2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள சனத்தொகை தொடர்பான தரவு Q43 கோப்புறையில் உள்ள population.xls எனும் விரிதாளில் (spreadsheet) தரப்பட்டுள்ளது. சன்த்தொகை தொடர்பான பல்வேறு புள்ளிவிவரங்களைக் கண்டறிவதற்காக கீழே தரப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய அவ்விரிதாளில் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும்.


 population.xls எனும் விரிதாளை திறந்து அதனை ”உமது பெயர்” எனும் கோப்புப் பெயருடன் xls கோப்பாக சேமிக்குக.
  1. எல்லா நிரல் தலைப்புகளையும் Boldface ஆக்கி Center aligned செய்க.
  2. நிரல் E இற்குப் பின்னால் ஒரு நிரலைச் செருகி அதனை Total Area எனப் பெயரிட்டு, Boldface செய்து Center செய்க.
  3. Total Area = Usable Land area + Forest area + Inland Water Land என்னும் சமன்பாட்டைப் பயன்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் உள்ள Total Land area ஐக் கணிப்பதற்கு ஒர் உகந்த சூத்திரத்தைக் கலம் F2 இல் எழுதுக.
  4. ஏனைய மாவட்டங்களின் Total Land area ஐக் காண்பதற்குக் கலம் F2 இல் எழுதிய சூத்திரத்தை F3 தொடக்கம் F10 வரையுள்ள கலங்களுக்கு நகல் செய்க.
  5. Density of population = Population/ Usable Land area என்னும் சமன்பாட்டைப் பயன்படுத்தி கொழும்பு மாவட்டத்திற்கான சனத்தொகை அடர்த்தியைக் கணிப்பதற்கு ஓர் உகந்த சூத்திரத்தைக் கலம் G2 இல் எழுதுக.
  6. ஏனைய மாவட்டங்களுக்கான சனத்தொகை அடர்த்தியைக் காண்பதற்கு கலம் G2 இல் எழுதிய சூத்திரத்தை G3 தொடக்கம் G10 வரையுள்ள கலங்களுக்கு நகல் செய்க.
  7. மேல்மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள் அடங்குகின்றன. மேல்மாகாணத்தின் இம்மூன்று மாவட்டங்களுக்குமான சனத்தொகை அடர்த்தியைக் காட்டுவதற்கு data labels உடன் ஒரு pie chart ஐ வரைக.
  8. தரப்பட்ட ஒரு மாவட்டத்தில் உயர்ந்தபட்சச் சனத்தொகை அடர்த்தியை இனங்காண்பதற்கு ஓர் உகந்த சூத்திரத்தைக் கலம் G11 இல் எழுதுக.
  9. Data area (A1 தொடக்கம் G11 வரை) ஐச் சுற்றி ஓர் இரட்டை வரிக் கரையை (double line border) வரைந்து தரவுகளிலிருந்து தலைப்புகளை வேறுபடுத்துவதற்குத் தலைப்புகளுக்குக் கீழே ஒரு கிடைக் கோட்டினை வரைக.

    விரிதாளைச் சேமித்து (save) பதிவேற்றம் (upload ) செய்க.

Select file to upload: