தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
கணினிகளின் பரிணாம வளர்ச்சியில் வெற்றிடக்குழாய் (vacuum tube) திரிதடையத்தால் (transistor) மாற்றிடு செய்யப்பட்டதோடு பின்பு திரிதடையம் ஒன்றிணைந்த சுற்றினால் (IC) மாற்றீடு செய்யப்பட்டது. இச் செயன்முறையில், கணினியின் ........A......... அதிகரித்ததோடு ........B....... குறைவடைந்தது. A , B என்பனவற்றிற்குப் பொருத்தமான பதங்கள் முறையே
வினைத்திறன், பௌதிக அளவு
வினைத்திறன், நம்பகத்தன்மை (reliability)
பௌதிக அளவு, வினைத்திறன்
பௌதிக அளவு, செலவு (cost)
கீழே தரப்பட்ட சாதனங்களைக் (devices) கருதுக:
A - இலக்கமுறைக் கமரா B - ஒலிபெருக்கி C - வன்வட்டு
மேற்குறித்தவற்றுள் கணினியில் வருவிளைவுச் சாதனம்/சாதனங்களாகப் பொதுவாகப் பயன்படுத்தப்படுபவை எது/ எவை ?
A மாத்திரம்
B மாத்திரம்
A, B மாத்திரம்
B, C மாத்திரம்
பின்வருவனவற்றுள் மையமுறைவழி அலகில் (CPU) செய்நிரலின் (program) செயற்பாடு தொடர்பாக சரியான கூற்று எது ?
அறிவுறுத்தல்களும் தரவுகளும் முதன்மை நினைவகத்தில் (main memory) இருந்து பெறப்படும்.
அறிவுறுத்தல்கள் முதன்மை நினைவகத்திலிருந்தும் தரவுகள் துணைத்தேக்ககத்திலிருந்தும் (secondary storage) பெறப்படும்.
அறிவுறுத்தல்கள் துணைத்தேக்ககத்திலிருந்தும் தரவுகள் முதன்மை நினைவகத்திலிருந்தும் பெறப்படும்.
கண்டியில் வசிக்கும் சுதன், இலக்கமுறைச் சித்திரமொன்றை (digital ar) படிமக் கோப்பாக (image file) உருவாக்கி தனது கணினியில் வைத்துள்ளான். அவனுக்கு அச்சித்திரத்தை கொழும்பு, யாழ்ப்பாணம், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் வசிக்கும் தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள (share) வேண்டிய தேவையுள்ளது, இந்தப் படிமக் கோப்பினை நண்பர்களிடையே பகிர்வதற்குப் பொருத்தமான முறை முறைகள் பின்வருவனவற்றுள் எது/எவை ?
A - கோப்பினை இடத்துக்கிடம் மாற்றும் (file transfer) மென்பொருளைப் பயன்படுத்தி இடத்துரி வலையமைப்பினூடாக (LAN) நண்பர்களின் கணினிகளுக்கு இக்கோப்பினை அனுப்புதல் B - மின்னஞ்சலைப் (email) பயன்படுத்துதல் C - கோப்பினை நான்கு USB பளிச்சீட்டு வட்டுகளில் (flash drives) பிரதிசெய்து அவற்றைச் சாதாரண தபாலில் நண்பர்களுக்கு அனுப்புதல்
A மாத்திரம்
B மாத்திரம்
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
தசம எண் 13110இற்குரிய சமவலுப் பெறுமானம் யாது ?
101100112
100000112
4716
768
துவித எண் 1010112 இன் தசமச் சமவலு யாது ?
27
35
43
75
பின்வருவனவற்றுள் அதிகுறைந்த பெறுமானத்தைக் கொண்டிருப்பது எது ?
110010012
14510
778
4916
பின்வருவனவற்றுள் அதியுயர் கோப்பு அளவைக் (file size) கொண்டுள்ளது எது ?
1 மெகாபைட் உடைய .doc கோப்பு
912 கிலோபைட் உடைய .gif கோப்பு
700 பைட் உடைய .txt கோப்பு
1024 பைட் உடைய .jpg கோப்பு
ASCII குறியீட்டு முறையில் 'E' எனும் வரியுரு 10001012 என கைகுறிக்கப்பட்டால் 'B' எனும் வரியுருவை ASCII குறியீட்டு முறையில் வகைகுறிப்பது எது ?
10000012
10000102
10000112
11001012
சொல்முறை வழிப்படுத்தல் ஆவணமொன்றில் அச்சிடமுடியாத வரியுருக்களை (non printing characters) மறைப்பதற்கு அல்லது காட்சிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் கருவி பின்வருவனவற்றுள் எது ?
கீழே தரப்பட்ட A எனும் வாக்கியம் சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளைப் பாவித்து வடிவமைக்கப்பட்டு (formatting) B எனும் தோற்றத்தைப் பெற்றுள்ளது.
A - The new curricula for Grades 6 and 10 will be effective from 2015. B - The new curricula for Grades 6 and 10 will be effective from 2015.
A யிலிருந்து B ஐப் பெறுவதற்குப் பயன்படுத்திய கருவிகள் பின்வருவனவற்றுள் எவை ?
கீழே தரப்பட்ட பெட்டியினுள் உள்ள வாக்கியங்களையும் அவற்றின் பாட நேர்ப்படுத்தல்களையும் (textalignments) கருதுக: மேலே காட்டப்பட்டுள்ள A, B, C எனும் ஒவ்வொரு வாக்கியத்திலும் பயன்படுத்தப்பட்ட பாட நேர்ப்படுத்தல்கள் முறையே
வலது, இடது மற்றும் மத்தி.
இடது, வலது மற்றும் மத்தி.
இடது, மத்தி மற்றும் வலது.
வலது, மத்தி மற்றும் இடது.
=$A$2+A3 எனும் சூத்திரத்தை கலம் (cell) A4 கொண்டுள்ளது. இச்சூத்திரம் கலம் A5 இற்குப் பிரதி செய்யப்பட்டால் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது ?
2
4
6
8
கலம் C2 இல் =sum(A2:B2) எனும் சூத்திரம் எழுதப்பட்டுள்ளது. கலம் C2 இலுள்ள சூத்திரம் கலம் C3 இற்குப் பிரதி செய்யப்பட்டால் கலம் C3 இல் எழுதப்படுவது பின்வருவனவற்றுள் எது ?
=sum(A2:A3)
=sum(B2:B3)
=sum(A2:B2)
=sum(A3:B3)
மின்னியல் நிகழ்த்துகை மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - Ctrl + M என்னும் குறுஞ்சாவிச் சேர்க்கையைப் பயன்படுத்தி புதிய படவில்லையை (slide) நிகழ்த்துகையில் உட்புகுத்தலாம். B - Ctrl + N என்னும் குறுஞ்சாவிச் சேர்க்கையைப் பயன்படுத்தி புதிய நிகழ்த்துகையை உருவாக்கலாம். மேற்குறித்த கூற்றுகளுள்
A மாத்திரம் சரியானது.
B மாத்திரம் சரியானது.
A, B ஆகிய இரண்டும் சரியானவை.
A, B ஆகிய இரண்டும் தவறானவை.
விளையாட்டுப் பொருள்கள் விற்பனைக்குள்ள கடையொன்றில் கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்கள் பற்றிய தரவுகளை தரவுத்தள அட்டவணையொன்று கொண்டுள்ளது. கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்களாவன கிரிக்கெற் மட்டைகள், ரென்னிஸ் பந்துகள், கரப் பந்துகள், வலைப் பந்துகள் மற்றும் பட்மின்ரன் மட்டைகள் ஆகியனவாகும். அட்டவணையிலுள்ள ஒரு விளையாட்டுப் பொருள் பற்றிய தரவானது
புலம் (field) எனப்படும்.
அந்நியச் சாவி (foreign key) எனப்படும்.
படிவம் (form) எனப்படும்.
பதிவு (record) எனப்படும்.
துணிகளை விற்பனை செய்யும் கடையொன்றுக்குப் பல விநியோகத்தர்கள் உள்ளனர். ஒவ்வொரு விநியோகத்தருக்கும் பல துணி வகைகளை விநியோகிக்க முடியும். இக்கடையில் விற்பனைக்குக் கிடைக்கக்கூடிய துணி வகைகளின் கால்கள் அடங்கிய தரவுத்தள அட்டவணைக்கு மிகப் பொருத்தமான முதன்மைச் சாவி பின்வருவனவற்றுள் எது ?
பொருளின் குறியீட்டு எண்
விலை
அளவு
விநியோகத்தரின் குறியீட்டு எண்
பின்வருவனவற்றுள் தொடர்புநிலைத் தரவுத்தளத்தில் (relational database) தொடர்புடைமை (relationship) பற்றிச்சரியானது எது ?
தொடர்புடைமை என்பது அட்டவணையிலுள்ள இரு நிரைகளுக்கிடையிலான இணைப்பு (association) ஆகும்.
தொடர்புடைமை என்பது அட்டவணையிலுள்ள இரு நிரல்களுக்கிடையிலான இணைப்பு ஆகும்.
தொடர்புடைமை என்பது இரண்டு அட்டவணைகளுக்கிடையிலான இணைப்பு ஆகும்.
தொடர்புடைமை என்பது இரண்டு தரவுத்தளங்களுக்கிடையிலான இணைப்பு ஆகும்.
பின்வருவனவற்றுள் கணினியிலுள்ள கோப்புகள் தொடர்பான தவறான கூற்று எது ?
கணினியில் தரவுகளைச் சேமிப்பதற்காக கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
கோப்பின் பெயர் மாற்றப்படக்கூடியது.
கோப்பினுள் கோப்புறைகளை உருவாக்கலாம்.
கோப்பின் பெயருக்கு .doc அல்லது .txt போன்ற நீட்டிப்பு காணப்படலாம்.
கணினியை உபயோகித்து பிரசினத்தைத் தீர்க்கும் நான்கு படிமுறைகளும் கீழே தரப்பட்டுள்ளன. ஆயினும், இப்படிமுறைகள் சரியான ஒழுங்கில் தரப்படவில்லை
A - கணினி செய்நிரலை எழுதுதல் B - உள்ளீடு, செயன்முறை, வருவிளைவு தொடர்பாகப் பிரசினத்தைப் பகுப்பாய்வு செய்தல் C - கணினி செய்நிரலைப் பரிசீலித்தல் (testing) D - பிரசினத்துக்கான நெறிமுறையை விருத்தி செய்தல்
மேற்குறித்த நான்கு படிமுறைகளின் சரியான ஒழுங்குமுறை
A, D, B, C
B, A, C, D
B, D,A, C
D,A, B, C
பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
பிரசினத்தைத் தீர்ப்பதற்கான படிப்படியான செயன்முறை ........A...... என அழைக்கப்படும். . போலிக்குறிமுறை (pseudo code) கணினிச் செய்நிரல் மொழியின் ......B......... இல் சார்ந்திருக்கவில்லை . செய்நிரலிலுள்ள தொடர் செயல்களை வரைவியல் ரீதியாக வகைகுறிப்பது ......C............ எனப்படும்.
மேற்குறித்த மூன்று கூற்றுகளிலுமுள்ள A, B, C ஆகிய வெற்றிடங்களை நிரப்புவதற்குச் சரியான பதங்கள் முறையே
நெறிமுறை (algorithm), பாய்ச்ச ல் கோட்டுப்படம், தொடரியல் (syntax)
தொடரியல், நெறிமுறை, பாய்ச்சல் கோட்டுப்படம்
நெறிமுறை, தொடரியல், பாய்ச்சல் கோட்டுப்படம்
பாய்ச்சல் கோட்டுப்படம், நெறிமுறை, தொடரியல்
ஒரு குறித்த வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு பரீட்சார்த்திகளின் வயது (Age), உயரம் (Height), நிறை (Weight) என்பவற்றின் அடிப்படையில் தெரிவுசெய்வதற்குப் பயன்படுத்திய போலிக்குறிமுறை (pseudocode) கீழே தரப்பட்டுள்ளது.
If (Age >= 21 AND Age <= 40) AND (Height >= 155 OR Weight >= 55) Then output 'Qualified for Interview' Else output 'Not Qualified for Interview'
தமிக் மற்றும் ராஜு ஆகிய இரண்டு பரீட்சார்த்திகளினதும் வயது, உயரம், நிறை என்பன கீழே தரப்பட்டுள்ளன.
பெயர் (Name)
வயது (Age)
உயரம் (Height (cm))
நிறை (Weight (kg))
சுமித்
26
157
52
ராஜு
33
154
54
நேர்முகத்தேர்வுக்குத் தகுதியானவர் யார்/யாவர் ?
சுமித் மாத்திரம்
ராஜு மாத்திரம்
சுமித், ராஜு ஆகிய இருவரும்
எவருமில்லை
தரப்பட்ட தர்க்கச் சுற்றினைக் கருதுக: இங்கு A= 1, D = 0 எனின், பின்வருவனவற்றுள் சரியானது எது ?
B = 0, C = 0
B = 0, C = 1
B = 1, C = 1
B = 1, C = 0
பின்வரும் பூலியன் கோவையைக் கருதுக:
பின்வருவனவற்றுள் சரியானது எது ?
C எப்பெறுமானத்தைக் கொண்டிருப்பினும் A= 0, B = 1 எனின், D = 1 ஆகும்.
B, C எப்பெறுமானங்களைக் கொண்டிருப்பினும் A= 1 எனின், D= 1 ஆகும்.
A, C எப்பெறுமானங்களைக் கொண்டிருப்பினும் B = 0 எனின், D = 0 ஆகும்.
A, B எப்பெறுமானங்களைக் கொண்டிருப்பினும் C = 0 எனின், D = 1 ஆகும்.
0 இற்கும் 10 இற்கும் இடையிலான ஒற்றை எண்களின் கூட்டுத்தொகையைக் கணிப்பதற்கான கீழே காட்டப்பட்டுள்ள போலிக்குறிமுறையின் நெறிமுறைக் கூறினை அடிப்படையாகக் கொண்டவை. while loop எத்தனை தடவை செயற்படும் (execute) ?
5
6
10
11
0 இற்கும் 10 இற்கும் இடையிலான ஒற்றை எண்களின் கூட்டுத்தொகையைக் கணிப்பதற்கான கீழே காட்டப்பட்டுள்ள போலிக்குறிமுறையின் நெறிமுறைக் கூறினை அடிப்படையாகக் கொண்டவை. இப்போலிக்குறிமுறையின் செயற்பாட்டின் பின்னர் num இன் பெறுமானம் யாது ?
3
7
9
11
0 இற்கும் 10 இற்கும் இடையிலான ஒற்றை எண்களின் கூட்டுத்தொகையைக் கணிப்பதற்கான கீழே காட்டப்பட்டுள்ள போலிக்குறிமுறையின் நெறிமுறைக் கூறினை அடிப்படையாகக் கொண்டவை. தரப்பட்ட வீச்சினுள்ளேயே இரட்டை எண்களின் கூட்டுத்தொகையைக் கணிப்பதற்கு இரண்டாவது வரிசையில் உள்ள கூற்றினைப் பின்வரும் எக்கூற்றால் பிரதியீடு செய்ய வேண்டும் ?
num = -1
num = 2
sum = 1
sum = 2
கீழே தரப்பட்ட A, B எனும் இரண்டு கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளைக் (control structures) கருதுக: மேலே A, B எனும் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பகள் தொடர்பாக உண்மையான கூற்று பின்வருவனவற்றுள் எது ?
1ஆவது கூற்றும் (statement 1) 2ஆவது கூற்றும் (statement 2) குறைந்தது ஒரு தடவையாவது செயற்படும்.
1ஆவது கூற்று (statement I) குறைந்தது ஒரு தடவையாவது செயற்படும் அதேவேளை 2ஆவது கூற்று (statement 2) ஆனது நிபந்தனைக்கமையவே செயற்படும்.
2ஆவது கூற்று (statement 2) குறைந்தது ஒரு தடவையாவது செயற்படும் அதேவேளை 1ஆவது கூற்று (statement 1) ஆனது நிபந்தனைக்கமையவே செயற்படும்.
இணையத்திலுள்ள ஒவ்வொரு கணினியும் தனித்துவமான முகவரியைக் கொண்டுள்ளது. அது
IP முகவரி ஆகும்.
மின்ன ஞ்சல் முகவரி (Email address) ஆகும்.
URL ஆகும்.
ஆள்களப் பெயர் (Domain name) ஆகும்.
http://moodle.scnet.lk/local/index.html இன் உடன்படுநெறிமுறைப் (protocol) பகுதியைக் காட்டுவது பின்வருவனவற்றுள் எது ?
index.html
.html
http
moodle.scnet.lk
கீழே தரப்பட்ட முற்றுப்பெறாத வாக்கியத்தைக் கருதுக:
............... என்பது முறைமை விருத்தி வாழ்க்கை வட்டத்தின் (SDLC) ஒரு முக்கிய படிமுறையாகும். மேற்குறித்த வாக்கியத்தின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது ?
உங்கள் பாடசாலையில் நடைமுறையிலுள்ள கைமுறையிலான (manual) மாணவர் நிர்வாக முறைமையை தன்னியக்க முறைமையாக்கிய பின்பு, சமாந்தர அமுலாக்கலுக்குப் பதிலாக நேரடி அமுலாக்கல் முறை முன்மொழியப்பட்டது. பின்வருவனவற்றுள் நேரடி அமுலாக்கல் பற்றிய சரியான கூற்று எது ?
சமாந்தர அமுலாக்கலை விட நேரடி அமுலாக்கலுக்கு அதிக தொகை செலவாகும்.
நேரடி அமுலாக்கலுக்குத் தேவையான மனித வலு சமாந்தர அமுலாக்கலுக்குத் தேவையான மனித வலுவை விட அதிகமாகும்.
தன்னியக்க முறைமையில் பிரச்சினைகள் தோன்றுமிடத்து கைமுறை முறைமைக்கு மீண்டும் செல்லுதல் கடினமாகும்
நேரடி அமுலாக்கலுக்குச் சமாந்தர அமுலாக்கலை விட பாடசாலை காரியாலயத்தில் அதிகளவு பௌதிக இடம் தேவை.
உங்கள் பாடசாலை அதன் நூலக நடவடிக்கைகளைத் தன்னியக்க முறைமையாக்கத் தீர்மானித்துள்ளது. புதிய முறைமையின் தேவைப்பாடுகளை சேகரிக்கும் குழுவில் நீங்களும் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். இந்நோக்கத்திற்காக உங்கள் குழுவின் அங்கத்தவரொருவர் கீழ்வரும் நுட்பமுறைகளை (techniques) முன்மொழிகிறார்.
A- நேர்முகத்தேர்வினை நடாத்துதல் B - வினாக்கொத்தொன்றை விநியோகித்தல் C- ஆவணங்களை அவதானித்தல்
மேற்குறித்த நுட்பமுறைகளில் தகவல்களைச் சேகரிப்பதற்கு ஏற்றது எது ?
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பல்லூடக அசைவூட்டம் (animation) தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - Flash என்பது அசைவூட்டங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருள் ஆகும். B - வேறொரு அடுக்கிலுள்ள (layer) வாள்ள (layer) இலக்குப்பொருளைப் பாதிக்காத வண்ணம் ஓர் அடுக்கிலுள்ள இலக்குப் பொருளை வரையவும் பதிப்பிக்கவும் (edit) முடியும். C - நேரவரி (Timeline) இல் நீங்கள் சட்டகங்கள் (frames), பிரதான சட்டகங்கள் (key frames) உடன் இலக்குப்பொருள்களின் தோற்றத்தின் ஒழுங்குமுறையை நடைமுறைப்படுத்து வதற்காகும்.
மேற்குறித்த கூற்றுகளுள் சரியானது எது/எவை ?
A மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
உலகளாவிய வலை (www) தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A- HTML மூலம் இணையப் பக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. B- www என்பது இணையத்தினூடாக அணுகக்கூடிய ஒன்றுடனொன்று தொடர்புடைய மீபாட (hypertext) ஆவணங்களின் முறைமையாகும். C- ஓர் இணையத்தளம் பல இணையப்பக்கங்களை உள்ளடக்கியிருக்கும்.
மேற்குறித்தவற்றுள் சரியான கூற்றுகள் எவை ?
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
கீழே தரப்பட்ட HTML குறிமுறைக் கூறினைக் (code segment) கருதுக: மேலேயுள்ள HTML குறிமுறைக் கூறின் வருவிளைவு (output)
பின்வருவனவற்றுள் தொலை மருத்துவம் (Telemedicine) தொடர்பான உண்மையான கூற்று எது/எவை ?
A - வைத்தியருக்கும் நோயாளிக்கும் இடையிலான தொடர்பினைப் பேணுவதற்கு இணையமோ அல்லது வேறு வலையமைப்பு முறைமைகளோ பயன்படுத்தப்படும். B - தொலைதூரத்திலுள்ள விசேட வைத்திய நிபுணர்களினால் வலையமைப்பைக் கொண்ட உள்ளுர் மருத்துவ நிலையத்திலுள்ள நோயாளிகளை தொலைவிடத்திலிருந்து பரிசோதிக்க முடியும். C - பிணியாய் நிலைய நடவடிக்கைகள், வைத்திய, சுகாதார துறைகளுக்கான கல்வி நிர்வாக மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள் என்பவற்றின் வினைத்திறனை அதிகரிக்கத் தொலை மருத்துவம் பயன்படும்.
A மாத்திரம்
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றுள் இணையத்தைப் பயன்படுத்தி செய்யக்கூடிய கொடுக்கல் வாங்கல்களாகக் கருதக்கூடியவை எவை ?
A - நண்பர்களுக்கு பரிசுப் பொருள்களை அனுப்புமாறு கட்டளை (order) வழங்குதல் B - விடுமுறையைக் கழிப்பதற்காக தங்குமிடங்களை ஒதுக்கிக் கொள்ளுதல் C - பிடித்த ஆடையை அணிந்து பார்த்த பின்பு அதனை அனுப்புமாறு கட்டளை வழங்குதல்
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வருவனவற்றுள் கணினி வைரஸ்களின் சாத்தியப்பாட்டிற்கு மூலகாரணமாக (potential source) இருக்கக்கூடியவை எவை ?
A - களவாடப்பட்ட மென்பொருள் (pirated software) B - வருடி (scanner) C - பகிரப்பட்ட பளிச்சீட்டு வட்டு (flash drive)
A, B மாத்திரம்
A, C மாத்திரம்
B, C மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
இலக்கப் பிரிவு (Digital Divide) என்பதை இணைப்பதற்கு உதவுவது/உதவுபவை பின்வருவனவற்றுள் எது/எவை ?
A - கணினி வசதிகளற்ற பாடசாலைகளுக்கு கணினி ஆய்வுகூட வசதிகளை வழங்குதல் B - கிராமிய மக்களுக்கு இணையத் தொடுப்புடன் கூடிய சனசமூக நிலையத்தை ஸ்தாபித்தல் - சாதாரண தரப் பரீட்சைக்கு தகவல் தொடர்பாடல் தொழினுட்பப் பாடத்தைத் தெரிவுசெய்வதற்கு மாணவர்களை ஊக்குவித்தல்