தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
பின்வரும் சாதனங்களுள் எது உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகிய இரண்டு திறன்களையும் கொண்டுள்ளது?
இயக்குபிடி (joystick)
ஒளியியல் எழுத்துரு அடையாளம் காணும் சாதனம் (OCR)
தொடுதிரை
வலைகமரா (webcam)
பின்வருவனவற்றுள் எது கணினியின் வன்தட்டு செயலிழப்பிலிருந்து தரவு மற்றும் தகவல்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த நடைமுறையாகக் கூடியது?
தீச்சுவரொன்றை (firewall) நிறுவுதல்
நச்சு எதிர் மென்பொருளொன்றை நிறுவுதல்
சீரான கால இடைவெளியில் காப்பு நகலெடுத்தல் (backups)
வலுவான கடவுச்சொல்லொன்றை பயன்படுத்தல்
பின்வருவனவற்றுள் கணினித் தலைமுறைகள் தொடர்பாக சரியானது எது?
ஒருங்கிணைந்த சுற்றுகள் (IC) முதலாம் தலைமுறைக் கணினிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
வெற்றிடக் குழாய்கள் (Vacuum tubes) இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
திரான்சிஸ்டர்கள் (Transistors) மூன்றாம் தலைமுறைக் கணினிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
மிகப் பெரியளவு ஒருங்கிணைந்த சுற்றுகள் (VLSI) நான்காம் தலைமுறைக் கணினிகளில் அறிமுகப்படுத்தப்பட்டன.
பின்வருவனவற்றுள் இலங்கையில் G2C (அரசிடமிருந்து பிரஜைகளுக்கான) சேவைகள் தொடர்பானவை எவை?
A - தொடரறா முறையில் க.பொ.த (சா.தர) பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடல் B - தொடரறா முறையில் உணவுப்பொருட்களைக் கட்டளைசெய்தல் C - தொடரறா முறையில் வாகன வருமான அனுமதிப் பத்திரங்களை புதுப்பித்தல்
A மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றுள் தரவு முறைவழியாக்கத்திற்கு உதாரணமொன்றாக காணப்படுவது எது?
பண மீளப்பெறுவனவின் பின்னர் வங்கி மென்பொருளினைப் பயன்படுத்தி கணக்கு மீதியை கணித்தல்
கோப்பொன்றை (file) USB செலுத்தியிலிருந்து கணினியொன்றின் வன்தட்டுக்கு பிரதி செய்தல்
தனிநபர் கணினியொன்றில் (PC) ஒலிப்பதிப்பு மென்பொருளை (install) நிறுவுதல்
வருடியொன்றைப் (scanner) பயன்படுத்தி கடிதமொன்றை வருடுதல்
ஒரு மீ கணினி, ஒரு மடிக்கணினி மற்றும் ஒரு ஏட்டு - வில்லை தனியாள் கணினி என்பவற்றிலிருந்து பின்வரும் பிரயோகங்களுக்கு மிகவும் பொருத்தமான கணினி வகையைத் தெரிவுசெய்க.
A - செயற்கைக்கோள்களிலிருந்து தொடர்ச்சியாக கிடைக்கப்பெறும் அதிகளவிலான தரவுகளை முறைவழியாக்கம் செய்வதற்கு B - எழுத்தாளர் ஒருவருக்கு அவர் விடுமுறையில் வீட்டுக்கு வெளியில் சென்றிருக்கும்போது கட்டுரையொன்று எழுதுவதற்கு C - கிடைக்கப்பெறும் உருப்படிகளின் வேண்டுகோள்களை பதிவு செய்வதற்கு கடைகளுக்குச் செல்லும் ஒரு நடமாடும் விற்பனை பிரதிநிதியின் பாவனைக்காக
A: மடிக்கணினி, B: மீ கணினி, C: ஏட்டு-வில்லை தனியாள் கணினி
A: மடிக்கணினி, B : ஏட்டு-வில்லை தனியாள் கணினி, C: மீ கணினி
A: மீ கணினி, B: மடிக்கணினி, C: ஏட்டு-வில்லை தனியாள் கணினி
A : ஏட்டு-வில்லை தனியாள் கணினி, B: மீ கணினி, C; மடிக்கணினி
A மற்றும் B என முகப்படையாளமிடப்பட்ட வெற்றிடங்களுடனான பின்வரும் கூற்றைக் கருதுக.
முறைவழியாக்கச் (processing) செயன்முறையின்போது மையமுறைவழியாக்க அலகானது அதனது .......A........ ஐ, .................B............. இல் இருந்து கொண்டுவரப்பட்ட தரவுகளை தற்காலிகமாகச் சேமிப்பதற்கு பயன்படுத்துகின்றது.
மேலே A மற்றும் B என முகப்படையாளமிடப்பட்ட வெற்றிடங்களை முறையே நிரப்புவதற்கு பின்வருவனவற்றுள் எந்த சேர்க்கை பொருத்தமானது?
முதன்மை நினைவகம், பதிவகங்கள்
பதிவகங்கள், முதன்மை நினைவகம்
துணை நினைவகம், முதன்மை நினைவகம்
துணை நினைவகம், பதிவகங்கள்
பரிமாற்று ஊடகம் தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியானது / சரியானவை எது / எவை?
A - 200 m இற்கும் கூடுதலான நீண்ட தூரங்களுக்கு தரவுகளை பரிமாற்றுவதற்கு கவசமிடப்படாத முறுக்கப்பட்ட சோடி (UTP) வடங்கள் பொருத்தமானவையாகும். B - நார் ஒளியியல் வடங்கள் தரவுகளை UTP வடங்களைவிட வேகமாகப் பரிமாற்றும். C - வடமற்ற சாவிப்பலகைகள் கணினிகளுடன் தொடர்பாடுவதற்கு செந்நிறக் கீழ் சமிக்ஞை தரவு பரிமாற்றம் பயன்படுத்தப்படுகின்றது.
B மாத்திரம்
C மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் கூற்றுகளுள் உண்மையானது / உண்மையானவை எது / எவை?
A - கணினிகளில் தரவு மற்றும் அறிவுறுத்தல்களைச் சேமிப்பதற்கு இரும வடிவம் பயன்படுத்தப்படுகின்றது. B - 945 ஆனது எண்ம மற்றும் பதினறும ஆகிய இரண்டு எண்முறைகளுக்கும் செல்லுபடியான ஒரு இலக்கமாகும். C - 4128 சமனாவது 1000010102 இற்கு ஆகும்.
A மாத்திரம்
B மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்3
A, B, C ஆகிய எல்லாம்
தரப்பட்ட சேமிப்பு சாதனங்களை அணுகல் வேகத்திற்கேற்ப இறங்குவரிசையில் காட்டுவது பின்வருவனவற்றுள் எது?
பதுக்கு (cache) நினைவகம், பிரதான நினைவகம், பதிவகம், வன்தட்டு
வன்தட்டு, பதுக்கு நினைவகம், பதிவகம், பிரதான நினைவகம்
பதிவகம், பதுக்கு நினைவகம், பிரதான நினைவகம், வன்தட்டு
பதிவகம், பிரதான நினைவகம், வன்தட்டு, பதுக்கு நினைவகம்
'E' என்ற எழுத்து ASCII அட்டவணையில் 69, என வகைகுறிக்கப்படுமாயின் ASCII அட்டவணைக்கமைய 'G' என்ற எழுத்தின் இரும வகைகுறிப்பு யாது?
1000110
1000111
1001000
1001001
பின்வருவனவற்றுள் எது பணிசெயல் முறைமையின் செயற்பாடுகளை மாத்திரம் கொண்டுள்ளது?
சம்பள புத்தக (payroll) முகாமைத்துவம், செயல் முகாமைத்துவம், கோப்பு முகாமைத்துவம்
செயல் முகாமைத்துவம், தரவுத்தள முகாமைத்துவம், கோப்பு முகாமைத்துவம்
செயல் முகாமைத்துவம், நினைவக முகாமைத்துவம், தரவுத்தள முகாமைத்துவம்
செயல் முகாமைத்துவம், நினைவக முகாமைத்துவம், கோப்பு முகாமைத்துவம்
தற்போதுள்ள கோப்புகளை (files) அழிக்காது வன்தட்டிலுள்ள இடத்தைப் பாவனைக்கு ஏற்றவகையில் அதிகரிப்பதற்கு பின்வரும் எச்செயற்பாடு பயன்படுத்தப்படும்?
வன்தட்டில் காணப்படும் கோப்புகளை நெருக்குதல் (compression)
வன்தட்டிலுள்ள சில கோப்புகளை பளிச்சீட்டு செலுத்தி (flashdrive) ஒன்றிற்கு பிரதியாக்கம் செய்தல்
வன்தட்டினை வடிவமைத்தல் (formatting)
வன்தட்டினை பிரிவீடு செய்தல் (partitioning)
சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளொன்றைப் பயன்படுத்தி ஆவணமொன்றை பதிப்பிக்கும்போது அவ்வாவணத்தின் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பகுதியை இன்னொரு ஆவணத்தில் பிரதி செய்ய நீங்கள் தீர்மானித்துள்ளீர்கள். இச்செயலுக்காக பின்வரும் எச்சாவி சேர்க்கைகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும்?
சரியாCtrl + C அதன் பின்னர் Ctrl + V
சரியான விCtrl + N அதன் பின்னர் Ctrl + V
Ctrl + P அதன் பின்னர் Ctrl + V
Ctrl + V அதன் பின்னர் Ctrl +C
விரிதாளொன்றில் (A3:C4) என வழங்கப்பட்ட கலங்களின் வீச்சினைக் கருதுக. வழங்கப்பட்ட அந்த வீச்சினுள் உள்ளடக்கப்படும் கலங்கள் பின்வருவனவற்றுள் எவை?
A3, C4 மாத்திரம்
A3, B3, C3 மாத்திரம்
A3, A4, C3,C4 மாத்திரம்
A3, B3, C3, A4, B4, C4 மாத்திரம்
கலம் C2 இல் = B2*B$5 எனும் சூத்திரம் எழுதப்பட்டுள்ள பின்வரும் விரிதாள் பகுதியை கருதுக
C2 என்ற கலத்தில் உள்ள சூத்திரம் C3 என்ற கலத்திற்கு பிரதிசெய்யப்பட்டிருக்குமாயின் பின்வருவனவற்றுள் எது C3 என்ற கலத்தில் காட்சிப்படுத்தப்படும்?
0
5000
6000
60000
நீங்கள் பதிப்புச் செய்துகொண்டிருக்கின்ற இலத்திரனியல் முன்வைப்பொன்றுக்கு வெற்று படவில்லையொன்றைச் சேர்க்க வேண்டியுள்ளது. இந்தச் செயற்பாட்டுக்காக பின்வருவனவற்றுள் எந்தச் சாவிச் சேர்க்கைகள் பயன்படுத்தப்பட வேண்டும்?
Ctrl+M
Ctrl+N
Shift+B
Shift+V
இலத்திரனியல் முன்வைப்பு மென்பொருளின் பின்வரும் எந்த அம்சம் (feature), ஒழுங்கமைப்பு 1 இல் காணப்படும் படவில்லையொன்றின் உள்ளடக்க ஒழுங்கமைப்பை (content arrangement) ஒழுங்கமைப்பு 2 ஆக மாற்றியமைப்பதற்கு பயன்படுத்தப்பட முடியும்?
படவில்லை தளக்கோலம் (slide layout)
படவில்லை காட்சி (slide show)
படவில்லை வரிசைப்படுத்தி (slide sorter)
படவில்லை நோக்கு (slide view)
சொல் முறைவழிப்படுத்தல் மற்றும் இலத்திரனியல் முன்வைப்பு ஆகிய இரண்டு மென்பொருள்களினதும் பொதுவான அம்சம் அல்லாதது பின்வருவனவற்றுள் எது?
A - படவில்லையொன்றின் எழுத்து வரிகளின் எண்ணிக்கையை 6 மற்றும் 9 இற்கு இடையில் மட்டுப்படுத்தல் B - தனியொரு படவில்லையில் அதிகளவான படங்களையும் மற்றும் வரைபுகளையும் கொண்டிராது இருத்தல் C - ஒவ்வொரு படவில்லையிலும் அதிகளவான சிவப்பு வர்ணத்தைப் பயன்படுத்தல்
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
புத்தக (Book) அட்டவணை (புத்தக விவரங்களையும் ஒவ்வொரு புத்தகமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா இல்லையா எனும் விவரத்தையும் கொண்டுள்ளது) மாணவர் (Student) அட்டவணை (பாடசாலையிலுள்ள அனைத்து மாணவர்களின் விவரத்தையும் ஒவ்வொரு மாணவரும் நூலகத்தில் அங்கத்தவரா இல்லையா எனும் விவரத்தையும் கொண்டுள்ளது) ஒதுக்கீடு (Reservation) அட்டவணை (மாணவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட புத்தகங்களின் விவரத்தைக் கொண்டுள்ளது)
மாணவர் (student) அட்டவணையில் எத்தனை புலங்கள் (fields) காணப்படுகின்றன?
2
3
4
5
புத்தக (Book) அட்டவணை (புத்தக விவரங்களையும் ஒவ்வொரு புத்தகமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா இல்லையா எனும் விவரத்தையும் கொண்டுள்ளது) மாணவர் (Student) அட்டவணை (பாடசாலையிலுள்ள அனைத்து மாணவர்களின் விவரத்தையும் ஒவ்வொரு மாணவரும் நூலகத்தில் அங்கத்தவரா இல்லையா எனும் விவரத்தையும் கொண்டுள்ளது) ஒதுக்கீடு (Reservation) அட்டவணை (மாணவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட புத்தகங்களின் விவரத்தைக் கொண்டுள்ளது)
ஒதுக்கீடு (Reservation) அட்டவணையில் உள்ள Reserved_Date
புத்தக (Book) அட்டவணையில் உள்ள Title
புத்தக (Book) அட்டவணை (புத்தக விவரங்களையும் ஒவ்வொரு புத்தகமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா இல்லையா எனும் விவரத்தையும் கொண்டுள்ளது) மாணவர் (Student) அட்டவணை (பாடசாலையிலுள்ள அனைத்து மாணவர்களின் விவரத்தையும் ஒவ்வொரு மாணவரும் நூலகத்தில் அங்கத்தவரா இல்லையா எனும் விவரத்தையும் கொண்டுள்ளது) ஒதுக்கீடு (Reservation) அட்டவணை (மாணவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட புத்தகங்களின் விவரத்தைக் கொண்டுள்ளது)
குமார் (Kumar) என்பவரினால் ஒதுக்கீடு (Reserved) செய்யப்பட்ட புத்தகத்தின் தலைப்பு (Title) என்ன?
Classic Short Stories
Effective Writing
Poem Writing
Vocal Theory
புத்தக (Book) அட்டவணை (புத்தக விவரங்களையும் ஒவ்வொரு புத்தகமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா இல்லையா எனும் விவரத்தையும் கொண்டுள்ளது) மாணவர் (Student) அட்டவணை (பாடசாலையிலுள்ள அனைத்து மாணவர்களின் விவரத்தையும் ஒவ்வொரு மாணவரும் நூலகத்தில் அங்கத்தவரா இல்லையா எனும் விவரத்தையும் கொண்டுள்ளது) ஒதுக்கீடு (Reservation) அட்டவணை (மாணவர்களால் ஒதுக்கீடு செய்யப்பட்ட புத்தகங்களின் விவரத்தைக் கொண்டுள்ளது)
மாணவரொருவர் நூலக அங்கத்துவத்தைப் பெற்று புத்தகமொன்றை ஒதுக்கீடு செய்கிறார். இந்நோக்கத்திற்காக இற்றைப்படுத்தப்பட வேண்டிய அட்டவணைகள் எவை?
புத்தக (Book) அட்டவணையும் ஒதுக்கீடு (Reservation) அட்டவணையும்
புத்தக (Book) அட்டவணையும் மாணவர் (Student) அட்டவணையும்
ஒதுக்கீடு (Reservation) அட்டவணையும் மாணவர் (Student) அட்டவணையும்
புத்தக (Book) அட்டவணை, ஒதுக்கீடு (Reservation) அட்டவணை மற்றும் மாணவர் (Student) அட்டவணை
மென்பொருள் முறைமைச் சோதனையின் (software system testing) சரியான ஒழுங்குமுறையை பின்வருவனவற்றுள் எது காட்டுகின்றது?
ஏற்புச் சோதனை, ஒருங்கிணைப்புச் சோதனை, அலகுச் சோதனை, முறைமைச் சோதனை
முறைமைச் சோதனை, ஒருங்கிணைப்புச் சோதனை, ஏற்புச்சோதனை, அலகுச் சோதனை
அலகுச் சோதனை, ஏற்புச் சோதனை, முறைமைச் சோதனை, ஒருங்கிணைப்புச் சோதனை
அலகுச் சோதனை. ஒருங்கிணைப்புச் சோதனை, முறைமைச் சோதனை, ஏற்புச் சோதனை
உலகளாவிய வலையில் (WWW) உள்ள ஒவ்வொரு வலைப்பக்கமும் கொண்டிருக்கும் தனித்துவ அடையாளங்காணி (identifier) அழைக்கப்படுவது
மின்னஞ்சல் முகவரி
மீ இணை (hyperlink)
IP முகவரி
சீர்மை வள இடப்படுத்தி (URL)
இணையம் தொடர்பான செம்மை நடப்பொழுங்குகளை மாத்திரம் கொண்டுள்ள சேர்க்கை பின்வருவனவற்றுள் எது?
FTP, HTML, HTTP, SMTP
FTP, HTML, HTTP, TCP/IP
FTP, HTTP, SMTP, TCP/IP
HTML, SMTP, TCP/IP, URL
பின்வருவனவற்றுள் எச்சேர்க்கை இணையச் சேவைகளை மாத்திரம் வகைகுறிக்கின்றது?
மின்ன ஞ்சல், கோப்புப் பகிர்வு (file sharing), தொலை அணுகல், பல்லூடக ஓட்டம் (streaming of media)
கோப்புப் பகிர்வு, HTML குறிமுறை, தொலை அணுகல், தேடல் இயந்திரங்கள்
தொலை அணுகல், தேடல் இயந்திரங்கள், பல்லூடக ஓட்டம், வலைமேலோடிகள்
வலை மேலோடியொன்றினால் ஒப்படைப்புச் செய்யப்படும் (render) பின்வரும் பட்டியலைக் கருதுக.
Science
Maths
English
மேற்குறிப்பிட்ட பட்டியலை உருவாக்குவதற்கு தேவையான HTML ஒட்டுகள் எவை?
,
,
,
,
பின்வருவனவற்றுள் வலைப்பக்க விருத்தி தொடர்பான சரியான கூற்றுகள் எவை?
A - மாறும் வலைப்பக்கங்களில் (dynamic web pages) காட்டப்படும் உள்ளடக்கம் (content) பயனரின் உள்ளீடுகளுக்கு ஏற்ப அல்லது நேரத்திற்கேற்ப மாறுபடலாம். B - மாறும் வலைப்பக்கங்கள் HTML ஐ மாத்திரம் பயன்படுத்தி உருவாக்கப்படும். C - வலைப்பக்கங்களை உருவாக்குவதற்கு வலைப் படைப்பாக்கக் கருவிகளைப் (web authoring tools) பயன்படுத்த முடியும்.
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் எந்த ஒட்டுகளை (tags) HTML எழுத்துருக்களை (characters) வடிவமைப்பு செய்யப் பயன்படுத்தலாம்?
,, ,
,, ,
,
,,
,,
,
பின்வருவனவற்றுள் எது ஒரு கணினியைப் பாவிக்கும்போது பயன்படுத்த வேண்டிய சரியான தோரணையாகும்?
32 வர்ணங்களை வகைகுறிப்பதற்கு பட மூலகமொன்றுக்கான (pixel) பிட்டுகள் (bpp) எத்தனை தேவைப்படும்?
4
5
6
7
படிமமொன்றின் (image) துணிப்பு (resolution) குறைக்கப்படும்போது அந்தப் படிமத்திற்கு என்ன நடைபெறும்?
படிமத்தின் தரமும் (quality) கோப்பின் அளவும் (file size) அதிகரிக்கும்.
படிமத்தின் தரமும் கோப்பின் அளவும் குறைவடையும்.
படிமத்தின் தரம் அதிகரிக்கும்போது கோப்பின் அளவு குறைவடையும்.
படிமத்தின் தரம் குறைவடையும்போது கோப்பின் அளவு அதிகரிக்கும்.
பின்வரும் கூற்றுகளுள் உண்மையானவை எவை?
A - Pascal மொழி உயர்மட்ட செய்நிரலாக்கல் மொழியொன்றுக்கு ஓர் உதாரணமாகும். B - கீழ்மட்ட மொழி செய்நிரல்களைவிட உயர்மட்ட மொழி செய்நிரல்களை செய்நிரலாளர்களுக்கு விளங்கிக்கொள்வது இலகுவாகும். C - தொகுப்பியானது (compiler) உயர்மட்ட மொழி செய்நிரலொன்றை இயந்திரமொழி (machine language) அறிவுறுத்தல்களாக மொழிபெயர்க்கும். (
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் போலி குறிமுறை (pseudo-code) துண்டத்தைக் கருதுக:
units என்ற மாறிக்கு 175 என்ற பெறுமானத்தை உள்ளிடும்போது வெளியீடு என்னவாக இருக்கும்?
175
250
300
375
பின்வரும் போலி குறிமுறைத் துண்டத்திற்கு பயனர் ஒருவர் 4,5,2,-1 என்ற இலக்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக உள்ளீடு செய்வாராயின் வெளியீடு யாதாக இருக்கும்?
-1
0
4
5
கணினி செய்நிரல்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - மாறிகள் (variables) வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு பெறுமானங்களைக் கொண்டிருக்க முடியும். B - செய்நிரலாக்கல் மொழியொன்றின் ஒதுக்கீடு செய்யப்பட்ட சொற்களை (reserved words) அந்த செய்நிரல் மொழியிலேயே மாறிப் பெயர்களாக பயன்படுத்த முடியும்.
மேற்குறிப்பிடப்பட்டவை தொடர்பாக பின்வருவனவற்றுள் எது உண்மையானது?
A மாத்திரம் சரியானது
B மாத்திரம் சரியானது
A மற்றும் B ஆகிய இரண்டும் சரியானவை
A மற்றும் B ஆகிய இரண்டும் பிழையானவை
பின்வரும் போலி குறிமுறையை கருதுக:
a, b மற்றும் C என்ற மாறிகளுக்கு முறையே 50, 30 மற்றும் 70 எனும் பெறுமானங்கள் உள்ளீடு செய்யப்படின் வெளியீடாக காட்சிப்படுத்தப்படுவது யாது?
0
30
50
70
பின்வரும் தர்க்கச் சுற்றில் X இற்கு முறையே 0 மற்றும் 1 எனும் உள்ளீடுகள் வழங்கப்படும்போது Y இற்கு கிடைக்கக்கூடிய வெளியீடுகள் இரண்டும் முறையே எவை?