கூற்று A-வரைவியற் பயனர் இடைமுகம் (Graphical User Interface) கட்டளை வரி இடைமுகத்திலும் (Command line interface) பார்க்க பயனர் தோழைமைமிக்கது. கூற்று B-வரைவியற் பயனர் இடைமுகத்தில் உள்ள படவுருக்களைப் (Icons) பயன்படுத்துவதன் மூலம் கட்டளை வரி இடைமுகத்திலுள்ள கட்டளைகளை நினைவகத்தில் வைத்திருப்பதற்கான தேவை தவிர்க்கப்படுகின்றது.
மேற்குறித்த கூற்றுகளில் செல்லுபடியான தொடர்பைக் கொண்டது பின்வருவனவற்றுள் எது?
கூற்று A சரியானதும் கூற்று B பிழையானதுமாகும்.
கூற்று A பிழையானதும் கூற்று B சரியானதுமாகும்.
கூற்று A பிழையானதும் கூற்று B சரியானதுமாகும்.
A, Bஆகிய இரு கூற்றுகளும் சரியானவை ஆனால் கூற்று A ஆனது கூற்றுB யுடன் தொடர்பானதல்ல.
ஒரு கணினியில் உள்ள ஒரு கோப்பின் வகையை (file type) இனங்காண்பதற்கு பின்வருவனவற்றில் எது பயன்படுத்தப்படுகிறது?
கோப்பைக் கொண்டுள்ள உபகோப்புறை
கோப்பைக் கொண்டுள்ள கோப்புறை
கோப்புப் பெயர்
கோப்பு நீட்டிப்பு
சாதனங்களுடன் தொழிற்படுவதற்கு பணிசெயல் முறைமையினால் பயன்படுத்தப்படும் மென்பொருள் பின்வருவனவற்றுள் எது?
சாதன இயக்கிகள் (device drivers)
பிறழ்பொருள் (malware)
நச்சு நிரல் எதிர்ப்பு மென்பொருள் (anti-virus software)
பிரயோக மென்பொருள் (application software)
பயனுள்ள தகவலின் பண்பு அல்லாதது பிவருவனவற்றுள் எது?
துல்லியம்
நம்பகத்தன்மை
பொருத்தப்பாடு
அதிகளவில் இருத்தல்
பின்வரும் அலகுகளில் எவை மைய முறைவழி அலகில் இடம்பெறுகின்றன?
கட்டுப்பாட்டு அலகு, நினைவக அலகு, வெளியீட்டு அலகு
கட்டுப்பாட்டு அலகு, எண்கணிதத் தருக்க அலகு, உள்ளீட்டு அலகு
வெளியீட்டு அலகு, எண்கணிதத் தருக்க அலகு, நினைவக அலகு
கட்டுப்பாட்டு அலகு, எண்கணிதத் தருக்க அலகு
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A- ஒரு கணினியின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்வதற்கான முறைகளில் ஒன்று பணிசெயல் முறைமையிலுள்ள disk cleanup எனும் பயன்பாட்டு மென்பொருளைப் பயன்படுத்துவதன் மூலமாகும். B- வட்டொன்றின் தேக்ககத்தை தொடர்ச்சியாக ஆக்கிரமித்துள்ள கோப்புகளை ஒழுங்காக அடுக்குதல் வட்டை ஒழுங்கமைத்தல் (disk defragmentation) எனப்படும். பின்வருவனவற்றில் எது / எவை மேற்குறித்தவற்றைக் கருதும் போது செல்லுபடியாகும்?
A மாத்திரம் சரியானது
A, B ஆகிய இரண்டும் பிழையானவை
A, B ஆகிய இரண்டு சரியானவை
B மாத்திரம் சரியானது
ஒரு கணினி முறைமையின் அடிப்படைக் கூறு அல்லாதது பின்வருவனவற்றில் எது?
உயிர்ப்பொருள்
மைய முறைவழியலகு (CPU)
உள்ளீட்டுச் சாதனம்
வெளியீட்டுச் சாதனம்
ஒரு மாணவன் GIMP என்னும் மென்பொருள் இனித் தேவையில்லை என நினைத்து, அதனைக் கணினியிலிருந்து முற்றாக அகற்றுவதற்கு விரும்புகின்றான். அவன் இக் குறிக்கோளை அடைவதற்குப் பின்வரும் பணிசெயல் முறைமை அம்சங்களில் எதனைப் பயன்படுத்த வேண்டும்?
வட்டு ஒருங்கமைப்பி (disk defragmenter)
Add/ Remove program
சாளர முழுத்தேடி (Windows Explorer)
சில்லாக்கிக் கருவி (Snipping tool)
இடத்துரிப் பரப்பு வலையமைப்பு (LAN) பெரும்பரப்பு வலையமைப்பு (WAN) எனக் கணினி வலையமைப்பை வகைப்படுத்துவதற்கு பின்வருவனவற்றுள் எக்காரணி பயன்படுத்தப்படுகின்றது?
பணிசெயற் கதி
பயனர்களின் எண்ணிக்கை
கணினிகளின் எண்ணிக்கை
கணினிகளுக்கிடையிலான தூரம்( இட அமைவு)
பின்வரும் தொகுதிகளில் எது முறைமை மென்பொருளை (system software) மாத்திரம் கொண்டுள்ளது?
சொல் முறைவழிப்படுத்தி, வலை மேலோடி, விரிதாள் மென்பொருள்
முன்வைப்பு மென்பொருள், சாதன இயக்கி, வரைவியல் மென்பொருள்
தரவுத்தள முகாமைத்துவ முறைமை, பணிசெயல் முறைமை, விரிதாள் மென்பொருள்
பணிசெயல் முறைமை, பயன்பாட்டு மென்பொருள், சாதன இயக்கி (device driver)
பின்வருவனவற்றில் எது ஓர் உள்ளீட்டுச் சாதனம் மற்றும் வெளியீட்டுச் சாதனம் ஆகிய இரண்டாகவும் தொழிற்படுகின்றது?
தொடுதிரை (touch screen)
காந்த மை எழுத்துரு வாசிப்பி (MICR)
நினைவக அட்டை (memory card)
தொடு திண்டு (touch pad)
பின்வரும் கணினியின் எக்கூறு (Component) எண்கணித செயற்பாட்டைச் செய்யும் ?
பிரதான நினைவக அலகு
மைய முறைவழியலகு (CPU)
நினைவக அட்டை (memory card)
தொடு திண்டு (touch pad)
ஒரு மின்னஞ்சற் கணக்கைத் திறப்பதற்குப் பயனர் பெயர், கடவுச் சொல் ஆகிய இரண்டையும் சரியாக நுழைக்க வேண்டும். இத்தேவையை வகைகுறிப்பது பின்வரும் எத் தருக்க வாயில்(கள்) மூலமாகும்?
OR வாயில் மூலம்
AND, NOT ஆகிய இரு வாயில்கள் மூலம்
NOT வாயில் மூலம்
AND வாயில் மூலம்
பின்வரும் தொடர்பாடல் ஊடகங்களைக் கருதுக.
A - செங்கீழ் (Infrared) B ஒளியியல் நார்கள் (fiber optics) C- ஓரச்சு வடங்கள் (coaxial cables) D- நுண்ணலை (micro wave)
சாதாரண அஞ்சலுடன் ஒப்பிடும்போது மின்னஞ்சலின் நன்மை / நன்மைகள் மேற்குறித்தவற்றில் எது / எவை?
A,B,C ஆகிய எல்லாம்
A, C ஆகியன மாத்திரம்
B மாத்திரம்
A மாத்திரம்
பின்வருவனவற்றைக் கருதுக.
A- ஒரு சேவையாக உட்கட்டமைப்பு (infrastructure as a service) B- ஒரு சேவையாக மேடை (platform as a service) C- ஒரு சேவையாக மென்பொருள்(software as a service)
முகிற் கணினிப்படுத்தலின் (cloud computing) பிரதான சேவைகள் மேற்குறித்தவற்றில் எவை?
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, C ஆகியன மாத்திரம்
பின்வரும் கூற்றுகளில் எது எண் 971 தொடர்பாகச் சரியானது?
இது ஒரு துவித அல்லது பதின்ம எண்ணாக இருக்கலாம்.
இது ஒரு பதினறும (hexa decimal) எண் மாத்திரம் ஆகும்.
இது ஒரு பதின்ம எண் மாத்திரம் ஆகும்
இது ஒரு பதின்ம அல்லது பதினறும எண்ணாக இருக்கலாம்
பின்வருவனவற்றுள் கருத்துத் திருட்டு (plagiarism) என்பதற்கு உதாரணம் எது?
வேறொருவரினால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தை தனது ஆவணமாக முன்வைத்தல்
இணையத்தளத்திலிருந்து ஒன்றைப் பிரதிசெய்து அதனை உங்கள் ஆவணத்தில் உரிய உதவிகளுடன் செருகுதல்
பந்தியொன்றை நிகழ்நிலையில் (online) வாசித்து அதனை தனது சொற்களில் மீண்டும் எழுதுதல்
உங்களது சொந்த வேலையை அடிப்படையாகக் கொண்ட முன்வைப்பொன்றை உருவாக்குதல்
பின்வரும் உண்மை அட்டவணையைக் கருதுக. பின்வருவனவற்றில் எது மேற்குறித்த உண்மை அட்டவணையை வகைகுறிக்கின்றது?
NOT (OR) வாயில்களின் சேர்க்கை
AND வாயில்
OR வாயில்
NOT வாயில்
பின்வரும் உண்மை அட்டவணைகளில் எது பூலியன் கோவை ஐ வகைகுறிக்கின்றது?
பின்வருவனவற்றைக் கருதுக.
A- தகவல் பரிமாற்றம் B- வளத்தைப் பகிர்தல் C- கணினிகளுக்குப் பாதுகாப்பு
மேற்குறித்தவற்றுள் எது/ எவை கணினி வலையமைப்பின் நன்மை / நன்மைகளாகும்?
A மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
1011, 1101, 1110 என்னும் தரப்பட்ட துவித எண்களின் ஏறு வரிசை பின்வருவனவற்றுள் எது?
1110, 1101, 1011
1110, 1011, 1101
1011, 1101, 1110
1101, 1011, 1110
ASCII குறிமுறையில் எழுத்து ‘E’ஆனது பதின்ம எண் 69 இற்குச் சமனான துவிதச் சமவலு மூலம் வகைகுறிக்கப்படுகின்றது.பின்வருவனவற்றில் எத் துவிதப் பெறுமானம் ASCII குறிமுறையில் உள்ள எழுத்து 'B' யை வகைகுறிக்கின்றது?
1100100
1100001
1001001
1000010
“பொருள்களின் இணையப் பொறி (IoT)” தொடர்பாக சரியானது பின்வருவனவற்றுள் எது?
இணையத்துடன் தொடர்புபட்ட வாகனங்கள், web கமராக்கள், மின் குமிழ்கள், ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இணையத்திற்கு வழங்கப்படும் இன்னுமொரு பெயராகும்.
IoTஎன்பது இணையத்தை இயக்குவதற்கு தேவையான சாதனங்கள் ஆகும்.
IoTஎன்பது இணையத்தினூடாக உருப்படிகளை விற்றலும் கொள்வனவு செய்தலும் ஆகும்.
இலக்கமுறை படத்தைத் திருத்துவதற்கு (edit) மிகப் பொருத்தமான மென்பொருள் பின்வருவனவற்றுள் எது?
Libre office Impress
Adobe InDesign
Libre Office Writer
Adobe Illustrator
நிகழ்நிலைக் கொள்வனவு (online shopping) தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A- சாதாரண அங்காடிகளுடன் ஒப்பிடும்போது இது இலகுவானது. B- நாளின் எவ்வேளையிலும் கட்டளைகளை இடலாம். C- விநியோகிக்கப்படும் பொருள் கட்டளையிட்ட பொருளாக இல்லாது போகலாம்.
மேற்குறித்தவற்றில் சரியானவை எவை?
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
A, B மாத்திரம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக .
A- பரவு வரையியல் (raster graphics) கோப்புகள் படமூலங்களாலானவை (pixels) B- பரவு வரையியல் (raster graphics) கோப்புகள் பாதைகளாலானவை (paths) C- gif, jpeg என்பன பரவு வரையியலுக்கு உதாரணங்களாகும்.
மேற்குறித்தவற்றில் உண்மையானது / உண்மையானவை எது / எவை?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
A மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
பின்வருவனவற்றைக் கருதுக.
A- தீச்சுவர் (Firewall) B-கடவுச்சொல் C- தடைப்படாத வலு வழங்கல் D- காப்பு(Backup)
A-தெரியாத இணையத்தளங்களிலிருந்து பதிவிறக்கஞ் செய்தல் B- தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்தல் C-பாதுகாப்பான இணையத்தளங்களைப் பயன்படுத்தல்
மேற்குறித்தவற்றில் எது/ எவை இணையப் பயன்பாட்டில் நல்ல பழக்கம் / பழக்கங்களாகும்?
C மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B மாத்திரம்
A மாத்திரம்
நீங்கள் சாவிப்பலகையையும் சுட்டியையும் பயன்படுத்தும் அதேவேளை உங்கள் மணிக்கட்டை ஒரு தகுந்த நிலையில் வைத்திருக்கத் தவறினால், எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினை யாது?
மணிக்கட்டுச் சுரங்கச் சகசம்
முதுகுவலி
கணினிப் பார்வைச் சகசம்
மீள்வரும் தகைப்புக் காயம்
கற்றல் முகாமைத்துவ முறைமை (LMS) தொடர்பாக பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A- ஆசிரியர்களும் மாணவர்களும் LMS ஐப் பயன்படுத்தலாம். B- கற்பித்தல் மற்றும் கற்றல் செயன்முறையை எளிதாக விரிவுபடுத்துவதற்கு LMS உதவுகின்றது. C- LMS ஐ எங்கேயிருந்தும் எந்த நேரத்திலும் அடையலாம்.