள்ளீ டு :B முறைவழிகள் : C உம் D உம் வெளியீடு : A
உள்ளீடுகள் : B உம் D உம் முறைவழி : A வெளியீடு : C
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - ஒளியியல் நார் வடங்களில் தரவு மாற்றுக் கதி செப்பு வடங்களின் தரவு மாற்றுக் கதியிலும் கூடியது. B - செப்பு வடங்களில் தரவு மாற்றுக் கதி ஒளியியல் நார் வடங்களின் தரவு மாற்றுக் கதியிலும் கூடியது. C - செப்பு வடங்கள் ஒளியியல் நார் வடங்களிலும் விலை கூடியவை.
மேற்குறித்த எது/எவை சரியானது சரியானவை ?
A மாத்திரம்
B மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு, ஒரு மாணவன் மருத்துவரிடமிருந்து மருத்துவ ஆலோசனையைப் பெறுகின்றான். B - ஈரப்பதனையும் வெப்பநிலையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தன்னியக்க முறைமை ஒருபச்சையில்லத்தில் உள்ள தாவரங்களுக்கு நீரை விடுவிக்கின்றது. C - ஓர் ஆசிரியர் இலங்கையில் கிடைக்காத ஒரு புத்தகத்தை தொடரறாப் புத்தகக் கடையொன்றில் வாங்குகின்றார்.
மேற்குறித்தவற்றில் எவை தகவல், தொடர்பாடல் தொழினுட்பவியலை (ICT) பயனுறுதிவாய்ந்த விதத்தில் பயன்படுத்துகின்றன ?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் தொடர்பாடல் ஊடகங்களில் எது தரவுகளை ஊடுகடத்துவதற்கு ஒளித் தெறிப்பைப் பயன்படுத்துகின்றது?
பரிசையிடாத முறுக்கிய சோடி (UTP)
ஒளியியல் நார் (Optical fiber)
ஓரச்சு வடம் (Coaxial cable)
பரிசையிட்ட முறுக்கிய சோடி (STP)
சில சாதனங்கள் (devices) உள்ளீட்டு (input) அல்லது வருவிளைவுச் (output) சாதனங்களாக மாத்திரம் சேவையாற்றும் அதே வேளை ஏனைய சாதனங்கள் உள்ளீட்டுச் சாதனங்களாகவும் வருவிளைவுச் சாதனங்களாகவும் சேவையாற்றுகின்றன. பின்வருவனவற்றில் எவை வருவிளைவுச் சாதனங்களாக மாத்திரம் சேவையாற்றுகின்றன?
ஒருவர் தனது வங்கி ATM அட்டையைத் தன்னியக்கக் காசளிப்பு எந்திரத்தில் செருகி தனது தனியாள் அடையாள எண்ணை (pin code) எந்திரத்தில் பதிகின்றார். பின்னர் அவர் பெற வேண்டிய பணத்தின் பெறுமானத்தை எந்திரத்தில் பதிகின்றார். அவருடைய கணக்கில் உள்ள மீதியைச் சோதித்த பின்னர் ATM எந்திரத்தின் மூலம் பணம் வழங்கப்பட்டு, மீதி இற்றைப்படுத்தப்பட்டு, புதிய மீதி காட்சிப்படுத்தப்படுகின்றது. மேற்குறித்த சூழ்நிலைக்காட்சி தொடர்பாக ஓர் உள்ளீடு, ஒரு செயன்முறை, ஒரு வெளியீடு ஆகியன முறையே பின்வரும் எதில் காட்டப்பட்டுள்ளன?
பெறவேண்டிய பணம், புதிய மீதி, பணம்
பெறவேண்டிய பணம், மீதியை இற்றைப்படுத்தல், புதிய மீதி
புதிய மீதி, தனியாள் அடையாள எண், பெறவேண்டிய பணம்
மீதியை இற்றைப்படுத்தல், தனியாள் அடையாள எண், புதிய மீதி
முதல் தலைமுறையிலிருந்து தற்போதைய தலைமுறை வரைக்குமான கணினித் தொழினுட்பப் பரிணாமத்தில் பின்வரும் எவை நடைபெற்றுள்ளன?
A - கணினிகளின் முறைவழியாக்க ஆற்றல் (processing power) அதிகரித்தல் B - மைய முறைவழி அலகில் (CPU) ஒரு சதுர சென்றிமீற்றரில் உள்ள திரான்சிற்றர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் C - கணினிகளின் தேக்கக் கொள்திறன் (storage capacity) அதிகரித்தல்
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகியன எல்லாம்
ஒரு கணினியில் உறுதியாகத் தரவுகளைத் தேக்கி வைப்பதற்குப் (store) பின்வருவனவற்றில் எது உகந்தது?
பதுக்கு நினைவகம் (cache memory)
வன்தட்டு
தற்போக்குப் பெறுவழி நினைவகம் (RAM)
காணொளி நினைவகம்
பின்வரும் எதில் உள்ளீட்டுச் சாதனங்கள் (input devices) மாத்திரம் இடம்பெறுகின்றன?
கணினியின் மைய முறைவழி அலகின் கடிகாரக் கதியை (clock speed) அளப்பதற்குப் பின்வரும் எதனைப் பயன்படுத்தலாம்?
கிகாபைற்று (GB)
கிகாஹேற்ஸ் (GHz)
மெகாபிற்று / செக்கன் (Mbps)
சுற்றல் / நிமிடம் (RPM)
முறையே செப்புக் கம்பி, ஒளித் தெறிப்பு, வானொலி அலைகள் ஆகியவற்றுடன் தரவுகளை ஊடுகடத்துவதற்கு உகந்த ஊடகப் பட்டியல் பின்வருவனவற்றில் எது?
நார் ஒளியியல், முறுக்கிணை , WiFi
நார் ஒளியியல், WiFi, முறுக்கிணை
முறுக்கிணை , நார் ஒளியியல், WiFi
முறுக்கிணை , WiFi, நார் ஒளியியல்
பின்வரும் சாதனங்களுள் எது உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகிய இரண்டு திறன்களையும் கொண்டுள்ளது?
இயக்குபிடி (joystick)
ஒளியியல் எழுத்துரு அடையாளம் காணும் சாதனம் (OCR)
தொடுதிரை
வலைகமரா (webcam)
பின்வருவனவற்றுள் கணினித் தலைமுறைகள் தொடர்பாக சரியானது எது?
ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC) முதலாம் தலைமுறைக் கணினிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
வெற்றிடக் குழாய்கள் (Vacuum tubes) இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
திரான்சிஸ்டர்கள் (Transistors) மூன்றாம் தலைமுறைக் கணினிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
மிகப் பெரியளவு ஒருங்கிணைந்த சுற்றுகள் (VLSI) நான்காம் தலைமுறைக் கணினிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
பின்வருவனவற்றுள் தரவு முறைவழியாக்கத்திற்கு உதாரணமொன்றாக காணப்படுவது எது?
பண மீளப்பெறுவனவின் பின்னர் வங்கி மென்பொருளினைப் பயன்படுத்தி கணக்கு மீதியை கணித்தல்
கோப்பொன்றை (file) USB செலுத்தியிலிருந்து கணினியொன்றின் வன்தட்டுக்கு பிரதி செய்தல்
தனிநபர் கணினியொன்றில் (PC) ஒலிப்பதிப்பு மென்பொருளை (install) நிறுவுதல்
வருடியொன்றைப் (scanner) பயன்படுத்தி கடிதமொன்றை வருடுதல்
ஒரு மீ கணினி, ஒரு மடிக்கணினி மற்றும் ஒரு ஏட்டு - வில்லை தனியாள் கணினி என்பவற்றிலிருந்து பின்வரும் பிரயோகங்களுக்கு மிகவும் பொருத்தமான கணினி வகையைத் தெரிவுசெய்க.
A - செயற்கைக்கோள்களிலிருந்து தொடர்ச்சியாக கிடைக்கப்பெறும் அதிகளவிலான தரவுகளை முறைவழியாக்கம் செய்வதற்கு B - எழுத்தாளர் ஒருவருக்கு அவர் விடுமுறையில் வீட்டுக்கு வெளியில் சென்றிருக்கும்போது கட்டுரையொன்று எழுதுவதற்கு C - கிடைக்கப்பெறும் உருப்படிகளின் வேண்டுகோள்களை பதிவு செய்வதற்கு கடைகளுக்குச் செல்லும் ஒரு நடமாடும் விற்பனை பிரதிநிதியின் பாவனைக்காக
A: மடிக்கணினி, B: மீ கணினி, C: ஏட்டு-வில்லை தனியாள் கணினி
A: மடிக்கணினி, B : ஏட்டு-வில்லை தனியாள் கணினி, C: மீ கணினி
A: மீ கணினி, B: மடிக்கணினி, C: ஏட்டு-வில்லை தனியாள் கணினி
A : ஏட்டு-வில்லை தனியாள் கணினி, B: மீ கணினி, C; மடிக்கணினி
A மற்றும் B என முகப்படையாளமிடப்பட்ட வெற்றிடங்களுடனான பின்வரும் கூற்றைக் கருதுக.
முறைவழியாக்கச் (processing) செயன்முறையின்போது மையமுறைவழியாக்க அலகானது அதனது .......A........ ஐ, .................B............. இல் இருந்து கொண்டுவரப்பட்ட தரவுகளை தற்காலிகமாகச் சேமிப்பதற்கு பயன்படுத்துகின்றது.
மேலே A மற்றும் B என முகப்படையாளமிடப்பட்ட வெற்றிடங்களை முறையே நிரப்புவதற்கு பின்வருவனவற்றுள் எந்த சேர்க்கை பொருத்தமானது?
முதன்மை நினைவகம், பதிவகங்கள்
பதிவகங்கள், முதன்மை நினைவகம்
துணை நினைவகம், முதன்மை நினைவகம்
துணை நினைவகம், பதிவகங்கள்
பரிமாற்று ஊடகம் தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
A - 200 m இற்கும் கூடுதலான நீண்ட தூரங்களுக்கு தரவுகளை பரிமாற்றுவதற்கு கவசமிடப்படாத முறுக்கப்பட்ட சோடி (UTP) வடங்கள் பொருத்தமானவையாகும். B - நார் ஒளியியல் வடங்கள் தரவுகளை UTP வடங்களைவிட வேகமாகப் பரிமாற்றும். C - வடமற்ற சாவிப்பலகைகள் கணினிகளுடன் தொடர்பாடுவதற்கு செந்நிறக் கீழ் சமிக்ஞை தரவு பரிமாற்றம் பயன்படுத்தப்படுகின்றது.