பின்வருவனவற்றில் எது பணிசெயல் முறைமையில் (Operating system) நினைவக முகாமையின் (Memory management) ஒரு பகுதியாக நிறைவேற்றப்படும் ஒரு நேரடித் தொழிற்பாடாகும் ?
ஒரு கொள்பணி நிறைவேற்றப்பட்ட பின்னர் நினைவகத்தை விடுவித்தல்
வன்வட்டிற்குள் பிரவேசித்தல்
ஓர் உறையில் கோப்புகளை ஒழுங்கமைத்தல்
சாதனங்களை முகாமை செய்தல்
பின்வருவனவற்றில் எது ஒரு டெராபைற்றுக்கு (TB) அண்ணளவாகச் சமவலுவானது ?
1x106 MB
1x106 GB
1x108 KB
1x109 bytes
எண்ம 64 இற்குச் சமவலுவான தசம எண் யாது ?
48
52
62
68
பின்வரும் தருக்கச் சுற்று வரிப்படத்தைக் கருதுக:
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த தருக்கச் சுற்றுக்குச் சமவலுவானது ?
பின்வரும் தருக்கச் சுற்றுகளில் எது தரப்பட்டுள்ள மெய்நிலை அட்டவணையை வகைகுறிக்கின்றது ?
பின்வருவனவற்றில் எது இணையம், உலகளாவிய வலை (www) ஆகியன தொடர்பாகச் சரியானது ?
இணையம் உலகளாவிய வலையின் ஒரு சேவையாகும்.
இணையமும் உலகளாவிய வலையும் ஒன்றேயாகும்.
உலகளாவிய வலை இணையத்தின் ஒரு சேவையாகும்.
இணையத்திற்கும் உலகளாவிய வலைக்குமிடையே எதுவித தொடர்பும் கிடையாது.
சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கிய ஓர் அட்டவணையுடன் தொடர்புபட்ட பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - ஓர் அட்டவணையிலுள்ள பாடத்தை வடிவமைத்தல் சாத்தியமாகும். B - ஓர் அட்டவணையின் ஒரு நிரலில் உள்ள சொற்களை நெடுங்கணக்கு ஒழுங்குமுறையில் ஒழுங்குபடுத்தலாம். C - ஓர் அட்டவணையின் ஒரு நிரலில் உள்ள எண்களை ஒன்றாகக் கூட்டலாம்.
மேற்குறித்தவற்றில் சரியானவை யாவை ?
A, B ஆகியன மாத்திரம்
2A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றில் சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள், மின்னனு முன்வைப்பு மென்பொருள் ஆகிய இரண்டிற்கும் பொதுவான ஓர் அம்சம் (Feature) அல்லாதது எது ?
கண்டு பதிலிடு (Find and replace)
அஞ்சல் ஒன்றிணைப்பு (Mail merge)
நிரைகளுக்கிடையே உள்ள இடைவெளியை மாற்றல்
எழுத்துச் சரிபார்த்தல்
பின்வருவனவற்றில் எது ஒரு தரவுத்தள முகாமைப் பிரயோகத்தினால் (Application) வழங்கப்படாத ஓர் அம்சமாகும்
தரவுகளை வரிசையாக்கல் (Sorting)
தரவுகளை இற்றைப்படுத்தல்
அறிக்கைகளை உருவாக்கல்
வரைபடங்களை (Chart) உருவாக்கல்
பின்வருவனவற்றில் எது வாடகை வாகன அட்டவணைக்கான (Taxi Table) முதற் சாவியாகத் (Primary key) தெரிந்தெடுப்பதற்கு மிகவும் உகந்த புலம் (Field) ஆகும் ?
Taxi_No
Rate_Type
Driver_Name
Driver_City
பின்வரும் புலங்களில் எது தரவுத்தளத்தில் ஓர் அந்நியச் (Foreign) சாவிக்கு ஓர் உதாரணமாகும் ?
வாடகை வாகன அட்டவணையில் உள்ள Taxi_No
வாடகை வாகன அட்டவணையில் உள்ள Rate_Type
விலை அட்டவணையில் உள்ள Rate_Type
வாடகை வாகன அட்டவணையில் உள்ள Driver_City
விலை அட்டவணையில் இருக்கும் புலங்களின் எண்ணிக்கையும் பதிவேடுகளின் (Record) எண்ணிக்கையும் முறையே
2, 2 ஆகும்.
2, 3 ஆகும்.
3, 2 ஆகும்.
3, 3 ஆகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளின்போது கண்டறியப்பட்ட டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையைக் காட்டுவதற்கான ஒரு வரைபை வரைவதற்கு நிமலன் ஒரு கணினிச் செய்நிரலை எழுதுகின்றான். செய்நிரலுடன் தொடர்புபட்ட உள்ளீடு, முறைவழி (Process), வெளியீடு ஆகியன கீழே A தொடக்கம் D வரைக்குமான சரியான ஒழுங்கின்றிய படிமுறைகளின் மூலம் தரப்பட்டுள்ளன.
A - கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையைக் காட்டும் வரைபைக் காட்சிப்படுத்துக. B - ஒவ்வோர் ஆண்டிலும் இருந்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை C - நடப்பு ஆண்டு D - கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்த டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கையைக் கணிக்க.
பின்வருவனவற்றில் எது உள்ளீடு, முறைவழி, வெளியீடு ஆகியவற்றைச் சரியாகக் காட்டுகின்றது ?
உள்ளீ டுகள் : A உம் B உம் முறைவழி : C வெளியீடு : D.
உள்ளீ டுகள் : B உம் C உம் முறைவழி :D வெளியீடு : A
உள்ளீ டு :B முறைவழிகள் : C உம் D உம் வெளியீடு : A
உள்ளீடுகள் : B உம் D உம் முறைவழி : A வெளியீடு : C
முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் சோதனைப் (Testing) படிமுறையில் பின்வரும் செயற்பாடுகள் அடங்கியுள்ளன.
A - ஏற்புச் (Acceptance) சோதனை B - ஒருங்கிணைப்புச் (Integration) சோதனை C -முறைமைச் (System) சோதனை D - அலகுச் (Unit) சோதனை
மேற்குறித்த செயற்பாடுகளின் சரியான சோதனை வரிசை யாது ?
A, B, C, D
B, C, D, A
C, D, A, B
D, B, C, A
க.பொ.த. (சா.தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீள் மதிப்பிடுவதற்காக விண்ணப்பிப்பதற்கு தற்போது காணப்படும் கைம்முறைக்கு (Manual) பதிலாக ஒரு புதிய தொடரறா முறைமையை அறிமுகஞ் செய்வதற்கான ஒரு யோசனை உள்ளது. அந்த யோசனையுடன் தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - பிரேரிக்கப்பட்ட முறைமை மீளமதிப்பிடும் செயன்முறையின் வினைத்திறனை மேம்படுத்தும். B - பிரேரிக்கப்பட்ட முறைமை மீளமதிப்பிடும் செயன்முறையின் செம்மையை அதிகரிக்கச் செய்யும். C - பிரேரிக்கப்பட்ட முறைமை இணையத்திற்குப் பிரவேசிப்பதற்கான வாய்ப்பு இல்லாத பரீட்சார்த்திகளில் ஒரு மறையான விளைவைக் கொண்டிருக்கும்.
இக்கூற்றுகளில் எவை வலிதானவை
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றில் எது விம்பக் (image) கோப்புகளின் கோப்பு வடிவமைப்புகள் (File format) மாத்திரம் அடங்கியுள்ள தெரிவாகும் ?
DOCX, MP3, PNG
PNG, RAW, MP3
RAW, JPEG, BMP
PPTX, BMP, PNG
பின்வரும் HTML குறிமுறைக் கூறை கருதுக:
மேற்குறித்த HTML குறிமுறையின் வெளியீடு
பின்வரும் மென்பொருளைக் கருதுக:
A - ஓர் எளிய பாடப் பதிப்பாளர் (Simple text editor) B - சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் (Word-processing software) C- வலைப் படைப்பாண்மை மென்பொருள் (Web authoring software)
மேற்குறித்தவற்றில் எதனை/எவற்றை ஓர் HTML ஆவணத்தை உருவாக்குவதற்குப் பயன்படுத்தலாம் ?
C மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
குடிசன மதிப்பு, புள்ளிவிவரத் திணைக்களத்தினால் 2015 இல் மேற்கொள்ளப்பட்ட ஓர் அளவையாய்விற்கேற்ப இலங்கையின் கணினி அறிவுடைமை வீதம் 26.8% ஆகும். குறைந்த கணினி அறிவுடைமை வீதத்திற்கு இலக்கமுறை இடைவெளி (Digital divide) ஒரு காரணியெனக் கொள்ளப்படுகின்றது. பின்வரும் யோசனைகளைக் கருதுக:
A - குறைந்த வருமானம் பெறுவோர் கணினிகளை வாங்குவதற்குக் குறைந்த வட்டி வீதங்களில் கடன் வசதிகளைஒழுங்குசெய்தல் B - கணினி வசதிகளும் இணைய வசதிகளும் குறைந்தளவில் காணப்படும் கிராமப் பிரதேசங்களில் அத்தகைய வசதிகளை மேம்படுத்தல் C - தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் பிள்ளைகளுக்குக் கூடுதலான புலமைப்பரிசில்களை வழங்கல்
இலக்கமுறை இடைவெளியைக் குறைப்பதில் பங்களிப்புச் செய்யும் யோசனை/யோசனைகள்
A மாத்திரம்
B மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
பின்வருவனவற்றில் எது ஓர் இணையத்தளத்தை மேம்படுத்துவதற்கு (Hosting) அத்தியாவசியமன்று ?
வலை மேலோடி (Browser)
வலைச் சேவையகம் (Server)
IP முகவரி
இணையத்தளத்தின் உள்ளடக்கம் (Content)
http://www.bbc.com/sport/cricket என்னும் சீரான வள இடங்காணியின் (URL) ஆள்களப் பெயர் (Domain name) பின்வருவனவற்றுள் எதன் மூலம் காட்டப்பட்டுள்ளது ?
bbc.com/sport
bbc.com/sport/cricket
http://www.bbc.com
bbc.com
ராஜன் தனது நண்பர்களில் ஒருவருக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டச்சிட்டுக் கொண்டிருந்தபோது ஏற்பட்டவொரு தவறின் காரணமாக மின்னஞ்சல் பிரயோகம் தற்செயலாக மூடப்பட்டது. அவன் தனது முடிக்காத மின்னஞ்சலை எந்த உறையில் தேட வேண்டும் ?
Draft
Inbox
Sent
Trash
கலம் C3 இல் சூத்திரம் =count(A1:B3) ஐ நுழைக்கும்போது பின்வருவனவற்றில் எது கலம் C3 இல் காட்சிப்படுத்தப்படும் ?
1
3
5
6
கலம் A3 ஆனது சூத்திரம் =SUM($A1:A2) ஐக் கொண்டுள்ளது. இச்சூத்திரம் கலம் B3 இற்கு நகல் செய்யப்படும்போது பின்வருவனவற்றில் எது கலம் B3 இல் காட்சிப்படுத்தப்படும் ?
5
7
11
12
ஒரு படவில்லையின் பாணியைப் (style) பாணி 1 இலிருந்து பாணி 2 இற்கு மாற்றுவதற்கு மின்னணு முன்வைப்பு மென்பொருளில் உள்ள எந்தக் கருவியைப் பயன்படுத்தலாம் ?
படவில்லை வடிவமைப்பு (Slide design)
படவில்லை வரிசையாக்கி (Slide sorter)
படவில்லைத் தளக்கோலம் (Slide layout)
படவில்லைக் காட்சி (Slide view)
மின்னனு முன்வைப்பு மென்பொருளொன்றின் மூலம் படவில்லைக் காட்சியைப் பயன்படுத்தி ஒரு முன்வைப்பைச் செய்யும்போது பாடமும் விம்பங்களும் எங்ஙனம் தோற்றுகின்றன என்பதை முகாமிப்பதற்குப் படவில்லையில் உள்ள எக்கருவியைப் பயன்படுத்தலாம் ?
படவில்லை வடிவமைப்பு (Slide design)
படவில்லை மாறுகை (Slide transition)
படவில்லைத் தளக்கோலம் (Slide layout)
அசைவூட்டம் (Animation)
பின்வருவனவற்றில் எது துணைத் தேக்ககச் சாதனங்களில் தரவு செலுத்துக் கதிகளை ஏறுவரிசையில் காட்டுகின்றது
திண்மநிலை (solid state) வன்வட்டு இயக்கி, காந்த வன்வட்டு இயக்கி, நெகிழ் வன்வட்டு இயக்கி, DVD இயக்கி
நெகிழ் வட்டு இயக்கி, காந்த வன்வட்டு இயக்கி, DVD இயக்கி, திண்மநிலை வன்வட்டு இயக்கி
நெகிழ் வட்டு இயக்கி, DVD இயக்கி, காந்த வன்வட்டு இயக்கி, திண்மநிலை வன்வட்டு இயக்கி
திண்மநிலை வன்வட்டு இயக்கி, காந்த வன்வட்டு இயக்கி, DVD இயக்கி, நெகிழ் வட்டு இயக்கி
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - ஒளியியல் நார் வடங்களில் தரவு மாற்றுக் கதி செப்பு வடங்களின் தரவு மாற்றுக் கதியிலும் கூடியது. B - செப்பு வடங்களில் தரவு மாற்றுக் கதி ஒளியியல் நார் வடங்களின் தரவு மாற்றுக் கதியிலும் கூடியது. C - செப்பு வடங்கள் ஒளியியல் நார் வடங்களிலும் விலை கூடியவை.
மேற்குறித்த எது/எவை சரியானது சரியானவை ?
A மாத்திரம்
B மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு, ஒரு மாணவன் மருத்துவரிடமிருந்து மருத்துவ ஆலோசனையைப் பெறுகின்றான். B - ஈரப்பதனையும் வெப்பநிலையையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு தன்னியக்க முறைமை ஒருபச்சையில்லத்தில் உள்ள தாவரங்களுக்கு நீரை விடுவிக்கின்றது. C - ஓர் ஆசிரியர் இலங்கையில் கிடைக்காத ஒரு புத்தகத்தை தொடரறாப் புத்தகக் கடையொன்றில் வாங்குகின்றார்.
மேற்குறித்தவற்றில் எவை தகவல், தொடர்பாடல் தொழினுட்பவியலை (ICT) பயனுறுதிவாய்ந்த விதத்தில் பயன்படுத்துகின்றன ?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - பயன்படுத்த முடியாத கையடக்கத் தொலைபேசிகள், CRT தெரிவிப்பிகள் போன்ற மின்னணுக் கழிவுப் பொருள்களைக் கைவிடப்பட்ட உணவு போன்ற வீட்டின் குப்பையுடன் வெளியேற்றல் நல்லது. B - ஒரு மேசைக் கணினியில் (Desktop computer) உள்ள ஒரு தனிப் பயனர் உத்தரவுச் சீட்டைக் கொண்ட ஒரு மென்பொருளைப் பல்வேறு பயனர்கள் பயன்படுத்தல் சட்டரீதியற்றதன்று. C - ஒரு கணினி வலையமைப்பில் தீச்சுவர் நிறுவப்பட்டிருக்கும்போது பயனர்கள் தமது ரகசியத் தகவல்களைக்கொண்ட தமது கோப்புகளைப் பாதுகாப்பதற்குக் கடவுச்சொற்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை.