இவ்வினாவில் உமது கோப்புக் கையாளல் ஆற்றல்
பரீட்சிக்கப்படுகிறது.
நெருக்கமாக்கப்பட்ட
“Q41_A.zip” எனும் கோப்பினை பதிவிறக்கம் செய்யவும்.
அதன் உள்ளடக்கங்களை பிரித்தெடுப்பதற்கு
பதிவிறக்கம் செய்த "Q41_A.zip" எனும் கோப்பினை இரட்டைச் சொடக்கவும். அது
Q41_A எனும் மூல கோப்புறையுடன் கூடிய அடைவு/கோப்புறையை கட்டமைப்பொன்றைக்
கொண்டிருக்கும்.
- மேலே குறிப்பிடப்பட்ட
Q41_A எனும்
கோப்புறைக்குள் இருக்கும்
Temp எனும் கோப்புறையை
அழிக்கவும்.
- Documents எனும்
கோப்புறைக்குள் இருக்கும் அனைத்து கோப்புகளினதும் விபரப் பட்டியலை
பெற்றுக்கொள்ளவும். அதனை
snipping tool அல்லது screenshot
என்பதைப் பயன்படுத்தி படிமம் ஒன்றை உருவாக்கி,
அப்படிமத்தை உமது சுட்டிலக்கத்துடன்
GITIndexNumber_Q41_Files.jpg
எனச் சேமித்து பதிவேற்றம் செய்யவும். (உ+ம: 12345
எனும் GIT பரீட்சை எண்ணைக் கொண்ட மாணவன் “12345_Q41_Files.jpg” எனும்
பெயரைப் பயன்படுத்துவார்.)
- Documents எனும் உபகோப்புறைக்குள் / அடைவிற்குள்
இருக்கும் அனைத்து jpg கோப்புகளின் பட்டியலைப் பெற்று, அவ்வருவிளைவை
snipping tool அல்லது screenshot என்பதைப் பயன்படுத்தி
படிமம் ஒன்றை உருவாக்கி அதனை உமது சுட்டிலக்கத்துடன் GITIndexNumber_Q41_pdfFiles.jpg
எனச் சேமித்து பதிவேற்றம் செய்யவும்.(உ+ம் GIT பரீட்சை எண்
12345 எனக் கொண்ட மாணவன் “12345_Q41_PdfFiles.jpg” எனும் பெயரைப்
பயன்படுத்துவார்).
உமது jpg கோப்பினைப் பதிவேற்றம் செய்யவும்.