இவ்வினாவில் சில பணிசெயல் முறைமையின் அம்சங்களைப் பயன்படுத்துவதில் உள்ள உமது தேர்ச்சி சோதிக்கப்படும்.

  1. உமது கணினியில் நிறுவப்பட்டுள்ள (install) செய்நிரல்களின் (Programs ) பட்டியலைப் பெறுக. இதற்காக Windows பணிசெயல் முறைமையெனின் Control Panel Programs இனையோ Linux பணிசெயல் முறைமையெனின் Ubuntu Software Center இனையோ அல்லது வேறு பொருத்தமான முறையையோ பயன்படுத்தலாம். பின்பு Snipping tool / Screenshot ஐப் பயன்படுத்தி மேலுள்ள வெளியீட்டின் முதலாவது திரையின்(first screen ) படிமத்தை (image ) பெற்று அதனை “Programs” எனும் பெயருடன் ஒரு jpg கோப்பாக Q41 கோப்புறையில் சேமிக்குக.
     
  2. உமது கணினியின் முறைவழியாக்கி வகையையும் (processor type)அதன் கடிகாரக் கதியையும் (clock speed) காட்டும் ஒரு திரையைப் பெறுக. பின்பு Snipping tool / Screenshot ஐப் பயன்படுத்தி மேலுள்ள வெளியீட்டின் விம்பத்தைப் (image ) பெறுக. அதனை “processor” எனும் பெயருடன் ஒரு jpg கோப்பாக Q41 கோப்புறையில் சேமிக்குக.
     
  3. உமது கணினியில் பணிசெயல் முறைமையின் பெயரையும் பதிப்பையும் (Operating system name and version ) காட்டும் கணினி திரையைப் பெறுக. பின்பு Snipping tool / Screenshot ஐப் பயன்படுத்தி மேலுள்ள வெளியீட்டின் விம்பத்தைப் (image ) பெறுக. அதனை “os” எனும் பெயருடன் ஒரு jpg கோப்பாக Q41 கோப்புறையில் சேமிக்குக.
     
  4. பின்பு Q41 கோப்புறயை நெருக்கமாக்கிய கோப்புறையாகமாற்றி பதிவேற்றம்(upload) செய்க.

Select file to upload: