தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
ஒரு கணினியின் மைய முறைவழி அலகு (CPU) பின்வருவனவற்றில் எவற்றைக் கொண்டுள்ளது?
எண்கணித, தருக்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (CU), காட்சி அலகு (Display Unit)
எண்கணித, தருக்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (CU), உள்ளீட்டு/வெளியீட்டுச் சாதனங்கள் (I/O devices)
எண்கணித, தருக்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (CU), நினைவகப் பதிவகங்கள் (Memory registers)
எண்கணித, தருக்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (CU), துணைத் தேக்ககம் (Secondary storage)
பின்வருவனவற்றில் இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பினால் கிடைக்கும் அனுகூலம் அல்லாதது எது?
கோப்புச் சேவையகத்துடன் (file server) கோப்புகளைக் காப்புச் (backup) செய்தல்
நச்சு நிரல்களினதும் பிறழ்பொருள்களினதும் (malware) இடர் குறைதல்
வலையமைப்பில் உள்ள வளங்களைப் பகிர்ந்து பயன்படுத்தல்
வலையைப் பயன்படுத்தல்
P, Q, R என்னும் மூன்று உள்ளீடுகளையும் ஒரு வெளியீடு F ஐயும் கொண்ட ஒரு தருக்கச் சுற்றைக் கருதுக. அச்சுற்றில் பின்வருவன அவதானிக்கப்பட்டன.
யாதாயினும் ஒரு தனி உள்ளீடு 1 எனின், எஞ்சியுள்ள உள்ளீடுகள் எவ்வாறு இருந்தாலும் வெளியீடு F ஆனது 0 ஆகும்.
எல்லா உள்ளீடுகளும் 0 எனின், வெளியீடு F ஆனது 1 ஆகும்.
மேற்குறித்த சுற்றுக்குப் பின்வரும் எந்தத் தருக்க வாயில் நிலையமைப்பு (configuration) மிகப் பொருத்தமானது?
ஒரு பரீட்சையில் தகைமையைப் பெறுவதற்குப் பரீட்சார்த்திகள் ஒரு கட்டாயப் பாடம் S1 இலும் பின்னர் S2, S3, S4 ஆகிய விருப்பப் பாடங்களில் ஏதேனும் ஒன்றிலும் சித்தியடைதல் வேண்டும். இத்தோற்றப்பாட்டைப் பின்வரும் பூலியன் கோவைகளில் எது சரியாக வகைகுறிக்கின்றது?
S1 AND (S2 AND S3 AND S4)
S1 AND (S2 OR S3 OR S4)
S1 OR (S2 AND S3AND S4)
S1 OR (S2 OR S3OR S4)
பின்வரும் எண்ம எண்களில் எது தசமம் 79 இற்குச் சமவலுவானது?
1178
10178
7118
71108
கணினியில் தரவுகளைத் தேக்கி (store) வைப்பதற்குப் பின்வரும் எந்த வடிவமைப்பு பயன்படுத்தப்படுகின்றது?
துவிதம் (binary)
தசமம் (decimal)
பதினறுமம் (hexa-decimal)
எண்மம் (octal)
பின்வரும் தசம எண்களில் எது துவித எண் 1101112 இற்குச் சமவலுவானது?
55
63
110
118
பின்வருவனவற்றில் எது 100011112 , 01708, 4668710, 2F16 என்னும் நான்கு எண்களையும் ஏறுவரிசையில் வகைகுறிக்கின்றது?
01708, 100011112, 2F16 , 4668710
100011112, 4668710, 01708, 2F16
2F16 , 01708, 100011112 , 4668710
4668710, 100011112, 01708, 2F16
பயன்படுத்தாத இடம் குறைந்தபட்சமாக இருக்கத்தக்கதாக 4GB மொத்தக் கொள்திறனைக் கொண்ட USB தேக்ககச் சாதனத்தில் அட்டவணை 1 இல் உள்ள கோப்பு/கோப்புகளில் எதனை/எவற்றைத் தேக்கி (store) வைக்கலாம் ?
அட்டவணை 1
கோப்பின் பெயர் (File name)
பருமன் (Size)
A.doc
300 MB
B.jpg
740 MB
C.mp4
3 GB
A.doc, B.jpg ஆகியவற்றை மாத்திரம்.
B.jpg, C.mp4 ஆகியவற்றை மாத்திரம்.
C.mp4 இனை மாத்திரம்
மேலுள்ள அனைத்தையும்.
ஒரு பணிசெயல் முறைமை (OS) மென்பொருளின் முக்கிய பணி
ஒரு முன்வைப்பில் எழுத்துக்கூட்டலைச் செவ்வைபார்த்தல்
ஓர் ஆவணத்தில் உள்ள சொற்களை எண்ணுதல்
கணினி முறைமையில் வன்பொருள் வளங்களை முகாமை செய்தல்
மின்னஞ்சலை அனுப்புதலும் பெறுதலும்
முறைமை விருத்தி ஆயுள் வட்டத்தில் இடம்பெறும் சில செயற்பாடுகள் A தொடக்கம் H வரை முகப்படையாளமிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
A - முறைமை விருத்தி (System development) B - இயலுமை ஆய்வு (Feasibility study) C- முறைமையை அமுல்படுத்தல் (System implementation) D - முறைமையைப் பராமரித்தல் (System maintenance) E- பிரச்சினையை வரைவிலக்கணப்படுத்தல் (Problem definition) F- முறைமைப் பகுப்பாய்வு (System analysis) G - முறைமை வடிவமைப்பு (System design) H - சோதித்தல் (Testing)
இச்செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய சரியான ஒழுங்குமுறை
A, E, H, B, F, G, C, D
C, B, G, F, A, D, E, H
E, B, F, G, A, H, C, D
G, F, B, A, E, C, D, H
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - வீட்டிலிருந்து இணையத்துடன் இணைவதற்கு இணையச் சேவையாளர் (ISP) தேவை. B - இணையத்தில் உள்ள ஒவ்வொரு சேவையகக் கணினியும் (Server computer) ஒரு தனியான முகவரியைக் கொண்டிருத்தல் வேண்டும். C - மின்னஞ்சலுடன் இணைக்கத்தக்க உயர்ந்தபட்சக் கோப்புப் பருமனை (File size) விஞ்சாமல் எக்கோப்பையும் மின்னஞ்சலுடன் இணைக்கலாம். மேலுள்ளவற்றுள் சரியான கூற்றுகள் யாவை ?
A, B ஆகியன மாத்திரம்.
A, C ஆகியன மாத்திரம்.
B, C ஆகியன மாத்திரம்.
A, B, C ஆகிய எல்லாம்.
பின்வரும் கோப்புப் பெயர் நீட்சிகளைக் (file name extensions) கருதுக.
A - odt B - docx C - doc D - rtf சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கோப்புகளுக்கு மேற்குறித்தவற்றில் எவை செல்லுபடியானவை?
A, B ஆகியன மாத்திரம்.
B, C ஆகியன மாத்திரம்.
C, D ஆகியன மாத்திரம்.
A, B, C, D ஆகியன எல்லாம்.
சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்தி வாக்கியம் Aஆனது வாக்கியம் B ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது (formatted).
வாக்கியம் A: Many people believe that Abacus is the foundation of the present computer. வாக்கியம் B: Many people believe that Abacus is the foundation of the present computer.
வாக்கியம் A யை வாக்கியம் B ஆக வடிவமைப்பதற்குப் பின்வரும் படவுருக்களில் எவை பயன்படுத்தப்பட்டுள்ளன?
ஓர் ஆவணத்தில் உள்ள பாடத்தைத் (text) தேடுவதற்குச் (find) சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் உள்ள பின்வரும் படவுருக்களில் எதனைப் பயன்படுத்தலாம்?
முன்வைப்பு மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - படவில்லை மாறுகைகள் (slide transitions) என்பவை ஒரு படவில்லையிலிருந்து வேறொரு படவில்லைக்கு மாறும்போது உள்ள கட்புல இயக்கங்கள் (visual movements) ஆகும். B - அசைவூட்டங்கள் (animations) என்பவை ஒரு படவில்லையில் உள்ள தனி உருப்படிகளுக்குப் பிரயோகிக்கப்படும்கட்புல விளைவுகள் (visual effects) ஆகும். C - ஒரு முன்வைப்பில் குரற் பதிவுகளைப் பதிவுசெய்து சேர்க்கலாம்.
மேற்குறித்த கூற்றுகளில் எவை சரியானவை?
A, B ஆகியன மாத்திரம்.
A, C ஆகியன மாத்திரம்.
B, C ஆகியன மாத்திரம்.
A, B, C ஆகிய எல்லாம்.
கலம் A5 இல் கல வீச்சு A1:A4 இல் மிகப் பெரிய எண்ணைக் காட்சிப்படுத்துவதற்கு எழுதப்பட வேண்டிய மிகச் சரியான சூத்திரம் யாது?
=count(A1:A4)
=max(A1:A4)
=rank(A1:A4)
=sum(A1:A4)
கலம் B5 இல் கல வீச்சு A1:B4 இல் உள்ள பதிவுகளின் (entries) எண்ணிக்கையைக் காட்சிப்படுத்துவதற்கு எழுதப்பட வேண்டிய மிகச் சரியான சூத்திரம் யாது?
=count(A1:B4)
=max(A1:B4)
=min(A1:B4)
=sum(A1:B4)
சூத்திரம் = 2^5+ 16 ஆனது விரிதாள் ஒன்றின் கலத்தில் நுழைக்கப்படுகின்றதெனின், கலத்தில் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது?
26
32
42
48
பின்வரும் HTML கூற்றுகளைக் கருதுக.
மேற்குறித்த HTML குறிமுறைக் கூற்றின் வெளியீடு
ஓர் அட்டவணையைத் தயாரிப்பதுடன் தொடர்புடைய பின்வரும் HTML கூற்றுகளைக் கருதுக. மேற்குறித்த கூற்றுகளின் மூலம் தயாரிக்கப்படும் சரியான அட்டவணை பின்வருவனவற்றில் யாது?
ஓர் அட்டவணையில் ஒரு நிரையைச் சேர்ப்பதற்குப் (add) பின்வரும் HTML அடையாள ஒட்டுச் (tag) சேர்மானங்களில் எது அனுமதிக்கின்றது?
ஓர் எண்ணிடப்பட்ட பட்டியலைக் (numbered list) காட்சிப்படுத்துவதற்குப் பின்வரும் HTML அடையாள ஒட்டுச் சேர்மானங்களில் எது பயன்படுத்தப்படுகின்றது?
தரப்பட்டுள்ள வரிசையில் நிறைவேற்றப்படும் ஒரு செய்நிரற் கூற்றில் உள்ள பின்வரும் ஒப்படைக் கூற்றுகளைக் (assignment) கருதுக.
day = 14 today = 18 day = today
மேற்குறித்த கூற்றுகளை நிறைவேற்றிய பின்னர் day, today ஆகியவற்றில் உள்ளடங்கும் பெறுமானங்கள் முறையே
14, 14
14, 18
18, 14
18, 18
Publisher அட்டவணை Book அட்டவணயில் உள்ள Unit_Price இற்கு மிகவும் பொருத்தமான தரவு வகை (data type) யாது?
Currency
Date
Number
Text
பின்வருவனவற்றில் எது Book அட்டவணையில் முதற் சாவிக்கு (Primary Key) மிகவும் பொருத்தமானது?
Book_ID
Book_Name
Quantity
Unit_Price
பின்வரும் புலப் பெயர்களில் எது ஓர் அன்னியச் சாவிக்கு (Foreign Key) உதாரணமாகும்?
Book அட்டவணையில் Book_Name
Book Publisherஅட்டவணையில் Book_ID
Publisher அட்டவணையில் Publ_Phone
Publisher அட்டவணையில் Publisher_Name
உரு 1 இல் தரப்பட்டுள்ள முயலின் உருவத்தை வரைவதற்கு மிகவும் உகந்த கருவி யாது?
P
Q
R
S
உரு 1 இல் உள்ள வீட்டின் கூரையையும் கதவையும் நிறந்தீட்டப் பயன்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான கருவி யாது?
P
Q
S
T
ஒரு விம்பப் பதிப்பு மென்பொருளில் ஒரு விம்பத்தின் (image) ஓர் ஒழுங்கற்ற வடிவமுள்ள (irregularly shape) பிரதேசத்தைத் தெரிந்தெடுப்பதற்குப் பின்வரும் கருவிகளில் எது பயன்படுத்தப்படும்?
பிரிதிறன் (resolution) 72 ppi உடன் 1"x1" என்னும் பருமனுள்ள ஒரு விம்பத்தில் (image) அடங்கும் படப்புள்ளிகளின் (pixels) எண்ணிக்கை யாது?
72
144
25920
5184
பின்வருனவற்றுள் ஒரு கணினித் தொகுதியில் நச்சுநிரல் தொற்றின் காரணமாக ஏற்படத்தக்க பாதகமான விளைவு அல்லாதது எது?
கணினியில் உள்ள தரவுகளும் தகவல்களும் சீரழிதல் (corruption)
கணினி வன்பொருளுக்குச் சேதம் ஏற்படுதல்
கணினியில் உள்ள தரவுகளும் தகவல்களும் மாறுதல்
கணினியின் தொழிற்பாட்டின் வினைத்திறன் குறைதல்
பின்வருவனவற்றில் நச்சுநிரல் தொற்றிலிருந்து ஒரு கணினித் தொகுதியைப் பாதுகாப்பதற்கு மேற்கொள்ளத்தக்க தகுந்த நடவடிக்கை யாது?
A - கிடைக்கும் மின்னஞ்சல் இணைப்புகள் (attachment) தொடர்பாகக் கூடிய கவனத்துடன் இருத்தல் B - வெளித் தேக்ககச் சாதனங்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருத்தல் C - மென்பொருளில் உள்ள நுண் வசதியைச் (macro facility) செயலிழக்கச் செய்தல்
A, B ஆகியன மாத்திரம்.
A, C ஆகியன மாத்திரம்.
B, C ஆகியன மாத்திரம்.
A, B, C ஆகியன எல்லாம்.
ஒரு கணினியைக் கொள்வனவு செய்யும்போது பின்வரும் கூற்றுகளில் எதனைக் கருதுதல் நன்று?
A - கணினியின் வர்த்தகப் பெயரின் நன்மதிப்பு (reputation) B - விற்பனையாளரின் நன்மதிப்பு C - கணினியின் உத்தரவாதக் காலம்
A மாத்திரம்
B மாத்திரம்
சரியான விடை3A, B ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய மூன்றும்
தரப்பட்டுள்ள பாய்ச்சற் கோட்டுப்படப் பகுதியின் தருக்கத்திற்குச் சமவலுவான போலிக்குறிமுறைக் கூறு யாது?
1 தொடக்கம் 10 வரையுள்ள சுட்டி வீச்சுடன் (index range) ‘marks' என்னும் அணியில் (array) ஒரு மாணவனின் 10 பாடங்களுக்குக்கான புள்ளிகள் தேக்கி (store) வைக்கப்பட்டுள்ளன. அதன் சராசரிப் புள்ளிகளைக் கணிப்பதற்கு ஒரு போலிக் குறிமுறை (pseudocode) p,q r என்னும் மூன்று முகப்படையாளங்களுடன் கீழே தரப்பட்டுள்ளது.
total_marks = p for i = 1 to 10 Begin total_marks = total_marks + marks[q] end average_marks = total_marks / r
p,q r ஆகிய முகப்படையாளங்களின் பெறுமானங்கள் முறையே -
0, 10, i
0, i, 10
10, i, 10
10, 10, i
பின்வரும் 'while loop' எத்தனை தடவைகள் நிறைவேற்றப்படும்?
2
4
6
8
பின்வரும் போலிக்குறிமுறைக் (Pseudocode) கூறினைக் கருதுக.
9
16
25
36
பின்வரும் போலிக்குறிமுறைக் கூறைக் கருதுக.
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த போலிக்குறிமுறையில் உள்ள தருக்கத்திற்குச் சமவலுவுள்ளது?
If average_marks > 50 AND failed_subjects = 0 Then scholarship = 'True'
If average_marks > 50 OR failed_subjects = 0 Then scholarship = 'True'
If average_marks > 50 then failed_subjects = 0 Else scholarship = 'True'
If average_marks > 50 then scholarship = 'True' Else failed_subjects = 0
கீழே தரப்பட்டுள்ள ‘while' தடத்தையும் ‘repeat until ' தடத்தையும் (loops) கருதுக.
while, repeat until ஆகிய இரு தடங்களும் நிறைவேற்றப்பட்ட பின்னர் count_A, count_B ஆகியவற்றின் பெறுமானங்கள் முறையே யாவை?