தெரிவு செய்த விடையைினை மாற்ற முடியாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்
"வெற்றிக் குழாய்கள் திரான்சிற்றர்களினால் பதிலிடப்பட்டும் பின்னர் திரான்சிற்றர்கள் நுண் முறைவழியாக்கிகளினால் (microprocessors) பதிலிடப்பட்டும் இருந்தமையால் கணினிகளின் ....A... குறைந்துள்ளது. '' பின்வரும் பதங்களில் எது A யிற்குப் பொருத்தமானது ?
ஆற்றல்
பருமன்
நம்பகத்தகவு
வினைத்திறன்
“...B.... ஆனது தகவல் முறைமைகளினால் ....C...... ஆக முறைவழியாப்பப்பட்டுள்ளது. (processed).'' பதச் சோடிகளில் எது B,C ஆகியவற்றுக்குப் பொருத்தமானது?
தகவல், தரவு
தரவு , தகவல்
தரவு, அறிவுறுத்தல்கள்
அறிவுறுத்தல்கள், தகவல்
பின்வரும் கணினிச் சாதனங்களைக் கருதுக.
A - விசைப்பலகை (keyboard) B - வருடி (scanner) C - அச்சுப்பொறி D - ஒலிபெருக்கி
மேற்குறித்தவற்றில் எவை கணினியின் உள்ளீட்டுச் சாதனங்களாகப் பயன்படுத்தப்படலாம் ?
A, B ஆகியன
A, C ஆகியன.
C, D ஆகியன.
A, B, C , D ஆகிய எல்லாம்.
பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - தற்போக்குப் பெறுவழி நினைவகம் (RAM) அழிதகு (volatile)நினைவகமாகும். B- வன்வட்டு (hard disk) துணைத் தேக்ககச் சாதனமாகும். C - நெகிழ்வட்டு (floppy disk) இறுவட்டிலும் (CD) பார்க்கக் கூடுதலான தரவுகளைத் தேக்கி வைக்கின்றது.
தேறித்தவற்றில் சரியானது சரியானவை?
A மாத்திரம்.
Cமாத்திரம்.
A, B ஆகியன.
B, C ஆகியன.
உருவிலிருந்து A, B, C ஆசியவற்றை இனங்காண்க
A= வலுக் குதை (sockct), B= PS/2 துறை (port). C= USB துறை
A= வலுக் குதை, B= தொடர்த் துறை, B= PS/2 துறை
A= வலுக் குதை, B= சமாந்தரத் தறை, C= தொடர்த் துறை
A= சமாந்தரத் தறை, B= தொடர்த் துறை, C= USB துறை
நினைவகத்தின் 2GB எதற்குச் சமவலுவானது?
2048 KB.
211 MB.
210MB.
1024 MB.
துவிதம் 110012 இன் எண்மச் (octal) சமவலு
218
318
378
418
பின்வருவனவற்றில் மிகப் பெரியது யாது ?
10011002
10010102
10101012
11000002
ASCII குறிமுறையில் (code) வரியுரு (character) 'C' ஆனது 10000112 என வகைகுறிக்கப்படுமெனின், வரியுரு 'A' இற்குச் சமவலுவான ASCII குறிமுறை யாது?
10000012
10000102
10000002
10001002
ஓர் ஆசிரியர் விசைப்பலகையைப் பயன்படுத்தி வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை 35 எனப் பதிவு செய்கின்றார். இவ்வெண் கணினியின் தற்போக்குப் பெறுவழி நினைவகத்தில் (RAM) துவித வடிவத்தில் வகைகுறிக்கப்படுகின்றது. RAM இல் தேக்கி வைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை
1000102
1001102
1001112
1000112
உரு இல் தரப்பட்டுள்ள தருக்கச் சுற்றின் வருவிளைவு (output) 1 எனின், A, B, ஆகியவற்றின் பெறுமானங்கள் முறையே
0, 1
1, 0
0, 1
1, 1
ஒரு மாணவன் தனது காலை உணவிற்காகப் பருப்புக்கறியுடன் உண்பதற்கு இடியப்பத்தையோ, பாணையோ தெரிந்தெடுக்கலாம். இக்காட்சியைப் பின்வரும் தருக்கச் செய்பணிகளில் (operations) எது சரியாக வகைகுறிக்கின்றது?
AND ஐப் பின்தொடர்ந்து OR
OR ஐப் பின்தொடர்ந்து AND
OR ஐப் பின்தொடர்ந்து OR
AND ஐப் பின்தொடர்ந்து AND
பின்வரும் கொள்பணிகளைக் கருதுக.
A - நச்சுநிரல்களிலிருந்து (viruses) தரவுகளைப் பாதுகாத்தல் B - தேக்ககச் சாதனங்களில் கோப்புகளினதும் அடைவுகளினதும் (உறைகள்) தடத்தை வைத்திருத்தல் C - வட்டு இயக்கிகள் (disk drives), அச்சுப்பொறிகள் போன்ற புறவட்டச் (peripheral) சாதனங்களைக் கட்டுப்படுத்தல் D- வரைவியல் வடிவமைப்புக்கு (graphic design) வசதிகளை ஏற்படுத்தல்
சொல் முறைவழிப்படுத்தல் (word processing) மென்பொருள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - அது வரியுருக்களை வெவ்வேறு பருமன்களிலும் நிறங்களிலும் வடிவமைப்பதை (format) அனுமதிக்கின்றது. B- அது ஓர் ஆவணத்தில் வடிவங்களையும் வரிப்படங்களையும் வரைவதற்கு அனுமதிக்கின்றது. C- அது இலக்க ஒளித்தோற்ற , செவிப்புலக் கோப்புகளைப் பதிப்பிப்பதற்கு (edit digital video and audio files) அனுமதிக்கின்றது.
மேற்குறித்தவற்றில் சரியானது/ சரியானவை
A மாத்திரம்.
A, B ஆகியன.
A, B, C ஆகியன.
மேற்குறித்தவற்றில் எதுவுமன்று.
சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக
A- அது உள்ள ஆவணத்தில் 'Ceylon' என்னும் தனிச்சொல்லின் எல்லா நிகழ்வுகளையும் 'Sri Lanka' என்னும் இரு சொற்களினால் பதிலிடலாம். B - அது ஓர் ஆவணத்தின் வலது ஓரத்தின் வழியே வாசகத்தை நேர்ப்படுத்தலாம் (justify text) C - அது ஓர் ஆவணத்தின் அடியில் பக்க எண்களை மாத்திரம் புகுத்தலாம். மேற்குறித்தவற்றில் சரியானது/ சரியானவை
A மாத்திரம்.
B மாத்திரம்.
A, B ஆகியன.
A, B, C ஆகியன.
பின்வருவனவற்றைக் கருதுக.
A- E$5$ B- $E$5 C- $5ES D - ES5
மேற்குறித்தவற்றில் எவை ஒரு விரிதாளில் (spreadsheet) உள்ள கல (cell) முகவரிகளின் சரியான வடிவம் வடிவங்கள்
B மாத்திரம்.
A, C ஆகியன.
B, D ஆகியன.
மேற்குறித்தவற்றில் எதுவுமன்று.
விரிதாளின் ஒரு நிரையினதும் ஒரு நிரலினதும் இடைவெட்டுக்கு வழங்கும் பெயர்
பணித்தாள் (worksheet)
அடையாள முகப்பு (label)
கலம்
சூத்திரம்
உரு இல் கலம் D2 இல் உள்ள சூத்திரம் = $B$2+C2 ஆக அமைந்தும் அது கலம் D3 யினுள்ளே பிரதி செய்யப் பட்டும் இருப்பின், வருவிளைவு யாது?
9
10
11
12
இலங்கை தொடர்பாக நீர் ஒரு நிகழ்த்துகையைத் (presentation) தயார் செய்கிறீர் எனக் கற்பனை செய்க. நிகழ்த்துகை மென்பொருளைப் பயன்படுத்தி நீர் செய்யும் நிகழ்த்துகையில் பின்வருவனவற்றில் எவற்றை உள்ளடக்கலாம் ?
A- இலங்கையின் படம் B - தேசிய கீதத்தின் செவிப்புலக் கிளிப் (audio clip) C- பயனர்களை www.gov.lk இற்கு வழிப்படுத்தும் மீயிணை (hyperlink)
A, B ஆகியன.
B, C ஆகியன.
A, B, C ஆகியன.
மேற்குறித்தவற்றில் எதுவுமன்று.
ஒரு தரவுத்தளம் (database) பாடசாலை ஒன்றில் உள்ள மாணவர்கள் பற்றிய தரவுகளைக் கொண்டுள்ள ஓர் அட்டவணையை உடையது. அட்டவணையில் ஒரு மாணவன் தொடர்பான தரவு
புலம் (field) ஆகும்.
பதிவு (record) ஆகும்.
படிவம் (form) ஆகும்.
வினவல் (query) ஆகும்.
மாணவர்கள் பற்றிய தரவுகளைத் தேக்கி வைப்பதில் ஒரு தரவுத்தள அட்டவணையில் முதன்மைச் சாவியாகப் (primary key) பின்வருவனவற்றில் எது பயன்படுத்தப்படலாம் ?
பிறந்த திகதி
பெயர் (surname)
வகுப்பு
மாணவர் அனுமதி எண்
தொடர்புத் தரவுத்தளங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தரவுத்தளங்களுக்கிடையே உள்ள சேர்மானம் தொடர்புடைமையாகும். B- தொடர்புத் தரவுத்தளத்தில் உள்ள தொடர்புடைமைகளின் வகைகளில் ஒன்றுக்கொன்றான, ஒன்றுக்குப் பலவான. பலவுக்குப் பலவான என்னும் தொடர்புடைமைகள் அடங்கும். C - ஒரு தொடர்புத் தரவுத்தளம் மடங்கு அட்டவணைகளைக் கொண்டிருக்கலாம்.
மேலுள்ளவற்றில் சரியானது சரியானவை
A மாத்திரம்.
C மாத்திரம்.
B, C ஆகியன.
A, B, C ஆகிய எல்லாம்
பாய்ச்சற் கோட்டுப்படத்தில் சில ஆங்கிலப் பிரயோகங்களுக்கான தமிழ்ப் பதங்கள் Set required temperature (R) to 26 °C - தேவையான வெப்பநிலை (R) 26°C எனக் கொள்க. Set required Read current temperature (C) - நடைமுறை வெப்பநிலை (C) என வாசிக்க. Display 'Cold' - 'குளிர்' என்பதைக் காட்சிப்படுத்துக. Display Hot' - 'வெப்பம்' என்பதைக் காட்சிப்படுத்துக.
முறையே 28 °C, 27 °C, 26°C ஆகியன நடைமுறை வெப்பநிலைகளாகத் தரப்பட்டிருக்குமெனின், பாய்ச்சற் கோட்டுப்படத்தின் வருவிளைவுகள் (outputs) யாவை ?
குளிர், குளிர், குளிர்
வெப்பம், குளிர், குளிர்
வெப்பம், வெப்பம், குளிர்
வெப்பம், வெப்பம், வெப்பம்
பாய்ச்சற் கோட்டுப்படத்தைக் கணினிச் செய்நிரலாக (program) மாற்றுவதற்குப் பின்வரும் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகளில் எவை தேவைப்படும்? A- If-Then construct B - If-Then-Else construct C - For loop D - Do-While loop
A மாத்திரம்.
B மாத்திரம்.
A, C ஆகியன.
A, B, C, D ஆகிய எல்லாம்
தரப்பட்டுள்ள பாய்ச்சற் கோட்டுப்படத்தில் C, R என்னும் மாறிகளுக்குப் பின்வரும் தரவு வகைகளில் எது உகந்தது?
இழை (String)
மெய் (Real)
பூல (Boolean)
நாணயம் (Currency)
ஒரு கணினிச் செய்நிரலில் பயன்படுத்தப்படும் மாறி தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது பிழையானது?
மாறி ஒரு பெயர் அடையாளக்காணியை (identifier) உடையது.
மாறி ஒரு அல்லது பல நினைவக இருப்பிடங்களைக் குறிப்பிடுகின்றது.
மாறி தரவு வகையை உடையது.
மாறியின் பெறுமானம் மாறாமல் இருக்கின்றது.
இடமிருந்து வலமாக எண்கணிதச் செயலிகளின் (arithmetic operators) முன்னிகழ்வின் (precedence) சரியான வரிசையைப் பின்வருவனவற்றில் எது வகைகுறிக்கின்றது?
+, *, =
+, *, -
*, +, /
*, /, +
பின்வரும் போலிக் குறிமுறையைக் (pseudo code) கருதுக, பின்வருவனவற்றில் எது மேற்குறித்த போலிக் குறிமுறையின் ஓர் இயல்தகு வருவிளைவாகும் ?
4, 12, 3
5, 2, 10
5, 10, 2
4, 8, 2
முறைமை அபிவிருத்தி ஆயுள் வட்டத்தைப் (System Development Life Cycle - SDLC) பயன்படுத்தி ஒரு தகவல் முறைமையை (information system) விருத்தி செய்யும் போது பின்வருவனவற்றில் எது இடமிருந்து வலமாகச் செயற்பாடுகளின் (activities) சரியான தொடரியாகும் (sequence)?
சாத்தியக்கூற்றுக் கற்கை (feasibility study) முறைமை வடிவமைப்பு (system design) - முறைமைப் பகுப்பாய்வு(system analysis) - முறைமையை நடைமுறைப்படுத்தல் (system implementation)
முறைமைப் பகுப்பாய்வு - முறைமையை நடைமுறைப்படுத்தல் – முறைமை வடிவமைப்பு - சாத்தியக்கூற்றுக் கற்கை
சாத்தியக்கூற்றுக் கற்கை முறைமை வடிவமைப்பு - முறைமையை நடைமுறைப்படுத்தல் - முறைமைப் பகுப்பாய்வு
சாத்தியக்கூற்றுக் கற்கை முறைமைப் பகுப்பாய்வு முறைமை வடிவமைப்பு - முறைமையை நடைமுறைப்படுத்தல்
கணினிப்படுத்தலுக்குப் (computerization) பின்வருவனவற்றில் எது உகந்ததன்று?
ஒரு பாடசாலையில் மாணவர் அனுமதிகள்
பாடசாலை நூலகம்
ஒரு பரீட்சையில் கட்டுரை வகை விடைகளுக்குப் புள்ளி வழங்குதல்
விடைத்தாள்களுக்குப் புள்ளிகளை வழங்கிய பின்னர் மாணவர் சராசரிகளையும் தரங்களையும் கணினிப்படுத்தல்
பின்வரும் செயற்பாடுகளைக் கருதுக.
A- நூலகத்திற்குப் பொறுப்பான ஆசிரியரைப் பேட்டி காணல் B- நூலகத்தின் வரலாற்றையும் அது 20 ஆண்டுகளுக்கு முன்னர் தாபிக்கப்பட்ட விதத்தையும் விவரிக்கும் ஒரு சஞ்சிகைக் கட்டுரை (ஆவணம்) C- நூலகம் மாணவர்களினால் எங்ஙனம் பயன்படுத்தப்படுகின்றது என்பதை அவதானித்தல்
ஒரு பாடசாலைக்கான நூலக முகாமை முறைமையை விருத்தி செய்வதில் உள்ள தேவைகளைச் சேகரிப்பதற்கு மேலுள்ளவற்றில் எதனை/ எவற்றைப் பயன்படுத்தலாம்?
A மாத்திரம்.
C மாத்திரம்.
A, C ஆகியன மாத்திரம்.
A, B, C ஆகிய எல்லாம்.
இணையம், உலகளாவிய வலை (WWW) என்பன தொடர்பான மிகப் பொருத்தமான கூற்றை இனங்காண்க.
இணையம் WWW வின் ஒரு சேவையாகும்.
இணையத்திற்கும் WWW விற்குமிடையே தொடர்பு எதுவுமில்லை.
இணையமும் WWW வும் ஒரே மாதிரியானவை.
WWW இணையத்தின் ஒரு சேவையாகும்.
உரையாடுதல் (chatting), ஒளித்தோற்ற உரையாடல் (video chatting), ஒளித்தோற்ற மாநாடு (video conferencing) ஆகியவற்றுக்கு ஓர் அமர்வைத் தாபிக்கும்போது பின்வருவனவற்றில் எது அத்தியாவசியமாகும் ?
பிறழ்பொருள் (malware) பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
A - முதல் பார்வையில் Trojan Horses பயன்படும் மென்பொருளாகத் தோற்றுகின்ற போதிலும் ஒரு தடவை நிறுவப்பட்டதும் அல்லது கணினியில் ஓடவிடப்பட்டதும் உண்மையாகச் சேதத்தை ஏற்படுத்தும். B - ஒரு புழு (worm) வலையமைப்பின் மீது தானாகப் பெருகி மனிதச் செயற்பாடு எதுவுமின்றிச் செல்லும் ஆற்றலை உடையது. C - ஒரு கணினி நச்சுநிரல் (virus) ஒரு செய்நிரலுடன் அல்லது கோப்புடன் தானாக இணைந்து ஒரு கணினியிலிருந்து வேறொரு கணினிக்குப் பரந்து சென்று, செல்லும்போது தொற்றுகளை விட்டு விடும்.
மேற்குறித்தவற்றில் சரியானது/ சரியானவை?
A மாத்திரம்.
B மாத்திரம்.
A, B ஆகியன மாத்திரம்.
A, B, C ஆகிய எல்லாம்.
பின்வருவனவற்றைக் கருதுக.
A - உத்தரவுச்சீட்டின்றி வர்த்தக மென்பொருளைப் பயன்படுத்துபவர். B- வேறொருவரின் உடன்பதி (login) விவரங்களைப் பயன்படுத்துபவர் C - வாடிக்கையாளர் பற்றிய தகவலை வாடிக்கையாளரின் சம்மதமின்றி ஏனையோருக்கு வெளிப்படுத்துபவர். D - நச்சுநிரல்களை உருவாக்கி ஏனையோரின் கணினிகளுக்குப் பரப்புபவர்.