ஒரு கணினி முறைமையின் துணை நினைவகம் குறித்து பின்வருவனவற்றில் எவை உண்மையானலை A - கணினி தொழிற்படுதல் நிற்பாட்டப்பட்டாலும் (switched off) தரவுகள் அழிக்கப்படமாட்டாது. B - திண்ம நிலைச் சாதனங்களை (solid state devices) துணை நினைவகமாகப் பயன்படுத்த முடியும். C - துணை நினைவகம் ஆனது CPU நினைவகத்தின் பகுதியாகும்.
A மற்றும் B மாத்திரம்
A மற்றும் C மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
கணினிகளின் தலைமுறைகள் சம்பந்தமான பின்வரும் கூற்றுக்களில் சரியானவை எவை? A - முதலாம் தலைமுறைக் கணினிகளில் திரான்சிற்றர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. B - இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறைக் கணினிகளில் உயர்-நிலை செய்நிரலாக்கல் மொழிகள் பயன்படுத்தப்பட்டன. C - வரைவியல் பயனர் இடைமுகத்துடன் (GUI) கூடிய பணிசெயல் முறைமைகள் நான்காம் தலைமுறைக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டன.
A மற்றும் B மாத்திரம்
A மற்றும் C மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
கமலசிரி, அரச வலைப்பக்க விவரக் கொத்து சம்பந்தமான விவரங்களைப் பெறுவதற்காக, இலங்கை அரசின் உத்தியோகபூர்வ இணைய நுழைவாயிலை (http://www.gov.lk) அணுகை செய்தார். இலங்கை அரசின் இணைய நுழைவாயிலிலிருந்து பின்வருவனவற்றுள் எந்தச் சேவையை கமலசிரி பெற்றுக்கொண்டார்?
G2B
G2C
G2E
G2G
பின்வருவனவற்றில் எது பணிசெயல் முறைமைகளுக்கான உதாரணங்களை மாத்திரம் கொண்டுள்ளது
அண்ட்ரோயிட், உபுண்டு, வின்டோஸ் 10
உபுண்டு, வின்டோஸ் 10, வின்டோஸ் எக்ஸ்புளோரர் (Windows Explorer)
அண்ட்ரோயிட், வின்டோஸ் 10, வின்டோஸ் எக்ஸ்புளோரர்
அண்ட்ரோயிட், உபுண்டு, வின்டோஸ் எக்ஸ்புளோரர்
பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை? A - ஒரு வரைவியல் பயனர் இடைமுகம் (GUI) ஆனது கட்டளைகளை நிறைவேற்றுவதற்குச் சுட்டியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையை வழங்குகின்றது. B - WIMP என்பது Windows, Icons, Menu and Pointers என்பவற்றைக் குறித்து நிற்கின்றது. C - வரைவியல் பயனர் இடைமுகத்துடன் ஒப்பிடும்போது ஒரு கட்டளை வரி இடைமுகமானது (CLI) கூடுதலான பயனர் நட்புடையது (user-friendly).
A மாத்திரம்
B மாத்திரம்
A மற்றும் B மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
நீர், உமது பாடசாலைக்கென ஒரு புதிய தகவல் முறைமையை விருத்தி செய்வதற்கான பணி குறித்தொதுக்கப்பட்ட ஒரு குழுவின் தலைவரெனக் கொள்க. இம்முறைமையின் தேவைகளை இனங்காண்பதற்குப் பின்வரும் நுட்பங்களில் எவற்றைப் பயன்படுத்தலாம்? A - அவதானிப்பு B - நேர்காணல்கள் C - மூலவகைமாதிரி (prototyping)
A மற்றும் B மாத்திரம்
A மற்றும் C மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
பின்வருவனவற்றில் எது மென்பொருள் விருத்தி வாழ்க்கை வட்டத்திலுள்ள (SDLC) செயற்பாடுகளின் சரியான வரிசையாகும்? A - நடைமுறைப்படுத்தல் (implementation) B - தேவைச் சேகரிப்பு (requirement identification) C - வடிவமைப்பு (design) D - நிறுவுதல் (deployment) E - சோதித்தல் (testing) F - பராமரிப்பு (maintenance)
D, B, C, A, E மற்றும் F
B, D, C, A, F மற்றும் E
B, C, A,E, D மற்றும் F
B, C, D, A, E மற்றும் F
தரப்பட்ட விரிதாளில் A1,B1 ஆகிய கலங்கள் முறையே 40,50 என்னும் பெறுமானங்களைக் காட்சிப்படுத்துகின்றன. கலம் C1 இல் சூத்திரம் =A$1+B$1 நுழைவு செய்யப்பட்ட பின்னர் அது C1 இல் பெறுமானம் 90 ஐக் காட்சிப்படுத்துகின்றது. கலம் C1 ஆனது கலம் C2 இலும் கலம் D1 இலும் பிரதி செய்யப்படுமெனின், கலம் C2 இலும் கலம் D1 இலும் உள்ள பெறுமானங்கள் முறையே என்னவாக இருக்கும்?
9 மற்றும் 90
90 மற்றும் 140
90 மற்றும் 50
50 மற்றும் 90
P,Q,R,S எனும் முகப்படையாளமிடப்பட்ட நான்கு கூறுகளைக் கொண்ட பின்வரும் விரிதாள் துண்டத்தைக் கருதுக.
பின்வருவனவற்றில் எது P,Q,R,S முகப்படையாளங்களைச் சரியான வரிசையில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது?
இயக்கு (Active) கலம், நிரைத் தலைப்புகள், செருகு செயல், நிரல் தலைப்புகள்
இயக்கு கலம், நிரைத் தலைப்புகள், நிரல் தலைப்புகள், செருகு செயல்
செருகு செயல், நிரல் தலைப்புகள், இயக்கு கலம், நிரைத் தலைப்புகள்
இயக்கு கலம், நிரல் தலைப்புகள், நிரைத் தலைப்புகள், செருகு செயல்
பின்வரும் கூற்றுகளில் எது / எவை, ஒரு விரிதாளில் C2:E5 எனத் தரப்பட்டுள்ள ஒரு கல வீச்சுக்குச் சரியானது / சரியானவை? A - இவ்வீச்சில் உள்ள நிரைகளின் மொத்த எண்ணிக்கை மூன்றாகும். B - இக்கல வீச்சின் கேத்திரகணித வடிவம் ஒரு செவ்வகமாகும். C - இவ்வீச்சில் உள்ள கலங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆகும்.
A மாத்திரம்
C மாத்திரம்
A மற்றும் B மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
எறிவைகளின் வெவ்வேறு வகைகள் பற்றி பின்வரும் கூற்றுகளில் சரியானவை எவை? A - மேந்தலை எறிவைகளில் (overhead projcctors) பயன்படுத்தப்படும் ஊடுகாட்டும் தாள்கள் (transparent sheets) எப்போதும் முன்-ஆயத்தப்படுத்தப்படல் வேண்டும். B - படவில்லை எறிவைகளில் பயன்படுத்தப்படும் படவில்லைகளில் விம்பங்களைச் சேர்க்க முடியும். C - ஒரு கணினியைப் பயன்படுத்திச் செய்யப்படும் இலத்திரனியல் முன்வைப்புகள் (Presentations) பல்லூடக எறிவைகளினூடாகக் காட்சிப்படுத்தப்பட முடியும்.
A மற்றும் B மாத்திரம்
A மற்றும் C மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
சமன் Microsoft Word மற்றும் Libre Office Writer ஆகியவற்றைப் பயன்படுத்தி முறையாக வடிவமைத்தல் செய்யப்பட்ட (formatted) ஆவணங்களின் ஒரு சேகரிப்பை வைத்திருக்கின்றார். சரவை பார்த்தலுக்காக அவருக்கு அந்த ஆவணங்களை எந்தவித வடிவமைத்தல்களுமின்றி சேமிக்க வேண்டியுள்ளது. இத்தேவைக்கு மிகவும் உகந்த கோப்பு நீட்சி எதுவாகும்?
.odt
.txt
.docx
.pdf
பின்வரும் கூற்றுகளில் எவை ஒரு முன்வைப்பு மென்பொருள் குறித்து சரியானவை? A - தரப்பட்ட படவில்லை ஒன்றில் ஒரு பொருளுக்கு (single object) மாத்திரமே அசைவூட்டல் விளைவுகளைப் (animation effects) பிரயோகிக்க முடியும். B - ஒரு முன்வைப்புட் படவில்லையில் ஒலிப்பதிவுகள் (audio recordings) சேர்க்கப்பட முடியும். C - ஒரு படவில்லையில் சொற்களின் வரிகளைப் (text lines) பத்துக்குக் குறைவாகப் பயன்படுத்துவதற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
A மற்றும் B மாத்திரம்
A மற்றும் C மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
பின்வருவனவற்றுல் எவை இலத்திரனியல் தரவுத் தளங்களின் அனுகூலங்களாகக் கருதப்படுகின்றன? A - தரவுத் தேக்கி வைப்பதற்கு குறைந்தளவு பௌதிக இடம் தேவையாயிருத்தல். B - பிரதிகளைப் பெறுதல் இலகு C - தகவலை மீளப்பேறுதலில் வினைதிறன் கூடியது
A மற்றும் B மாத்திரம்
A மற்றும் C மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
வினா நூலாசிரியர்கள், நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் எழுதியன் நூல்கள் ஆகியன பற்றிய தரவுகளைத் தேக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பின்வரும் தரவுத்தள அட்டவணைகளை அடிப்படையாய்க் கொண்டவை.
நூலாசிரியர் நூல் (Author_Book) அட்டவணையின் முதன்மைச் சாவி (primary key) எதுவாகும்?
AuthorID
BookID
AuthorID + BookID
AuthorID + Royalty_Share
வினா நூலாசிரியர்கள், நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் எழுதியன் நூல்கள் ஆகியன பற்றிய தரவுகளைத் தேக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பின்வரும் தரவுத்தள அட்டவணைகளை அடிப்படையாய்க் கொண்டவை.
பின்வரும் கூற்றுகளைக் கருதுக: A - நூலாசிரியர் அட்டவணையில் உள்ள AuthorID ஓர் அந்நியச் சாவியாகும் (foreign key). B - நூலாசிரியர் நூல் அட்டவணையில் உள்ள AuthorID ஓர் அந்நியச் சாவியாகும். C - நூல் அட்டவணையில் உள்ள BookID ஒரு முதன்மைச் சாவியாகும். மேலே தரப்பட்ட கூற்றுகளில் எவை சரியானவை?
A மற்றும் B மாத்திரம்
A மற்றும் C மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
வினா நூலாசிரியர்கள், நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள் எழுதியன் நூல்கள் ஆகியன பற்றிய தரவுகளைத் தேக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பின்வரும் தரவுத்தள அட்டவணைகளை அடிப்படையாய்க் கொண்டவை.
“Mathematics with Fun” என்னும் பெயரிடப்பட்ட நூலின் நூலாசிரியர் யார்?
Anil Ratnayake
Indika Serasinghe
Sharaf Khan
Lalith Wijenayake
HTML பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது பொய்யானது?
HTML ஆனது Hypertext Markup Language ஐக் குறித்து நிற்கின்றது.
HTML ஐப் பயன்படுத்தி வலைப் பக்கங்கள் அமைக்கப்பட முடியும்.
ஒரு வலை மேலோடியில் வலைப் பக்கங்கள் எப்படிக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்பகை HTML ஒட்டுகள் (tags) துணிகின்றன.
ஒரு வலை மேலோடியைப் பயன்படுத்தியே HTML ஆவணங்கள் உருவாக்கப்படுகின்றன.
ஓர் எண்ணிட்ட பட்டியலை (numbered list) அமைப்பதற்குப் பின்வரும் HTML ஒட்டுச் சோடிகளில் எது பயன்படுத்தப்படலாம்?
ul,li
dl, dd
nl, li
ol, li
பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை? A - உரிய URL அறியப்படாமல் இருக்கும்போது உலகளாவிய வலையில் (WWW) தகவலைத் தேடுவதற்குத் தேடற் பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. B - அஞ்சற் சேவையகங்களுக்கிடையே செய்திகளைப் பரிமாறுவதற்கு SMTP பயன்படுத்தப்படுகின்றது. C - வலைச் சேவையகம் ஆள்களப் பெயர்களை IP முகவரிகளுக்கு மாற்றம் செய்கிறது.
A மற்றும் B மாத்திரம்
A மற்றும் C மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
பின்வரும் கூற்றுகளில் எது பொய்யானது
இணையம், கணினி வலையமைப்புகளின் ஒரு வலையமைப்பாகும்.
இணையத்தினூடாக அணுகத்தக்க ஒரு HTML ஆவணம் ஒரு வலைப் பக்கம் என அழைக்கபடும்
ஒரு வலைப்பக்கமானது பல்லூடக உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கமுடியும்.
இணையமும் WWWஉம் ஒன்றாகும்
தரப்பட்டுள்ள அட்டவணையை உருவாக்குவதற்குப் பின்வரும் HTML ஒட்டுகளிலும் பரமானங்களிலும் (tags and parameters) எவற்றைப் பயன்படுத்தலாம்?
Table, tr, th மற்றும் td உடன் rowspan=2
Table, tr, th மற்றும் td உடன் colspan=2
Table, th, td மற்றும் tr உடன் rowspan=2
Table, td, tr மற்றும் th உடன் colspan=2
பின்வருவனவற்றில் எது ஒரு மின்னஞ்சல் முகவரியின் சரியான வடிவமாகும்?
nuwan.senevi.gmail.com
nuwan2.senevi@gmail.com
nuwansenevi@gmail_com
nuwan@senevi@gmail.com
பின்வரும் கூற்றுகளில் எவை உண்மையானவை? A - இலக்கமுறைப் பிரிப்பு (digital divide) ஆனது வன்பொருளை ஒத்திசை (analog) மற்றும் இலக்கமுறை (digital) எனும் இரு வகைகளாகப் பிரிக்கின்றது. B - மென்பொருள் களவு (piracy) என்பது கணினிச் செய்நிரல்களைச் சட்டவிரோதமாக நகல் செய்வதாகும். C - இலக்கமுறை அறிவுடைமை (digital literacy) மூலம் இலக்கமுறைப் பிரிப்பைக் குறைக்க முடியும்.
A மற்றும் B மாத்திரம்
A மற்றும் C மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
தீய மென்பொருள் (malicious software) பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை? A - றோஜன் குதிரை (Trojan horse) என்பது ஒற்றர்பொருளின் (spyware) ஒரு வடிவமாகும். B - கணினி வேம்களால் (worms) தாமாகவே பரவமுடியும். C - விவரத்திருட்டு (phishing) என்பது கணினித் திரையில் தேவையற்ற அறிவித்தல்களை காட்சிப்படுத்துவதற்கான ஓர் உத்தியாகும்.
A மாத்திரம்
B மாத்திரம்
A மற்றும் B மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
பின்வரும் எந்த வலையமைப்பு இடத்தியலில் (topology) ஒவ்வொரு கணினியும் வேறு இரு கணினிகளுடன் செப்பமாக இணைக்கப்பட்டிருக்கும்?
பாட்டை (Bus)
வளையம் (Ring)
கண்ணி (Mesh)
உடு (Star)
250 படமூல (pixels) அகலமும் 100 படமூல உயரமும் உள்ள ஒரு விம்பத்தின் (image) பிரிதிறன் (resolution) யாது?
250 ➗ 100
250 + 100
250 x 100
250 x 100 x 8
படமூலங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை? A - படமூலங்கள் ஓர் இலக்கமுறை விம்பத்தின் (digital image) பௌதிக பரிமாணத்தை அளவிடுவதற்குப்பயன்படுத்தப்படுகின்றன. B - ஒரு படமூலத்திற்கான பிற்றுகளின் எண்ணிக்கை ஓர் இலக்கமுறை விம்பத்தின் நிறங்களைத் துணிகின்றது. C - ஓர் இலக்கமுறை விம்பத்தின் படமூலங்கள் ஒரு முப்பரிமான அணியில் (array) ஒழுங்குபடுத்தப்படுகின்றன.
A மற்றும் B மாத்திரம்
A மற்றும் C மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
பின்வருவனவற்றில் எது, தரப்பட்ட நான்கு எண்களை ஏறுவரிசையில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது?
6416, 2268, 20010, 1010112
1010112, 6416, 2268, 20010
1010112, 6416, 20010, 2268
20010, 2268, 1010112, 6416
பின்வரும் பூலியன் கோவைகளில் எது தரப்பட்ட தருக்கச் சுற்றின் வெளியீட்டிற்குச் சமமானது?
(x.y) + (y’+x)
(x+y).(y’.x)
(x+y).(x.y’)
(x.y)+(y+x’)
பின்வரும் தருக்கச் சுற்றைக் கருதுக:
பின்வரும் தருக்கச் சுற்றுகளில் எது, மேற்குறித்த தருக்கச் சுற்றுக்குச் சமமான ஒரு மெய்நிலை அட்டவணையைக் கொண்டுள்ளது?
செய்நிரலாக்க (programming) மொழிகள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை? A - பஸ்கால் மற்றும் C ஆகியன உயர்-நிலைச் செய்நிரலாக்க மொழிகளுக்கு உதாரணங்களாகும். B - இயந்திர மொழியில் (machine language) எழுதப்பட்ட ஒரு செய்நிரல் கணினியில் நேரடியாக நிறைவேற்றப்படலாம். C - ஒருங்குசேர்ப்பு மொழியில் (assembly language) எழுதப்பட்டுள்ள செய்நிரல்களின் நிறைவேற்றும் கதியானது இயந்திர மொழியில் எழுதப்பட்டுள்ள செய்நிரல்களின் நிறைவேற்றும் கதியிலும் ஒப்பீட்டளவில் அதிகமானது.
A மற்றும் B மாத்திரம்
A மற்றும் C மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
பின்வரும் போலிக்குறிமுறையின் வெளியீடு (output) யாது?
25
41
50
55
பஸ்கால் மொழியில் உள்ள பின்வரும் அணி (array) M ஐக் கருதுக: (அணியின் சுட்டி 1 இல் ஆரம்பிப்பதாக கருதுக)
A - அணி M இன் நீளம் 8 ஆகும். B - M[5] பெறுமதி 50 ஐக் கொண்டுள்ளது. C - M[1) + M[3] இன் பெறுமதி 60 ஆகும். மேற்குறித்த கூற்றுகளில் எவை சரியானவை?
A மற்றும் B மாத்திரம்
A மற்றும் C மாத்திரம்
B மற்றும் C மாத்திரம்
A, B மற்றும் C எல்லாம்
தரப்பட்ட பாய்ச்சற் கோட்டுப் படத்தில் num இற்கு உரிய உள்ளீடாக 5 ஆனது தரப்படுமெனின் வரும் வெளியீடு யாது?