தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
ஒட்டியிராத (non-contiguous) கோப்புகளை ஒட்டியுள்ள (contiguous) கோப்புகளாக மாற்றுவதன் மூலம் ஒரு வன்வட்டின் ஆற்றுகையை உச்ச அளவாக்குவதற்குப் பயன்படுத்தப்படத்தக்க பணிசெயல் முறைமையில் உள்ள பயன்பாட்டுக் கருவி (utility tool) யாது?
வளத் தெரிவிப்பி (Resource Monitor)
வட்டு துப்புரவாக்கல் (Disk Cleanup)
வரியுரு விவரப்படம் (Character Map)
வட்டு ஒருங்கமைத்தல் (Disk Defragmenter)
பின்வரும் உறைகளில் எவை ஒரு மின்னஞ்சல் முறைமையின் கொடா உறைகள் (default Folders ) ஆகும்?
Inbox, Received, Draft, Sent
Inbox, Draft, Sent, Trash
Inbox, Delete, Sent , Trash
Inbox, Draft, Sent, Save
பின்வரும் ஊடகங்களுள் அதிவிரைவான தொடர்பாடலை வழங்கக்கூடியது எது?
ஓரச்சு வடம் (co-axial cable)
ஒளியியல் நார்கள் (fiber optic cable)
வானொலி அலை(radio-wave)
முறுக்கிணைக் கம்பிச் சோடி (twisted optic cable)
கணினியில் 01000010 என்னும் துவித எண் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வெண்ணின் தசமச் சமவலு யாது?
67
65
64
66
ஸ்பாம் (spam) என்பது,
ஒரு வகை வைரஸ் ஆகும்.
குறிமுறையாக்க வகை (encryption type) ஒன்றாகும்.
ஒரு ரொஜான்ஹோர்ஸ் (Trojan horse) ஆகும்.
கோரப்படாத மின்னஞ்சல் பல பெறுனர்களுக்கு அனுப்பப்படல் ஆகும்.
பின்வரும் அட்வைணையின் நிரல் 1 இல் மென்பொருளின் சில வகுதிகளும் நிரல் 2 இல் சில உதாரணங்களும் தரப்பட்டுள்ளன. எனினும், இவ்விரு நிரல்களிலும் உள்ள உருப்படிகள் பொருந்தாமல் இருக்கலாம்.
தசம எண் 57 இன் துவிதச் சமவலு யாது?
111011
101001
111001
110001
பயனர் ஒருவரின் கணினி வன்வட்டின் அடைவு மரம் (directory tree) கீழேயுள்ள உருவில் காட்டப்பட்டுள்ளது. மேலுள்ள அடைவு மரக் கட்டமைப்பில் ALNotes, CombinedMaths, Competency1.doc ஆகியன முறையே
பிரதான அடைவு(root directory), உப அடைவு(sub directory), கோவை(file)
கோவை (file), பிரதான அடைவு (root directory), உப அடைவு (sub directory)
உப அடைவு(sub directory), கோவை(file), பிரதான அடைவு (root directory)
உப அடைவு(sub directory), பிரதான அடைவு(root directory), கோவை(file)
நீர் உமது பாடசாலையின் வகுப்பறைகளையும் ஆய்வுகூடங்களையும் வலையமைப்பாக்குவதற்குத் திட்டமிட்டால் நடைமுறைப்படுத்த வேண்டிய வலையமைப்பின் உகந்த வகை யாது?
VPN
LAN
WAN
MAN
பின்வரும் குறியீடுகளில் எது மின்னஞ்சல் முகவரியில் எப்போதும் உள்ளடக்கப்பட வேண்டும்?
/
_
:
@
ஒரு பாடசாலை நூலகத்தின் புத்தகங்களை இரவலாக வழங்கும் கருமபீடத்திலுள்ள ஒருவர் குறிப்பிட்ட வகையான தகவல் முறைமை வகையை பயன்படுத்துகிறார். இரவல் வழங்கும் கருமபீடத்தில் பயன்படுத்தப்படும் அம்மென்பொருளை மிகச் சிறந்த விதத்தில் விவரிப்பது எது?
நிறைவேற்று தகவல் முறைமை (Executive Information system)
தீர்மானத்திற்கு உதவும் முறைமை (Decision support system)
வல்லுநர் தகவல் முறைமை (Strategic information system)
பரிமாற்றச் செயன்முறை முறைமை (Transaction Processing system)
பின்வரும் மென்பொருள்களைக் கருதுக:
A-DOS B- ஃபயர்பொக்ஸ் (Firefox) C- மைக்ரோசொப்ட் வின்டோஸ் (Microsoft Windows) D- லினக்ஸ் (Linux)
மேற்குறித்தவற்றுள் பணிசெயல் முறைமைகள் (Operating Systems) எவை?
A, B, C மாத்திரம்
A, B, D மாத்திரம்
B, C, D மாத்திரம்
A, C, D மாத்திரம்
பின்வருவனவற்றில் மடிக் கணினியின் தொழினுட்ப விவரக்கூற்றுகள் மாத்திரம் இடம்பெறும் பட்டியல் யாது?
USB துறைகளின் (ports) எண்ணிக்கை, விற்பனைக்கு பிந்திய சேவை, RAM இன் கொள்திறன், காட்சியின் பருமன்
உத்தரவாதக் காலம், விற்பனையாளரின் மதிப்பு, USB துறைகளின் எண்ணிக்கை, மடிக் கணினியின் நிறை
சில விளம்பர வலையமைப்புகள் பயனர் வலைப்பக்கங்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை இடுகின்றனர். அத்தகைய வலையமைப்புகள் பயனர்களின் சம்மதமின்றி அவர்களின் நடத்தைகளை அவதானிக்கின்றன. இதனுடன் சம்பந்தப்பட்டுள்ள மிகப் பொருத்தமான விவாத விடயம் யாது?
தனிமை மீறல் (privacy violation)
குறும்பு (hacking)
பாதுகாப்பு அச்சுறுத்தல் (security threat)
களவு(piracy)
வெற்றிடங்களைக் கொண்ட பின்வரும் பந்தியைக் கருதுக.
தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியுமாறு மொகமட்டிடம் கேட்கப்பட்டது. அவர் கணினியின் முன்பாக அமர்ந்து இணையத்தை அடைவதற்காக ....(A).. ஐ ஆரம்பித்து அதனூடாக ....(B).... ஐ செயற்படுத்தினர். பின்னர் ...(C).... இல் "தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் பாதிப்புகள்" எனும் சொற்றொடரைத் (text) தட்டச்சிட்டார்.
மேலுள்ள வெற்றிடங்களை நிரப்ப மிகப் பொருத்தமானவை முறையே பின்வருவனவற்றுள் எவை?
A= வலை உலாவி, B= தேடுதல் இயந்திரம், C=தேடுதல் பெட்டி
A= தேடுதல் இயந்திரம், B= வலை உலாவி, C=தேடுதல் பெட்டி
நிகழ்நிலைக் கொள்வனவு (online shopping) தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A- அது கொள்வனவுக்காகச் செலவிடப்படும் பயண நேரத்தை மீதப்படுத்துகின்றது. B- வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்கும் முன்னர் அதனைப் பௌதீக ரீதியாக பரிசோதிக்க முடியாது. C- வாடிக்கையாளர்கள் மலிவான பொருள்களை எளிதாகக் கண்டு கொள்ளலாம்.
மேற்குறித்த கூற்றுகளில் நிகழ்நிலைக் கொள்வனவு பற்றிய சரியான கூற்றுகள் யாவை?
A, B ஆகியன மாத்திரம்
A, B, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
பின்வரும் எவ்வழிகளில் ஒரு நச்சுநிரல் உமது கணினிக்கு ஊடுகடத்தப்படலாம்?
A- மின்னஞ்சலினால் அல்லது மின்னஞ்சலின் ஓர் இணைப்பினால் B- இணையத்திலிருந்து விடயங்களை பதிவிறக்கஞ் செய்வதினால் C- பளிச்சீட்டு நினைவகக் கோல் (flash memory) போன்ற கழற்றத்தக்க தேக்ககச் சாதனங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவதன் மூலம்
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
வெவ்வேறு வகையான வலையமைப்பு வடங்களைக் காட்டும் A, B, C எனும் பின்வரும் விம்பங்களைக் கருதுக.
A- ஆவணத்திலுள்ள சொற்களை எழுத்துப் பிழை சரிபார்த்தல் B- முறைமையில் இயங்கும் செயன்முறைகளை (processes) முகாமை செய்தல் C- பயனருக்கு இடைமுகத்தை வழங்குதல்
பணிசெயல் முறைமையின் செயல்கள் மேற்குறித்தவற்றுள் எவை?
A, C மாத்திரம்
A, B மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
தனித்தியங்கும் மேசை கணினிகளிலும் பார்க்க ஒரு கணினி வலையமைப்பின் நன்மைகள் பின்வருவனவற்றில் யாவை?
A- வலையமைப்புடன் இணைக்கப்பட்ட அச்சுப்பொறி போன்ற ஒரு வன்பொருள் சாதனத்தைப் பகிர்தல் (sharing) B- வலையமைப்புடன் தொடுக்கப்பட்ட கணினிகளுக்கு உள்ள நச்சுநிரல் தாக்கங்களின் இடர் குறைதல் C- வலையமைப்பில் உள்ள பொறிகளுக்கிடையே கோப்புகளையும் கோப்புறைகளையும் (Folders) பகிர்தல்
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
கீழே தரப்பட்ட தர்க்கச் சுற்றின் உள்ளீடுகள் அருகிலுள்ள உண்மை அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
மேலுள்ள அட்டவணையில் நிரல் C (மேலிருந்து கீழாக) இற்குரிய வருவிளைவுகள் முறையே எவை?
0,0,0,0
0,1,0,1
1,0,1,0
1,1,1,1
வலையமைப்புக்கான தரவு ஊடுகடத்தல் ஊடகமொன்றினை தெரிவுசெய்யும் போது கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் பின்வருவனவற்றுள் எவை?
A-தரவு ஊடுகடத்தல் வீதம் (Data transmission rate) B-வலையமைப்பின் வீச்சு (The range of the network) C-கிரயமும் நிறுவலின் இலகுதன்மையும் (Cost and ease of installation)
B, C ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
நிறுவனமொன்று சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருள் (X) ஐ கடையொன்றிலிருந்து கொள்வனவு செய்தது. அதே நிறுவனம் தனது கணக்கு வைப்பு நடவடிக்கைகளுக்காக கணக்கு வைப்பு மென்பொருள் (Y) ஐ வடிவமைத்துத் தருமாறு மென்பொருள் வடிவமைப்புக் கம்பனியிடம் கேட்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட சூழ்நிலையில் உண்மையானது பின்வருவனவற்றுள் எது?
X பொதி செய்யப்பட்ட மென்பொருள் ஆவதோடு Y என்பது தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட மென்பொருளாகும்.
X தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட மென்பொருள் ஆவதோடு Y பொதி செய்யப்பட்ட மென்பொருளாகும்
X, Y ஆகிய இரண்டும் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்ட மென்பொருள்களாகும்
X, Y ஆகிய இரண்டும் பொதி செய்யப்பட்ட மென்பொருள்களாகும்
ஒரு மேசைக் கணினியை ஒரு குவியத்துடன் இணைப்பதற்குப் பின்வரும் வடங்களில் எது மிகவும் உகந்தது?
ஓரச்சு (coaxial) வடம்
தொலைபேசி (telephone) வடம்
USB வடம்
UTP வடம்
கணினி முறைமையொன்றின் பயன்பாட்டு மென்பொருளுக்கு(Utility software) உதாரணமாக அமைவது / அமைவன பின்வருவனவற்றுள் எது / எவை?
A- காப்பு மென்பொருள் (Backup Software) B- சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருள் (Word Processing Software) C- வலை உலாவி (Web browser) D-வன்தட்டு சீராக்கி (Disk defragmenter)
C, D ஆகியன மாத்திரம்
A மாத்திரம்
B, D ஆகியன மாத்திரம்
A, D ஆகியன மாத்திரம்
பின்வருவனவற்றில் எது சீரான வள இடங்காணி (URL) இன் சரியான வடிவமாகும்?
http://www.doenets.lk/exam/
http:/www.doenets.lk/exam/
html://www.doenets.lk/exam/
http:\\www.doenets.lk\exam\
முதலாம் தலைமுறைக் கணினிகள் தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியான கூற்று / கூற்றுகள் எது / எவை?
A- கணினியின் பொளதிக அளவு ஒப்பீட்டு அளவில் பெரியது. B-சுற்றுகளுக்காக வெற்றிடக் குழாய்கள் (vacuum tubes) பயன்படுத்தப்பட்டன. C-செய்நிரலுக்காக (programming) இயந்திரமொழி (machine language) பயன்படுத்தப்பட்டது.
A மாத்திரம்
B மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, C ஆகியன மாத்திரம்
ஒரு பாடசலையின் அலுவலகத்தின் தினசரிப் பணிகளில் உதவுவதற்காக ஒரு கணினிப் பிரயோக உதவியாளரின் சேவைகளைப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்வரும் எத்துறையில் பெறப்பட்டுள்ள அனுபவம் ஒரு விண்ணப்பதாரருக்கு உகந்த தகைமையாகும்?
வலையமைப்பு நிர்வாகம்
தகவல் தொழினுட்ப முகாமை
கணினிச் செய்நிரலாக்கமும் தவறுநோக்கலும்
சொல்முறை வழிப்படுத்தல், விரிதாள் போன்ற அலுவலகத் தன்னியக்கமாக்கல் மென்பொருள்களைப் பயன்படுத்தல்
பின்வருவனவற்றில் எது நீண்டநேரத்துக்கு கணினியுடன் பணியாற்றும் போது ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது?
அதிக மகிழ்ச்சிகரமான கணினி விளையாட்டுக்களில் ஈடுபடுதல்
சுட்டியிலும் பார்க்கச் சாவிப்பலகையை அடிக்கடி பயன்படுத்தல்
ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு தடவையும் ஓய்வெடுத்தல்
சிறிய திரையுள்ள கணினியைப் பயன்படுத்தல்
ஓர் இடத்துரி வலையமைப்பை (LAN) ஒரு பெரும் பரப்பு வலையமைப்புடன் (WAN) இணைப்பதற்குப் பின்வரும் சாதனங்களில் எது பயன்படுத்தப்படும்?
சேவையகம் (server)
வலையமைப்பு இடைமுக அட்டை (NIC)
வழிப்படுத்தி (router)
குவியம் (hub)
தகவல் தொடல்பாடல் தொழினுட்ப (ICT) முறைமையொன்றில் தவறான பயன்படுத்துகைக்கு உதாரணமாகக் கொள்ளமுடியாதது பின்வருவனவற்றுள் எது?
ஸ்பாம் அஞ்சல்களை(spam) அனுப்புதல்
வைரசுகள் பரவுதல்
சமூக ஊடகப் பக்கங்களில் தீங்கிழைக்கும் வதந்திகள் (malicious gossip) பரவுதல்
blog இணையப் பக்கத்தை உருவாக்கல்
ஒரு தர்க்க வாயிலுக்கு ஒப்பான செயலைக் கொண்ட கீழே தரப்பட்ட சுற்றினைக் கருதுக. மேலேயுள்ள சுற்று தொடர்பான சரியான / கூற்றுகள் எது / எவை?
A- ஆளி X இனை மூடும் போது (ON) மின்குமிழ் ஒளிரும். B- X, Y ஆகிய இரண்டு ஆளிகளையும் மூடும்போது (ON) மின்குமிழ் ஒளிரும். C-ஆளி X இனைத் திறந்து (OFF) ஆளி Y இனை மூடும்போது (ON) மின்குமிழ் ஒளிரும்.
A, B ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகியன எல்லாம்
உங்கள் கணினியின் வன்வட்டில் (hard disk) சுயாதீனவெளி மிகக் குறைவாக உள்ளதாகக் கருதுக. நீங்கள் சேமித்துவைத்த எந்த ஒரு கோப்பினையும் நீக்காமல் இன்னும் சிறிதளவு சுயாதீன வெளியை உருவாக்க விரும்புகின்றீர்கள் எனின், அதற்குப் பயன்படுத்தும் முறைமைக் கருவிகள் (system tools) பின்வருவனவற்றுள் எவை?
பின்வருவனவற்றுள் எவை தரவுத் தொடர்பாடலுக்கு உதாரணங்களாகக் கருதப்படாலம்?
A-உள்ளக வலையமைப்பில் (Local Area Network) இரு கணினிகளுக்கிடையிலான தொடர்பாடல் B-இணையத்தினூடான தொடர்பாடல் C-செல்லிடத் தொலைபேசியைப் பாவித்து குறுஞ்செய்தி (SMS) களை அனுப்புதல்
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, C ஆகியன மாத்திரம்
பின்வருவனவற்றைக் கருதுக:
A- கற்றல் பொருட்களை நிகழ்நிலையில் மாணவர்கள் அணுகுதல் B- அரசாங்கத்தால் இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களைப்பெற செல்லிடப்பேசிகளை விவசாயிகள் பயன்படுத்தல் C- வாகன வருமானவரிப்பத்திரத்தை நிகழ்நிலையில் புதுப்பித்தல்
மேற்குறித்த நடவடிக்கைகளில் எவை இலத்திரனியல் அரச சேவைகளிற்கு (e-governance) உதாரணங்களாகும்?
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A-ஒவ்வொரு இணையத்தளமும் தமக்குரிய தனித்துவமான சீரான வள இடங்காணி (URL) ஐக் கொண்டிருக்கும். B- இலத்திரனியல் ஆவணத்திலுள்ள மீஇணை (hyperlink) என்பது அதே ஆவணத்திலுள்ள வேறோர் இடத்தையோ அல்லது முற்றாக புதிய ஆவணத்தையோ இணைக்கும் ஒரு மூலகமாகும். C- மீஉரை பரிமாற்று நெறிமுறை(http) இணையத் தரவுகளைப் பரிமாற்றுவதற்கு பயன்படுத்தப்படும்.
மேற்கூறியவற்றுள் சரியானவை எவை?
A, B மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
B, C மாத்திரம்
A, C மாத்திரம்
ஓர் இணையத்தினால் வழங்கப்படும் சேவைகளை வகை குறிப்பவை பின்வருவனவற்றுள் எவை?
மின்னஞ்சல், உலகளாவிய வலை
உள்ளக வலையமைப்பு, பெரும் பரப்பு வலையமைப்பு
தேடல் இயந்திரங்கள், பெரும்பரப்பு வலையமைப்பு
மின்னஞ்சல் , உள்ளக வலையமைப்பு
தரவு உள்ளீட்டு செய்குநர்(Data Entry Operator) ஒருவருக்கு மீளவரும் தகைவுக்காய நோய்(RSI) பீடிக்கப்பட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது. அவரது இவ் உடல்நிலைக்கு வேலைத்தளச் சூழலும் ஒரு காரணமா எனக் கண்டறிவதற்குப் பின்வரும் வினாக்களில் எதனை அவரிடம் கேட்க வேண்டும்?
A உங்கள் கைகளினதும் விரல்களினதும் வேதனையை நீக்குவதற்கு ஏற்ற முறையில் விசைப்பலகையும் சுட்டியும் சரியான முறையில் தானப்படுத்தப்பட்டுள்ளனவா? B- நீங்கள் உகந்த நிலைப்பாட்டுடன் (posture) அமர்ந்து வேலை செய்கிறீர்களா? C-கண்ணின் உறுத்தலைத் தவிர்ப்பதற்கு நீங்கள் சீரான இடைவேளையில் ஓய்வு எடுக்கிறீர்களா?
B, C ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B ஆகியன மாத்திரம்
உங்கள் வீட்டுக் கணினியில் வைரஸ் தொற்றின் விளைவொன்றாக இல்லாதிருப்பதற்கு மிகவும் சாத்தியமானது பின்வருவனவற்றுள் எது?
பயனரின் செயல்களுக்கு கணினி பதிலளிக்காமை
கணினி வன்பொருளுக்கு நிரந்தர பாதிப்பு
இணைய அணுகல் மெதுவாக நடைபெறல்
மென்பொருள் ஒழுங்காக வேலை செய்யாது விடல்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A- MS-DOS என்பது கட்டளை நிரை இடைமுகத்தைப் (CLI) பயன்படுத்தும் பணிசெயல் முறையாகும். B- இசுறு லினக்ஸ், ஹன்தான லினக்ஸ் என்பன இலங்கையர்களால் தேசிய மயமாக்கப்பட்ட இரு திறந்த பணிசெயல் முறைமைகளாகும். C- மைக்கிரோசொப்ற் வின்டோஸ் என்பது வரைவியல் பயனர் இடைமுகம் (GUI) இல்லாத பணிசெயல் முறையாகும். மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை?