தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
பின்வருவனவற்றில் தகவலுடன் ஒப்பிடும்போது தரவாகப் பாகுபடத்தக்கது யாது ?
அனுராதபுர நகரத்தின் சராசரி மாத வெப்பநிலை
பாடசாலையில் உள்ள ஆண், பெண் பிள்ளைகளின் சதவீதத்தைக் காட்டும் வட்ட வரைபு
வீட்டுத் தொலைபேசி எண்ணின் இறுதி நான்கு இலக்கங்கள்
கணிதத்திற்காகத் தரம் 10 இன் மாணவர்கள் பெற்ற உயர்ந்த பட்சப் புள்ளி
மாணவன் ஒருவன் ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதனைக் கணினியில் உள்ள ஒரு நிரந்தரத் தேக்ககச் (permanent storage) சாதனத்தில் (சாதனம் 1) சேமித்து வைக்கின்றான். பின்னர் அவன் இவ்வறிக்கையை ஒரு நண்பனுக்கு வழங்குவதற்காகத் தூக்கத்தக்க தேக்ககச் (portable storage) சாதனத்திற்குப் (சாதனம் 2) பிரதிசெய்கின்றான். சாதனம் 1, சாதனம் 2 ஆகியவற்றை வகை குறிப்பதற்குப் பின்வருவனவற்றில் எவை பொருத்தமானவை ?
முதன்மை நினைவகமும் (Main Memory) பளிச்சீட்டு நினைவகமும் (Flash Memory)
வன் வட்டும் (Hard Disk) இறுவட்டும் (Compact Disk (CD))
முதன்மை நினைவகமும் (Main Memory) இறுவட்டும் (Compact Disk (CD))
வன் வட்டும் (Hard Disk) முதன்மை நினைவகமும் (Main Memory)
ஒருவர் ஓர் இலக்கக் (digital) கமராவைப் பயன்படுத்தி ஓர் ஒளிப்படத்தை எடுத்துள்ளார். அவர் கமராவில் உள்ள காட்சியகத்தைப் (display) பயன்படுத்தி, அவ்வொளிப்படத்தைத் தனது நண்பர் ஒருவருக்குக் காட்டுகின்றார். இத்தோற்றப்பாட்டிலே கமராவின் தொழில்
மேற்குறித்தவற்றில் எது/எவை மின்னஞ்சல் முகவரியில் செல்லுபடியான குறியீடு/குறியீடுகள் ?
A மாத்திரம்
B மாத்திரம்
C மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
தசம எண் 125 இற்குரிய சமவலுப் பெறுமானம் யாது ?
010111012
011111012
1748
7B16
C16 வகைகுறிக்கும் பெறுமானம் யாது ?
10112
11012
148
1310
A, B என்னும் இரு கணினிகளின் நினைவகக் கொள்திறன்கள் (memory capacities) முறையே 1 GB, 1024 MB ஆகும். அவற்றின் நினைவகக் கொள்திறன்கள் பற்றிய சரியான கூற்று யாது ?
கணினி A ஆனது கணினி B யிலும் பார்க்க உயர்ந்த நினைவகக் கொள்திறனை உடையது.
கணினி B ஆனது கணினி A யிலும் பார்க்க உயர்ந்த நினைவகக் கொள்திறனை உடையது.
இரு கணினிகளும் சம நினைவகக் கொள்திறன்களை உடையன.
பல்வேறு அளவீட்டு அலகுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதனால் இரு கணினிகளினதும் நினைவகக் கொள்திறன் ஒப்பிட முடியாது.
மோகனிடம் 10,256 பிற்று (bits) அளவுள்ள ஒரு மின்னணு நிகழ்த்துகை (electronic presentation) உள்ளது. இக்கோப்பைத் தேக்கிவைப்பதற்குப் (store) பயன்படுத்தத்தக்க ஒரு தூக்கத்தக்க பளிச்சீட்டுச் செலுத்தியின் (portablc flash drive) குறைந்தபட்சக் கொள்திறன் யாது?
256Bytes
1KB
1MB
IGB
தசம எண் முறைமையில் உள்ள ஒவ்வோர் இலக்கத்தையும் வகைகுறிப்பதற்குத் துவிதக் குறியீட்டுத் தசாம் (BCD) நான்கு பிற்றுகளைப் பயன்படுத்து கின்றது. பின்வருவனவற்றில் எது துவிதக் குறியீட்டுத் தசமத்தில் செல்லுபடியான பிற்றுக் கோலம் (bit pattern) ஆகும் ?
0011
1011
1100
1101
10000012 ஆனது ASCII இல் A யை வகைகுறிக்குமெனின், பின்வருவனவற்றில் எது 10001112 இனால் வகைகுறிக்கப்படுகின்றது ?
D
E
F
G
வர்த்தகர் ஒருவர் மூன்று உருப்படி களைக் கொண்ட ஒரு பொதியை ரூ. 75 இற்கு விற்கின்றார். இப்பொதியில் ஒரு கோப்பை (A), ஒரு பீரிசு (B) ஆகியன உள்ளன. நுகர்வோர் மூன்றாம் உருப்படியாக ஒரு பீங்கானை (C) அல்லது ஒரு தட்டைத் (D) தெரிந்தெடுக்கலாம்.
மேற்குறித்த நிகழ்ச்சியை வகைகுறிக்கும் பூலக் கோவை பின்வருவனவற்றில் யாது ?
(A AND B) AND C AND D
A AND B OR C OR D
A AND B AND (C OR D)
A OR B OR (C AND D)
தரப்பட்டுள்ள தருக்கச் சுற்றின் (logic circuit) இறுதி வருவிளைவு D ஆனது 1 எனின், பின்வருவனவற்றில் எது A, B, C என்னும் உள்ளீடுகளின் (inputs) பெறுமானங்களை முறையே வகைகுறிக்கின்றது ?
A = 1, B = 1, C = 1
A = 1, B = 0, C = 1
A = 0. B = 1, C = 0
A = 0, B = 1, C = 1
பணிசெயல் முறைமை (Operating System)
A - இடைமுகத்தை (interface) வழங்கிக்கொண்டு வன்பொருளுக்கும் பயனிக்குமிடையே (user) உள்ள இடை வெளியை நிரப்புகின்றது. B - தொடர்பாடலிற்கும் தகவலிற்கான அணுகுகைக்குமாகப் பயனிக்கு இணைய வசதிகளை வழங்குகின்றது C - கோப்புகளையும் உறைகளையும் (folders) கையாளுகின்றது.
மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை ?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
தரப்பட்டுள்ள உருவில் ஒரு விரிதாளின் பகுதி காணப்படுகின்றது. கலம் (ccll) A9 இல் சூத்திரம் min(A1:A8) எழுதப்பட்டிருப்பின், கலம் A9 இல் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது ?
70
50
40
15.
விரிதாள் மென்பொருள் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது ?
ஒரு நிரையினதும் ஒரு நிரலினதும் இடைவெட்டு தனி முகவரி (absolue address) எனப்படும்.
நிரல் பெயரினதும் நிரைப் பெயரினதும் சேர்மானத்தினால் கல முகவரி வகைகுறிக்கப்படுகின்றது.
விரிதாள்களில் கலப் பதிவுகள் இடது வரிசையாக்கலில் (left aligned) மாத்திரம் இருக்கலாம்.
ஒரு கலத்தின் உள்ளடக்கம் வேறொரு கலத்தைக் குறிப்பிட முடியாது.
ஒரு சொல் முறைவழிப்படுத்தும் மென்பொருள் Texti.rf எனப்படும் ஒரு கோப்பைப் படைக்கப் பயன்படுத்தப்படு கின்றது. பயனி ஆவணத்தைப் புதிப்பித்த பின்னர் இக்கோப்பை Backupl.in ஆகச் சேமித்து வைக்க விரும்புகின்றார். இந்நோக்கத்திற்குப் பின்வரும் எச்சொல் முறைவழிப்படுத்தும் கட்டளையை கட்டளைகளைப் பயன்படுத்தலாம் ?
File->Save
File ->Save As
Ctrl+S
Ctrl+B
சொல் முறைவழிப்படுத்தும் மென்பொருளில் பயன்படுத்தும் அட்டவணைகள் (tables) தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது ?
இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கலங்களை ஒன்றிணைக்கலாம் (merge).
ஒரு நிரலை அல்லது நிரையை நீக்குதல் சாத்தியமன்று.
நிரல் அகலத்தைச் செப்பஞ்செய்யத்தக்கதாக இருக்கின்ற போதிலும் நிரை உயரத்தைச் செப்பஞ்செய்ய முடியாது.
ஒரு கலத்தைப் பிளக்க (split) முடியாது.
படவில்லையில் (slide) உள்ள விம்பத்தை (image) இடப் பக்கத்திலிருந்து வலப் பக்கமாக மெல்லிழைவா (smoothly) அசைப்பதற்கு மின்னணு நிகழ்த்துகை மென்பொருளின் எந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் ?
பக்கத் தளக்கோலம் (slide layout)
படவில்லை மாறுகை (slide transition)
அசைவூட்டம் (animation)
படவில்லை வடிவமைப்பு (slide design)
ஒரு தொடர்புத் தரவுத்தள அட்டவணையின் (relational database table) முதல் சாவி (primary key) தொடர்பாகப் பின்வருவனவற்றில் எது சரியானது ?
அது ஒரு தனியானதாக (unique) இருக்க வேண்டும்.
அது எண் (numeric) தரவு வகையாக இருக்க வேண்டும்.
அது வெற்றாக இருக்கலாம்.
அது பாடத் (text) தரவு வகையாக இருக்க வேண்டும்.
விடை எழுதுவதற்குப் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறும் பின்வரும் அட்டவணையைப் பயன்படுத்துக.
ISBN எண்
தலைப்பு
ஆசிரியர்
பதிப்பு
வெளியீட்டாளர்
விலை
0-19-431535-5
Oxford Dictionary
A.S. Hornby
6
Oxford University Press
2000.00
0-540-05667-7
Philips Atlas
B.M. Willett
4
Heinemann Philip
2000.00
0-19-431635-5
Oxford Dictionary
A.S. Horney
5
Oxford University Press
1800.00
0-07-118077-X
Zoology
L. Roberts
6
McGraw-Hill
4000.00
மேற்குறித்த அட்டவணையில் பதிவேடுகளின் எண்ணிக்கையையும் புலங்களின் எண்ணிக்கையையும் முறையே வகைகுறிக்கும் சரியான பெறுமானச் சோடியைத் தெரிந்தெடுக்க.
4,6
5,6
6,4
6,5
விடை எழுதுவதற்குப் புத்தகங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெறும் பின்வரும் அட்டவணையைப் பயன்படுத்துக.
ISBN எண்
தலைப்பு
ஆசிரியர்
பதிப்பு
வெளியீட்டாளர்
விலை
0-19-431535-5
Oxford Dictionary
A.S. Hornby
6
Oxford University Press
2000.00
0-540-05667-7
Philips Atlas
B.M. Willett
4
Heinemann Philip
2000.00
0-19-431635-5
Oxford Dictionary
A.S. Horney
5
Oxford University Press
1800.00
0-07-118077-X
Zoology
L. Roberts
6
McGraw-Hill
4000.00
பின்வருவனவற்றில் எது மேற்குறித்த அட்டவணைக்கு முதல் சாவியாக மிகவும் உகந்தது ?
தலைப்பு
விலை
ISBN எண்
ஆசிரியர்
பாய்ச்சல் கோட்டுப்படம் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது சரியானது ?
அது மூன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் மீளவருகின்றது.
num இற்காக 3 நுழைக்கப்படும் போது அது நிற்கின்றது.
counter இன் பெறுமானம் 3 ஆக இருக்கும்போது அது total இன் பெறுமானத்தைக் காட்டுகின்றது.
அது ஒரு பயனியிடமிருந்து 4 எண்களைப் பெறுகின்றது.
பாய்ச்சல் கோட்டுப்படத்தில் "num இன் பெறுமானத்தை total உடன் கூட்டுக" என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்தத் தக்கது பின்வருவனவற்றில் யாது ?
num = num + total
total = num* total
total = total + num
total = total / num
நெறிமுறைகளில் (algorithms) பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டு அமைப்புகள் (control structures) தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் சரியானது யாது ?
நிபந்தனை பொய்யாக இருக்கும் போது ஓர் If-Then கட்டினுள்ளே இருக்கும் கூற்று/கூற்றுகள் நிறைவேற்றப் படுகின்றது/நிறைவேற்றப்படுகின்றன.
மீண்டும் வரும் எண்ணிக்கை முன்கூட்டியே அறியப்படும் போது For-Next தடத்தைப் பயன்படுத்தலாம்.
ஒரு For-Next தடத்தினுள்ளே If-Then கட்டைப் பயன்படுத்த முடியாது.
IF-Then கட்டை உள்ளமைக்க (nest) முடியாது.
ஒரு செய்நிரலாக்க மொழியில் (programming language) உள்ள பணி செய்குநர்கள் (operators) தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - ஒரு பணி செய்குநர் ஒரு மாறியில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளில் ஒரு செய்பணியைச் செய்கின்றார். B - ஒரு கோவை (expression) ஒன்றுக்கு மேற்பட்ட பணி செய்குநரைக் கொண்டிருக்கலாம். C - ஒப்பீட்டுப் பணி செய்குநர்கள் (comparison operators) இரு கோவைகளை ஒப்பிடுகின்றனர்.
மேற்குறித்த கூற்றுகளில் எவை சரியானவை ?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
கணினிச் செய்நிரலாக்க மொழிகளின் பின்வரும் வகைகளைக் கருதுக.
A - இயந்திர மொழிகள் (Machine languages) B - ஒருங்குசேர்ப்பு மொழிகள் (Assembly languages) C - உயர் மட்ட மொழிகள் (High level languages)
மேற்குறித்த செய்நிரலாக்க மொழிகளின் தலைமுறை வரிசையை ஏறுவரிசையில் காட்டுவது பின்வருவனவற்றில் யாது ?
A, B, C.
B, C, A.
C, B, A.
C, A,B.
தொகுப்பியையும் (compiler) வரிமொழிமாற்றியையும் (interpreter) பற்றிப் பின்வருவனவற்றில் எது சரியானது ?
செய்நிரல் நிறைவேற்றப்படு முன்னர் வரிமொழிமாற்றி எல்லாக் கூற்றுகளையும் இயந்திர மொழியாகப் பெயர்க்கின்றது.
செய்நிரல் நிறைவேற்றப்படும்போது தொகுப்பி ஒவ்வொரு கூற்றையும் ஒரு தடவைக்கு ஒன்று வீதம் இயந்திர மொழி அறிவுறுத்தல்களாகப் பெயர்கின்றது.
செய்நிரலை நிறைவேற்றுவதற்குத் தொகுப்பிக்கு வரிமொழிமாற்றி தேவை.
செய்நிரலை நிறைவேற்றும்போது வரிமொழிமாற்றி ஒவ்வொரு கூற்றையும் ஒரு தடவைக்கு ஒன்று வீதம் - . இயந்திர மொழி அறிவுறுத்தல்களாகப் பெயர்கின்றது.
முறைமைச் செயற்றிறன் (System functionality), பயனியின் தேவைகளை நிறைவேற்றல் (meeting user requirements), வளங்களின் பயனுறுதிவாய்ந்த பயன்பாடு (effective use of resources), கிரயப் பயனுறுதி (cost effectiveness) ஆகியன முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் (SDLC) ..................... அவத்தையில் (phase) கருதப்படுகின்றன. மேற்குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எது மிகவும் உகந்தது ?
முறைமைப் பகுப்பாய்வு (system analysis)
முறைமை வடிவமைப்பு (system design)
செய்முறைப்படுத்தல் (implementation)
இயலுமை ஆய்வு (feasibility study)
முறைமை அபிவிருத்தியில் பயன்படுத்தப்படும் நேரடிச் செய்முறைப்படுத்தல் (direct implementation) என்பதைப் பின்வருவனவற்றில் எது மிகச் சிறந்த விதத்தில் விவரிக்கின்றது ?
புதிய முறைமை ஏற்கெனவே உள்ள முறைமையுடன் அறிமுகஞ் செய்யப்படும்.
ஒரு கூறு செய்முறைப்படுத்தப்பட்டு, அது வெற்றிகரமானதெனின், மற்றைய கூறுகள் செய்முறைப்படுத்தப்படும்.
கைமுறை (manual) முறைமையின் செய்பணி நிற்பாட்டப்பட்டு, புதிய முறைமை புகுத்தப்படும்.
புதிய முறைமை பகுதிகளாகச் செய்முறைப்படுத்தப்படும்.
முறைமை அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - வன்பொருளிலும் மென்பொருளிலும் மாற்றங்களைச் செய்தல் B - பயனுறுதி வாய்ந்த விதத்தில் வழிப்படுத்திய பின்னர் முறைமையில் கண்டுபிடிக்கப்படும் வழுக்களைத் திருத்தல் C - முறைமைக்குப் புதிய பயனித் தேவைகளை (user requirements) அறிமுகஞ் செய்தல்
முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தின் (life cycle) பராமரிப்பு அவத்தையுடன் (maintenance phase) மேற்குறித்த எச்செயற்பாடுகள் சம்பந்தப்பட்டுள்ளன ?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
மாணவன் ஒருவன் வெளிநாட்டில் வதிகின்ற நண்பன் ஒருவனுக்கு ஓர் அச்சிட்ட ஒளிப்படத்தின் ஓர் இலக்கமுறைப் பிரதியை (digital copy) அனுப்ப வேண்டியுள்ளது. பின்வரும் நடைமுறைகளைக் கருதுக :
A - ஓர் இலக்கமுறைக் கமராவைப் (digital camera) பயன்படுத்தி ஒரு பிரதியை எடுத்து, அதனை ஒரு விம்பக் கோப்பாகச் (image file) சேமித்த (save) பின்னர் மின்னஞ்சல் மூலம் அனுப்புதல் B - ஒளிப்படத்தைச் சாதாரண அஞ்சலில் அனுப்புதல் C - ஒளிப்படத்தை வருடி (scan), அதனை விம்பக் கோப்பாகச் சேமித்த பின்னர் மின்னஞ்சல் மூலம் அனுப்புதல்
மேற்குறித்த நடைமுறைகளில் எது எவை ஒளிப்படத்தை அனுப்ப உகந்தது உகந்தவை ?
A மாத்திரம்
B மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
இணையம் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - இணையத்துடன் தொடுக்கப்படுவதற்கு ஒவ்வொரு இயந்திரத்திற்கும் IP எனப்படும் ஒருதனியான (unique) முகவரி தேவை. B - WWW ஆனது மின்னணு ஆவணங்களின் தொகுப்பைக் கொண்டுள்ளது. C - இணையத்தினூடாக அடையத்தக்க HTML ஆவணமானது வலைப் பக்கம் (webpage) எனப்படும்.
மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை ?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
இரு மாணவர்கள் தமது பாடசாலைக் கணினி ஆய்கூடத்தில் உள்ள இரு யந்திரங்களைப் பயன்படுத்தி ஒரே வலைக் கடப்பிடத்தை (website) அடைகின்றனர். அவ்விரு கணினிகளிலும் எவ்வேறுபாடு இருக்க வேண்டும் ?
வலை மேலோடிகள் (Web browsers)
IP முகவரிகள் (IP addresses)
இணையச் சேவை வழங்குநர்கள் (Internet Service Providers)
பணிசெயல் முறைமைகள் (Operating Systems)
URL http://www.srilanka.lk/web/guest/welcome இன் ஆள்களப் பெயர் (domain name) யாது ?
www.srilanka.lk
srilanka.lk
/web/guest/welcome
.lk
பல்லூடகப் (multimedia) பதிப்பித்தல் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - ஒரு படையில் (layer) உள்ள பொருள்களை (objects) வேறு படையைப் பாதிக்காமல் வரைவதற்கும் பதிப்பிப்பதற்கும் படைகளைப் பயன்படுத்தலாம். B - அசைவூட்டங்களைப் (animations) படைப்பதற்கு அல்லது பதிப்பிப்பதற்குப் பிரதான சட்டத்தைப் (key frame) பயன்படுத்தலாம். C - சட்ட வீதத்தைப் (frame rate) பயன்படுத்தி வரைவியல் அசைவூட்டத்தின் (graphics animation) கதியை மாற்றலாம்.
மேற்குறித்தவற்றில் சரியானவை யாவை ?
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
B, C ஆகியன மாத்திரம்
A, B, C ஆகிய எல்லாம்
பின்வரும் விசேட விளைவுகளைக் கருதுக.
A - எதிரொளியைச் சேர்த்தல் (adding echo) B - கதியை மாற்றல் (changing speed) C - ஒலியை மாற்றல் (changing volume)
HTML அடையாள ஒட்டுகள் (tags) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - hr tag ஒரு கிடை வரியை (horizontal rule) வரையறுக்கின்றது. B - li tag ஒரு வரிசைப்பட்ட பட்டியலைப் (ordered list) படைக்கின்றது. C - p tag ஒரு பக்க முறிவைப் (page break) படைக்கின்றது.
மேற்குறித்தவற்றில் எது/எவை சரியானது சரியானவை ?
A மாத்திரம்
C மாத்திரம்
A, B ஆகியன மாத்திரம்
A, C ஆகியன மாத்திரம்
பின்வரும் HTML கூற்றுகளைக் கருதுக. மேற்குறித்த HTML குறிமுறைக் கூறின் (code segment) வருவிளைவு (output)
பின்வரும் மூன்று கூற்றுகளையும் கருதுக.
........A.... ஆனது ஒரு வலைக் கடப்பிடத்தை இனங்காணும் ஒருதனிப் (unique) பெயராகும். ..B... ஆனது இணையத்தில் அடையத்தக்க ஒரு கோப்பின் ஒருதனி முகவரியாகும். ....C.... ஆனது இணையத்தில் ஒரு யந்திரத்தை இனங்காணும் ஒருதனி எண்ணாகும்.
பின்வரும் எதன் மூலம் A,B,Cஆகியவற்றை முறையே சரியாகப் பிரதியிடலாம் ?
சீரான வள இடங்காணி (URL), IP முகவரி, ஆள்களப் பெயர் (domain name)
சீரான வள இடங்காணி, ஆள்களப் பெயர், IP முகவரி
ஆள்களப் பெயர், சீரான வள இடங்காணி , IP முகவரி
ஆள்களப் பெயர், IP முகவரி, சீரான வள இடங்காணி
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - தீச்சுவர்கள் (Firewalls) வன்பொருளாக மாத்திரம் கிடைக்கின்றன; அவை மென்பொருளாக இருப்பதில்லை B - கணினிப் புழு (worm) என்பது கணினி வலையமைப்பினூடாகப் பரவும் சுயமாகப் பெருகும் (self replicating) தீயபொருள் கணினிச் செய்நிரல் (program) ஆகும். C - spam என்பது தேவையற்ற மின்னஞ்சல்களை அதிக அளவில் தாறுமாறாக அனுப்பும் மின்னணுச் செய்தி முறைமையைப் பயன்படுத்தலாகும்.