நீங்கள் பத்திரிகை விளம்பரம் ஒன்றைப் பயன்படுத்தி உங்கள்
கையடக்கத் தொலைபேசியை விற்பனை செய்யவுள்ளதாகக் கொள்க. இவ்வினாவில்
நீங்கள் பத்திரிகை விளம்பர முகவருக்கு உங்கள் தொலைபேசியின்
புகைப்பட இணைப்புடன் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பவேண்டும்.
- உங்கள் தொலைபேசியின் புகைப்படத்தைக் கொண்ட கோவையை பின்வரும்
இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்க:
myphone.jpeg
- கீழே தரப்பட்ட இணைப்பைக் கிளிக் செய்து மின்னஞ்சல்
மென்பொருள் இடைமுகத்தைப் பெறுக.
email software
interface
- கீழே தரப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி பத்திரிகை
விளம்பர முகவருக்கு அனுப்புவதற்கான மின்னஞ்சல் ஒன்றைத்
தயாரித்து அனுப்புக.
newsagent@abcnews.lk இனைப் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியாக
பயன்படுத்துக.
மின்னஞ்சலின் Subject ஆக "Mobile phone for sale" ஐ
உள்நுழைக்குக.
மின்னஞ்சலின் உள்ளடக்கமாக "6 months old, good
condition, Rs 12,000, negotiable, contact sunil@abc.com"
என்பதை தட்டச்சு செய்க.
பதிவிறக்கிய myphone.jpeg படத்தை இணைக்குக.
இம்மின்னஞ்சலை உங்கள் நண்பருக்கு (ranjan@abc.com) இற்கு
பிரதிசெய்க.
மின்னஞ்சலில் வழுக்கள் உள்ளதா எனச் சரிபார்த்து Send ஐக் க்ளிக்
செய்க.
|