குறித்த ஒரு நாளில் புத்தகக் கடையொன்றில் நடைபெறும் சில
விற்னைகளைக் காட்டும்
sales.xls விரிதாள் (உரு1) ஐ உமது கணினிக்குப் பதிவிறக்கஞ்
செய்க.
- நிரல் B இற்குப் பின்னர் ஒரு புதிய நிரலைச் செருகி, நிரல்
C (C1 தொடக்கம் C6 வரையுள்ள கலங்கள்) ஐ உரு 2 இல்
தரப்பட்டுள்ளவாறு தரப்பட்ட தரவுகளை அதில் நுழைக்க.

-
பென்சில்களின் (pencils) விற்பனைக்கான தொகையைக்
(Amount) கணிப்பதற்குக் கலம் D2 இற்கு ஒரு தகுந்த சூத்திரத்தைச்
செருகுக. குறிப்பு: தொகை(Amount) ஆனது பின்வரும் சமன்பாட்டைப்
பயன்படுத்தித் கணிக்கப்படுகின்றது.
Amount= Unit Price × Quantity
-
D3 தொடக்கம் D6 வரையுள்ள வீச்சுக்கு, ஏனைய
உருப்படிகளுக்கான தொகைகளைப் பெறுவதற்கு நகல் செய்க.
-
எல்லா உருப்படிகளுக்கும் 2% கழிவு
தரப்படுமெனின், பென்சில்களுக்குத் (pencils) தரப்பட்ட மொத்தக்
கழிவைக் கணிப்பதற்குக் கலம் E2 இல் ஒரு சூத்திரத்தைச் செருகுக.
குறிப்பு: உமது சூத்திரத்தில் கலம் B7 ஐப் பயன்படுத்த வேண்டும்,
கழிவானது பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்திக்
கணிக்கப்படுகின்றது.
Discount=Amount x 2/100
-
ஏனைய உருப்படிகளுக்கான கழிவுகளைப் பெறுவதற்கு
மேற்குறித்தசூத்திரத்தை E3 தொடக்கம் E6 வரையுள்ள வீச்சுக்கு
நகல் செய்க.
-
கலம் F1 இற்கு மொத்தம் (ரூ.) (Total(Rs.)) ஐ
உரையாக நுழைக்க. (அது உரு 3 இல் காட்டியவாறு
காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கவனிக்க)

-
பென்சில்களின் விற்பனையினூடாகப் பெறப்பட்ட
மொத்தத்தைக்கணிப்பதற்குக் கலம் F2 இல் பொருத்தமான சமன்பாட்டைச்
செருகி, ஏனைய உருப்படிகளின் விற்பனைகளினூடாகப் பெறப்பட்ட
மொத்தங்களைக் கணிப்பதற்கு அதனை F3 தொடக்கம் F6 வரையுள்ள
வீச்சுக்கு நகல் செய்க.
குறிப்பு: ஒவ்வோர் உருப்படியினதும் விற்பனைகளினூடாகப்
பெறப்பட்ட மொத்தம் பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்திக்
கணிக்கப்படுகின்றது.
Total= Amount - Discount
-
எல்லா உருப்படிகளினதும் விற்பனைகளினூடாகப்
பெறப்பட்ட முழு மொத்தத்தை (grand total) (அ-து. F2 தொடக்கம் F6
வரையுள்ள கலங்களின் கூட்டல்) காட்டுவதற்குக் கலம் F7 இற்கு ஒரு
பொருத்தமான சமன்பாட்டைச் செருகுக.
-
உருப்படிகளின் (F2 தொடக்கம் F6 வரை)
விற்பனைகளினூடாகப் பெறப்பட்ட தொகைகளைப் Book shop Sales என்னும்
தலைப்புள்ள ஒரு வட்டவரைபாகக் (pie chart) காட்சிப்படுத்துக.
உமது ஆவணத்தை Nic_no.xls ஆகச் சேமித்து பதிவேற்றஞ் செய்க.